TRB, TET, TNPSC & TNEB : 6 ஆம் வகுப்பு தமிழ்

 


6  ஆம் வகுப்பு தமிழ்


1) பஞ்சபாண்டவர் ரதங்கள் யார் காலத்தில் உருவாக்கப்பட்டது


நரசிம்மவர்மன்


2) நரசிம்மவர்மன் எந்த நூற்றாண்டை சேர்ந்த மன்னன்?


ஏழாம் நூற்றாண்டு


3) சிற்பக்கலை எத்தனை வகைப்படும் ?


நான்கு


4) திராவிட நாட்டின் வானம்பாடி என்று பாராட்டப் பெற்றவர்யார்


முடியரசன்


5) நெய்தல் திணையின் பூ எது?


தாழம்பூ


6) விடி வெள்ளி நம் விளக்கு விரி கடலே பள்ளிக் கூடம் எனத் தொடங்கும் நாட்டுப்புறப் பாடல் எந்த நூலில் இடம் பெற்றுள்ளது?

 

சு. சக்திவேல் தொகுத்த நாட்டுப்புற இயல் ஆய்வு


7) பொருள்களை வண்டியில் ஏற்றி வெளியூருக்கு செல்லும் வணிகக் குழுவை எவ்வாறு அழைப்பர்?

 

வணிகச் சாத்து

 

8) தந்நாடு விளைந்த வெண்ணெல் தந்து பிற நாட்டு உப்பின்" என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

 

நற்றிணை

 

9) பாலொடு வந்து கூழொடு பெயரும் என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

 

குறுந்தொகை

 

10) பொன்னொடு வந்து கறியொடு பெயரும் என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?

 

அகநானூறு

 

11) சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட பொருட்கள் என்னென்ன?

 

1.   கண்ணாடி

2.   கற்பூரம்

3.   பட்டு

 

12) நடு நின்ற நன்னெஞ்சினோர் என்று வணிகர்களை பாராட்டும் நூல் எது?

 

பட்டினப்பாலை

 

13) கொள்வதும் மிகை கொளாது கொடுப்பதும் குறைபடாது என்று குறிப்பிடும் நூல் எது?      

 

பட்டினப்பாலை

 

14) பாடுபட்டுத் தேடியப் பணத்தைப் புதைத்து வைக்காதீர் என்பது யாருடைய அறிவுரை?


அவ்வையார்


15) அண்மை சுட்டெழுத்து எது?



16) சேய்மை சுட்டெழுத்து எது?



17) நானிலம் படைத்தவன் பாடலை எழுதியவர் யார்?


முடியரசன்


18) தாராபாரதியின் இயற்பெயர் என்ன?


ராதா கிருஷ்ணன்


19) தாராபாரதிக்கு வழங்கப்பட்ட பட்டப் பெயர் என்ன?


கவிஞாயிறு


20) தேசம் உடுத்திய நூலாடை என்று தாராபாரதி குறிப்பிடும் நூல்

எது ?


திருக்குறள்



Post a Comment

0 Comments