Indian History Important Quizzes for Students for TNPSC GROUP I, TNPSC GROUP II & TNPSC GROU II A, TNPSC GROUP IV, TNPSC GROUP VII, VAO, RRB, TNEB, SSC, FOREST EXAM, AO, AGRI, LABOR LAW & Banking Exams. Expect 10 to 15 questions for competitive exams from the history questions posted here. So be sure to read the questions posted on the Salem Coaching Center website. Salem Coaching Center Websites Links Given Below.
குஷாணர்கள்
1. அஸ்வகோஷர் ‘புத்த சரிதம்’ என்னும்
முதல் சமஸ்கிருத நாடகத்தின் போற்றப்படும் ஆசிரியர் ஆவார்.
2. கலிங்க அரசர் காரவேலர் சுங்க அரசர்களின் சமகாலத்தவர் ஆவார். காரவேலர் பற்றிய செய்திகளை நாம் ஹதிகும்பா கல்வெட்டிலிருந்து பெறுகிறோம்.
3. மௌரியப் பேரரசு சிதறுண்டதன் விளைவாக வடமேற்கிலிருந்து சாகர்கள்,சைத்தியர்கள், பார்த்தியர்கள், இந்தோ- கிரேக்கர்கள், குஷாணர்கள் ஆகியோர் இந்தியாவின் மீது படையெடுத்தனர்.
4. கடைசி மௌரியப் பேரரசர் பிருகத்ரதர் அவருடைய படைத் தளபதி புஷ்யமித்ர சுங்கரால் கொல்லப்பட்டார். மகதத்தில் புஷ்யமித்ர சுங்கர் சுங்க அரசவம்சத்தை நிறுவினார்.
5. கன்வர்களின் வீழ்ச்சிக்குப் பின்னர் குப்த அரச வம்சத்தின் எழுச்சிவரை மகதத்தின் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த நிகழ்வுகள் இடம்பெ றவில்லை.
6. வட இந்தியாவில் குஷாணர்கள் 300 ஆண்டுகள் ஆட்சி புரிந்தனர். தெற்கே சாதவாகனர்கள் (ஆந்திரர்) 450 ஆண்டுகள் ஆட்சி செய்தனர்.
7. சாகர்
வம்ச அரசர்களில் தலை
சிறந்தவர் ருத்ரதாமன் ஆவார்.
8. குஷாணர்களில் நன்கறியப்பட்டவர் கனிஷ்கர் . இவர் மகாயான பௌத்தத்தைத் தீவிரமாகப் பின்பற்றினார். இவருடைய காலத்தில் காந்தாரக் கலை வளர்ச்சி பெற்றது.
9. குஷாணப் பேரரசு ஜுலியஸ் சீசர் வாழ்ந்த ரோமனியக் குடியரசின் இறுதி நாட்களின் சமகாலத்தியதாகும்.
10. குஷாணப் பேரரசர் அகஸ்டஸ் சீசரின் அவைக்கு ஒரு பெரும் தூதுக் குழுவை அனுப்பியதாகக் கூறப்படுகிறது.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM