2013 ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழ் காலம் நீட்டிப்பு செய்ய மத்திய அரசுக்கு கடிதம்.

 


2013 ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழ் காலம் நீட்டிப்பு செய்ய மத்திய அரசுக்கு கடிதம்.

ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழ் காலத்தை நீட்டிப்பு செய்ய மத்திய அரசுக்கு கடிதம் எழுத தமிழக அரசு பரிசீலித்து வருகிறது என தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

தர்மபுரி கிருஷ்ணகிரி மாவட்டங்களில் உள்ள 112 மெட்ரிக் பள்ளிகளுக்கு தொடர் அங்கீகார ஆணை வழங்கும் நிகழ்ச்சி மாவட்ட கலெக்டர் மலர்விழி தலைமையில் தர்மபுரியில் நேற்று நடந்தது.

இதில் அமைச்சர் செங்கோட்டையன் மற்றும் அன்பழகன் ஆகியோர் அங்கீகார ஆணையை வழங்கினர்.

தொடர்ந்து அமைச்சர் செங்கோட்டையன் நிருபர்களிடம் கூறியதாவது.

தமிழகத்தில் மட்டும் தான் தொலைக்காட்சி வழியாக தங்குதடையின்றி கல்வி கற்பிக்கப்படுகிறது அதேபோல் உதவி எண் 14417 மூலம் மாணவர்களின் சந்தேகங்களை நிவர்த்தி செய்யப்படுகிறது.

தமிழகத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வுச் சான்றிதழ் காலம் 7 ஆண்டுகள் என்பது மத்திய அரசின் முடிவு. அதன் கால நீட்டிப்பை நீட்டிக்க மத்திய அரசின் அனுமதியை பெற வேண்டும். மேலும் 2013 இல் TET தேர்வு எழுதி தேர்ச்சி பெற்றவர்களுக்கு ஏழு ஆண்டுகள் முடிந்து விட்டன இதற்குமேல் அவகாசம் பெற மத்திய அரசுக்கு கடிதம் எழுத தமிழக அரசு பரிசீலித்து வருகிறது என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

Post a Comment

0 Comments