அரசு பள்ளிகளில் 10000 ஆசிரியர்கள் தேவை - தமிழக அரசிற்கு கோரிக்கை.
கொரோனா ஊரடங்கு காரணமாக பலர் வாழ்வாதாரத்தை இழந்துள்ள நிலையில் மக்கள் அரசு
பள்ளிகளை நோக்கி படையெடுக்கின்றனர். இந்நிலையில் அரசு பள்ளிகளில் உள்ள 10000 காலி பணியிடங்களை நிரப்ப அரசு சார்பில் பேச்சுவார்த்தை நடைபெறுவதாக மாவட்ட
கல்வி அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.
காலிப்பணியிடங்களை
நிரப்ப நடவடிக்கை:
இந்த கல்வியாண்டு தொடங்கி 6 மாத காலம் முடிவடைந்த நிலையில் தமிழகத்தில்
பள்ளிகள் திறக்கப்படாத நிலை நிலவி வருகிறது. தமிழக மக்களின் பொருளாதாரம் வீழ்ச்சி
அடைந்துள்ள காரணத்தால் தனியார் பள்ளிகளில் நிர்ணயித்துள்ள கட்டணத்தைச்செலுத்த
முடியாமல் தங்கள் குழந்தைகளை அரசு பள்ளிகளில் சேர்க்க மக்கள் முன்வந்துள்ளனர்.
மேலும் திறக்காத பள்ளிகளில் பள்ளி கட்டணம் செலுத்தினால் மட்டுமே அடுத்த ஆண்டு
தேர்ச்சி என பல்வேறு காரணங்களால் மக்கள் அரசு பள்ளிகளை தேர்வு செய்துள்ளனர்.
ஆனதால் இந்த ஆண்டு அரசு பள்ளிகளில் சேர்ப்பு எண்ணிக்கை 15 லட்சத்திற்கு மேல் அதிகரித்துள்ளது.
இந்நிலையில் ஒரு
ஆசிரியருக்கு 30 மாணவர்கள், நடுநிலைப் பள்ளிகளில் 35 பேர், உயர்நிலை மற்றும் மேல்நிலைப்
பள்ளிகளில் 40 பேர்
என்ற அளவில் ஆசிரியர்கள் நிணயிக்கப்பட்டால் மாநிலத்தில் மொத்தம் 10000 காலியிடங்கள் நிரப்ப ஆசிரியர்கள்
தேவைப்படுவார்கள் என பள்ளிக்கல்வித்துறை மூத்த அதிகாரி ஒருவர் குறிப்பிட்டார்.
இது
குறித்து அவர் கூறுகையில்,” தொற்றுநோயால்
விதிக்கப்பட்ட ஊரடங்கு காரணமாக பலருக்கு கடுமையான நிதி பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது.
அரசு பள்ளிகளில் கட்டணம் குறைவாக உள்ளதாலும், கல்வித்
தரமும் அதிகரித்து வருவதாலும், பெற்றோர்கள்
தங்கள் குழந்தைகளை அரசு நடத்தும் பள்ளிகளில் சேர்க்கத் துவங்கியுள்ளனர்.
மாணவர்
எண்ணிக்கை திடீரென அதிகரித்துள்ளதால், அரசு
பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் மாணவர்-ஆசிரியர் விகிதத்தில்
சமாளிக்க கடினம். இப்போது இந்த விகிதம் தொடக்கப் பள்ளிகளில் 21.80 ஆகவும், மேல்தொடக்கப் பள்ளிகளில் 24.45 ஆகவும், மேல்நிலைப் பள்ளிகளில் 20.10 மற்றும் உயர்நிலைப் பள்ளிகளில் 24.50 ஆகவும் ஆக உள்ளது. புதிதாக
சேர்க்கப்பட்ட மாணவர்களின் எண்ணிக்கை நான்கு லட்சத்திற்கும் அதிகமாகிவிட்டதால், மாணவர்-ஆசிரியர் விகிதம் மாறும்.
அதன்படி, விகிதத்தை
சமாளிக்க புதிய ஆசிரியர்களை நியமிக்க வேண்டும்”. என்று அந்த அதிகாரி தெரிவித்தார்.
இந்த
கணக்கீட்டின்படி, இந்த
இடங்களை நிரப்ப 10,000 க்கும்
மேற்பட்ட ஆசிரியர்கள் தேவை. புதிய சேர்க்கை நடந்துள்ள பள்ளிகளிலிருந்து சரியான
தகவல்கள் வந்தவுடன், ஆசிரியர்
ஆட்சேர்ப்பு வாரியம் (TRB) மூலம்
காலியிடங்கள் நிரப்பப்படும், என்று
அவர் கூறினார்.
ஆசிரியர்கள்
மட்டுமில்லாமல், அரசு
பள்ளிகளில் கட்டமைப்புகளிலும் மாற்றங்கள் தேவை 2002-ம் ஆண்டில் மத்திய அரசின் அனைவருக்கும்
கல்வி இயக்கம் தொடங்கப்பட்டு அதன் விளைவாக அரசுப் பள்ளிகளின் உட்கட்டமைப்பு
வசதிகள் ஓரளவு பூர்த்தி செய்யப்பட்டுள்ளன.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM