பொது அறிவு : பொது அறிவியல் வினா விடைகள்
1. பூச்சிகளில் ______________ சமச்சீர் அமைப்பு காணப்படுகிறது.
இருபக்க சமச்சீர்
2. ஜூலை 2017 ல் தமிழகத்தில் எந்தப் பகுதியில், நன்னீரில் வாழக்கூடிய புதிய வகை ஜெல்லி மீன் கண்டறியப்பட்டுள்ளது?
கொடைக்கானல்
3. பரிணாமத் தொடர்புகளை கிளாடோகிராம் என்னும் மர வரைபடத்தின் மூலம் விளக்குவதை அறிமுகப்படுத்தியவர் யார்?
எர்னஸ்ட் ஹெக்கல்
4. எந்த அறிவியல் அறிஞர் தன்னுடைய நூலான விலங்குகளின் வரலாறு என்னும் நூலில் விலங்குகளை வகைபடுத்தியுள்ளார்?
அரிஸ்டாட்டில்
5. பாரம்பரிய வகைப்பாட்டியலின் தந்தை என்று அழைக்கப்படுபவர் யார்?
அரிஸ்டாட்டில்
6. குழல் அமைப்புடைய பாசி வகை எது?
வவுச்சீரியா
7. ஒரு செல் அமைப்புடைய நகரும் தன்மையற்ற பாசி வகை எது?
குளோரெல்லா
8. லைக்கன்களில் இருந்து பெறப்படும் ________ அமிலம் உயிர் எதிர்ப்பொருள் தன்மையைப் பெற்றுள்ளது.
அஸ்னிக் அமிலம்
9. தோலில் நோய்த்தொற்றை ஏற்படுத்தக்கூடிய பூஞ்சை எது?
டெர்மோபைட்கள்
10. நெல்லில் கருகல் நோயை ஏற்படுத்தும் பூஞ்சை எது?
மாக்னபோர்தே கிரைசியே
11. புற்றுநோயைத் தூண்டும் 'அப்ளாடாக்சின்' நச்சுப்பொருளை உண்டாக்குவது
அஸ்பெர்ஜில்லஸ்
பிளாவஸ்
12. கோஜிக் அமிலம் தயாரிக்க பயன்படுத்தப்படும் பூஞ்சை எது?
ஆஸ்பெர்ஜில்லஸ் ஒரைசே
13. E.J.பட்லர் எந்த ஆண்டு இந்திய தாவர நோய்களைத் தொகுத்து 'பூஞ்சை மற்றும் தாவர நோய்கள்" என்ற பெயரில் புத்தகத்தை வெளியிட்டார்?
1918
14. எந்த மாநிலத்தில் உள்ள பூசா என்ற இடத்தில், E.J.பட்லர் இம்பீரியல் வேளாண்மை ஆராய்ச்சி நிறுவனத்தை நிறுவினார்?
பீகார்
15. தாவரங்களில் நுனிகழலை நோய் _________ என்ற பாக்டீரியாவால் ஏற்படுகிறது.
அக்ரோபாக்டீரியம் டுமிபேசியன்ஸ்
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM