1 4 லட்சம் ரயில்வே பணியாளர் போட்டித் தேர்வுக்கான அனுமதி இ-கார்டுகள் வெளியீடு.
வரும் 15ம் தேதி முதல் நடக்க உள்ள ரயில்வே பணியாளர் போட்டித் தேர்வுக்கான அனுமதி இ-கார்டுகள், ரயில்வே பணியாளர் தேர்வு வாரியத்தின் இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ரயில்வே துறையில் காலியாக இருக்கும் 1.4 லட்சம் பணியிடங்களை நிரப்புவதற்கான போட்டித் தேர்வுக்கான அழைப்பு, இந்தாண்டு ஆரம்பத்தில் வெளியிடப்பட்டது. இதற்கு 2.44 லட்சம் பேர் இதற்காக விண்ணப்பித்து உள்ளனர். ஆனால், கொரோனா நோய் தொற்றினால் பிறப்பிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக தேர்வுகள் நடத்தப்படாமல் இருந்தது. இந்நிலையில், வரும் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை முதல் கட்ட தேர்வு நடத்தப்படுகிறது.
முதல் கட்ட தேர்வு டிசம்பர் 15ம் தேதி முதல் 18ம் தேதி வரை
நடைபெறும்.
2 வது கட்ட தேர்வு டிசம்பர் 28ம் தேதி முதல் மார்ச் 2021 வரையிலும், 3 வது கட்ட தேர்வு 2021ம் ஆண்டு ஜூன் இறுதியில் நடைபெறும்.
தேர்வு எழுதுபவர்கள் தேர்வு எழுதுவதற்கான
உடற்தகுதி இருக்கிறது என்றும், கொரோனா பாசிட்டிவ்
இல்லை என்றும் உறுதி பத்திரத்தை வழங்க வேண்டும்.
தேர்வு மையத்தில் நடத்தப்படும் வெப்ப பரிசோதனையில் அதிக வெப்பம் இருந்தால், அவர்களின் தேர்வு தேதி மாற்றி அமைக்கப்படும்.
தேர்வர்களுக்காக சிறப்பு ரயில்கள்
இயக்கப்படும்,
இந்நிலையில், இத்தேர்வுக்கான அனுமதி இ-கார்டுகளை தனது இணையதள முகவரியில் ரயில்வே பணியாளர் தேர்வு வாரியம் நேற்று வெளியிட்டது. இதை விண்ணப்பதாரர்கள் தங்களின் விண்ணப்ப பதிவு எண்களையும், பிறந்த தேதியையும் பதிவு செய்து, பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று அது அறிவித்துள்ளது.
RRB WEBSITE LINK CLICK HERE
RRB 2020 HALL TICKET CLICK HERE
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM