இந்திய விடுதலை இயக்கம் முதல் நிலை
1. கி.பி.1857 ஆம் ஆண்டு புரட்சி, விடுதலைக்கு வழி வகுத்தது.
2. முதல் நிலை காந்திக்கு முந்தைய காலம் கி.பி. 1885 - கி.பி. 1919
3. இந்திய தேசிய காங்கிரஸ் தோற்றம் 1885 ஆம் ஆண்டு
4. இந்திய தேசிய காங்கிரஸைத் தோற்றுவித்தவர் - ஆலன் ஆக்டேவியன் ஹியூம்
5. காங்கிரஸின் முதல் கூட்டம் நடைபெற்ற இடம் - மும்பை
6. இக்கூட்டத்தின் தலைவர் - டபிள்யூ.சி.பானர்ஜி
(W.C.Banarjee)
7. இம்மாநாட்டில் கலந்துகொண்டவர்கள் - தாதாபாய்
நௌரோஜி, சுரேந்திரநாத் பானர்ஜி, மதன் மோகன் மாளவியா, எம்.ஜி.ரானடே, கோபாலகிருஷ்ண கோகலே, பெரோஷா மேத்தா, ஜி. சுப்ரமணிய அய்யர் ஆவர்.
8. மிதவாதிகள் - காங்கிரஸ் தலைவர்களாக விளங்கியவர்கள் - சுரேந்திரநாத் பானர்ஜி, தாதாபாய் நௌரோஜி, பெரோஷா மேத்தா, கோபால கிருஷ்ண கோகலே, எம்.ஜி. ரானடே.
9. மிதவாதிகளின் கோரிக்கை - ‘அரசியல் பிச்சை போல் உள்ளது’ என்று அழைக்கப்பட்டடது
10. தீவிரவாதிகள் - பாலகங்காதர திலகர்
(பால்), லாலாலதிபதிராய் (லால்) பிபின்
சந்திர (பால்), அரவிந்த கோஷ்
11. “சுதந்திரம் எனது பிறப்புரிமை அதை அடைந்தே
தீருவேன்” என்றவர் திலகர்.
12. இவரது பத்திரிகை - கேசரி
13. கி.பி.1905 ல் வங்கப் பிரிவினையை மேற்கொண்டவர் - கர்சன்
பிரபு
14. வங்காளம் மீண்டும் இணைக்கப்பட்ட ஆண்டு கி.பி.1911
15. வங்கப் பிரிவினை பொருளாதாரப் புறக்கணிப்பு என்னும் சுதேசி இயக்கம் தோன்றக் காரணமாயிற்று.
16. சுதேசி என்றால் ‘சொந்த நாடு’ என்று பொருள்
17. ‘வந்தே மாதரம்’ என்ற முழக்கத்தை எழுப்பியவர் - பக்கிம் சந்திர சட்டர்ஜி
18. கி.பி.1906 ல் டாக்கா நகரைச் சேர்ந்த நவாப் சலிமுல்லாகான் என்பவரது தலைமையில் முஸ்லீம் லீக் கட்சி தோற்றுவிக்கப்பட்டது.
19. கி.பி.1907 ல் சூரத் மாநாட்டில் மிதவாதிகளுக்கும், தீவிரவாதிகளுக்கும் இடையே காங்கிரஸ் தலைவரைத்
தேர்ந்தெடுப்பதில் மோதல் ஏற்பட்டது. இதனால் காங்கிரஸ் இரண்டாகப்
பிரிந்தது.
20. முஸ்லீம்களைத் திருப்திபடுத்தக் கொண்டுவரப்பட்ட சட்டம் மிண்டோ மார்லி 1909 சீர்திருத்தச் சட்டம்
21. கி.பி. 1916 ல் தன்னாட்சிக் கழகத்தை மும்பையில் நிறுவியர் - திலகர்
22. சென்னையில் தன்னாட்சிக் கழகத்தின் கிளையினைத் தொடங்கியவர் - அன்னி பெசன்ட் அம்மையார்
23. அம்மையார் நடத்திய பத்திரிகை - நியூ
இந்தியா
24. இந்தியாவின் எதிர்கால அரசியல் பற்றியது - ஆகஸ்ட் அறிக்கை
25. ஆகஸ்ட் அறிக்கை வெளியிடப்பட்ட ஆண்டு கி.பி. 1917
26. மாண்டேகு - செம்ஸ்போர்டு சீர்திருத்தம் இயற்றப்பட்ட ஆண்டு கி.பி.1919
27. ஆங்கிலேயர் கி.பி.1919 ல் கொண்டு வந்த சட்டம் - ரௌலட் சட்டம்
28. ரௌலட் சட்டம் மூலம் கி.பி.1919 ஏப்ரல் 6 ஆம் தேதி நாடு முழுவதும் கடையடைப்பு
ஏற்பட்டது
29. கி.பி. 1919 ஏப்ரல் 13 ல் பஞ்சாபில் கைது செய்யப்பட்டவர்கள் - டாக்டர் சத்தியபால் மற்றும் டாக்டர் சாய்ப்புதீன் கிச்லு
30. டாக்டர் சத்யபால் மற்றும் டாக்டர் சாய்ப்புதீன்
கிச்லு கைது செய்யப்பட்டதை
எதிர்த்து பத்தாயிரம் மக்கள் அமிர்தசரஸில் உள்ள ஜாலியன் வாலா பாக்கில் கூடியிருந்தனர். அப்போது ராணுவத் தளபதியான ஜெனரல் டயர் எந்த முன்னறிவிப்புமின்றிப் பொதுமக்களைச் சுட
ஆணையிட்டார்.
31. இப்படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவித்தவர் - ‘இரவீந்திரநாத் தாகூர்’ “நைட்வுட்”(KNIGHT HOOD ) பட்டத்தைத் துறந்தார்
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM