இந்திய தேசிய இயக்கம் தொடர்பான வினா விடைகள்

இந்திய தேசிய இயக்கம் தொடர்பான வினா விடைகள் 

1. எந்த ஆண்டு கிரிப்ஸ் தூதுக்குழு இந்தியாவிற்கு வந்தது? 

1942


2. சுபாஷ் சந்திரபோஸ் எந்த ஆண்டு இந்திய தேசிய காங்கிரசின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்? 

1938


3. 1939-ல் முற்போக்கு கட்சியை தொடங்கியவர் யார்? 

சுபாஷ் சந்திரபோஸ்


4. இந்திய தேசிய இராணுவத்தின் பெண்கள் பிரிவு லட்சுமி என்ற பெண்ணின் தலைமையில் --------------- என்ற பெயரில் அமைக்கப்பட்டது. 

ஜான்சி ராணி


5. எந்த ஆண்டு பெதிக் லாரன்ஸ், ஏ.வி.அலெக்சாண்டர் மற்றும் சர்.ஸ்டாபோர்டு கிரிப்ஸ் ஆகிய மூவர் அடங்கிய குழு இந்தியாவிற்கு வந்தது. 

1946


6. ஜவஹர்லால் நேருவைப் பிரதமராகக் கொண்ட இடைக்கால அரசு எந்த ஆண்டு நிறுவப்பட்டது? 

1946


7. எந்த ஆண்டு மவுண்ட்பேட்டன் ஆங்கில அரசப் பிரதிநிதியாக பதவியேற்றார்? 

1947


8. ஆங்கிலேய அரசின் கடைசி அரசப் பிரதிநிதியாகப் பதவி வகித்தவர் யார்? 

மவுண்ட்பேட்டன் பிரபு


9. மவுண்ட்பேட்டன் திட்டம் அல்லது ஜூன் 3 ஆம் நாள் திட்டம் எப்போது வெளியிடப்பட்டது? 

1947, ஜூன் 3


10. மவுண்ட்பேட்டன் திட்டத்தின் அடிப்படையில் ---------------- அரசு 1947 ஆம் ஆண்டு ஜூலை மாதம் இந்திய விடுதலைச் சட்டத்தினை நிறைவேற்றியது. 

இங்கிலாந்து 


11. கி.பி.1857 ஆம் ஆண்டு நடைபெற்ற மாபெரும் புரட்சியை ஆங்கிலேய வரலாற்று அறிஞர்கள் எவ்வாறு கருதுகின்றனர்? 

சிப்பாய் கலகம்

Post a Comment

0 Comments