மத்திய அரசு துறையில் 4,726 காலிப்பணியிடங்கள் - 12 ஆம் வகுப்பு தேர்ச்சி
மத்திய அரசாங்கம் பல துறைகளிலும் 4,726 காலிப்பணியிடங்களுக்கான அறிவிப்பையும் மற்றும் ஊதிய விவரத்தையும் வெளியிட்டுள்ளது. இது குறித்து விவரங்களை இந்த பதிவில் காண்போம்.
மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையம்:
SSC எனப்படும் மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் மத்திய அரசில் உள்ள காலிப்பணியிடங்களுக்கான ஆட்களை தேர்வு செய்கிறது. அதன்படி மத்திய அரசில் தற்போதைய காலியிடங்கள் உள்ள டேட்டா என்ட்ரி ஆப்பரேட்டர், போஸ்ட் மேன், எழுத்தர் போன்ற பணிகளுக்கான அறிவிப்பை வெளியிட்டு உள்ளது. இதற்கான விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
காலியிடங்கள் எண்ணிக்கை:
எல்.டி.சி / ஜே.எஸ்.ஏ -1,538
பி ஏ / எஸ் ஏ - 3,3181
டி. ஈ .ஓ - 7
ஆகிய காலி இடங்களுக்கு விண்ணப்பங்கள் பெறப்படுகின்றன.
கல்வித்தகுதி:
மேற்கண்ட பணிகளுக்கு விண்ணப்பிக்கும்
நபர்கள் பனிரெண்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்று , அந்தந்த துறைகளில் அனுபவம் உள்ளவர்கள் அல்லது கல்வி நிறுவனத்தில்
தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். இவர்களுக்கு
முன்னுரிமை வழங்கப்படும்.
வயது வரம்பு:
இந்த பணியிடங்களுக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் 18 வயது 27 வயதுக்குள் இருக்க வேண்டும். சில குறிப்பிட்ட பிரிவினருக்கு மட்டும் வயது வரம்பில் தளர்ச்சி அளித்துள்ளனர்.
காலி இடங்களுக்கான ஊதியம்:
மத்திய அரசு வெளியிட்டு உள்ள காலிப்பணி இடங்களுக்கான ஊதிய விவரம் பின்வருமாறு:
எல்.டி.சி / ஜே.எஸ்.ஏ - ரூ 19,900 முதல் ரூ 63,200
பி ஏ / எஸ் ஏ - ரூ.25,500 முதல் ரூ.81,100
டி. ஈ .ஓ - ரூ.29,200 முதல் ரூ.93,300
விண்ணப்பிக்கும் தேதி:
மேற்கண்ட பணி இடங்களுக்கு விண்ணப்பிக்கும் விரும்பும் விண்ணப்பதாரர்கள் ஆன்லைன் வழியாக https://ssc.nic.in/ என்ற இணையதளம் மூலம் வரும் டிசம்பர் 21, 2020ம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். முக்கியமாக விண்ணப்பத்தில் கேட்டிருக்கும் சான்றுகள் அனைத்தையும் சரியாக பதிவேற்ற வேண்டும்.
தேர்ந்து எடுக்கும் முறை:
SSC யின் 2020
க்கான தேர்வு வரும் ஏப்ரல் மாதம் 12 முதல் 27
வரை இரண்டு கட்டங்களாக ஆன்லைன்
முறையில் நடைபெறுகிறது. முதல் கட்டத்தில் தேர்வானவர்கள் இரண்டாம் கட்டத்தில்
தேர்விற்கு அழைக்கப்படுவார்கள்.
அதிகாரபூர்வ தளம்:
மேற்கண்ட பணி இடங்களுக்கு விண்ணப்பிக்க விரும்பும் நபர்கள் மத்திய அரசின் அதிகாரபூர்வமான https://ssc.nic.in என்ற தளத்தில் முழுமையான விவரங்களை தெரிந்து கொள்ளலாம்.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM