6 ஆம் வகுப்பு தமிழ்

 


6 ஆம் வகுப்பு தமிழ்

 

1) மூதுரை என்னும் நூலில் எத்தனை பாடல்கள் இடம் பெற்றுள்ளன?


31


2) ஏட்டில் படித்ததோடு இருந்துவிடாதே நீ ஏன்படித்தோம் என்பதையும் மறந்து விடாதே என்ற பாடலை எழுதியவர் யார்?


பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம்


3) நடுவண் அரசு பெருந்தலைவர் காமராஜருக்கு எந்த வருடம் பாரத ரத்னா விருது வழங்கியது?


1976


4) கன்னியாகுமரியில் காமராசருக்கு மணிமண்டபம் எந்த வருடம் அமைக்கப்பட்டது?


அக்டோபர் 2, 2000


5) காமராஜரை கல்விக்கண் திறந்தவர் என்று மனதார பாராட்டியவர் யார் ?


தந்தை பெரியார்


6) ஆசிய கண்டத்திலேயே இரண்டாவது பெரிய நூலகம் எது?


அண்ணா நூற்றாண்டு நூலகம்


7) ஆசியக்கண்டத்திலேயே மிகப் பெரிய நூலகம் எங்கு உள்ளது?


சீனா


8) இந்திய நூலக அறிவியலின் தந்தை என்றழைக்கப்படுபவர் யார் ?


அரங்கநாதன்


9) சிறந்த நூலகர்களுக்கு என்ன விருது வழங்கப்படுகிறது


டாக்டர் அரங்கநாதன் விருது


10) அண்ணா நூற்றாண்டு நூலகத்தில் எத்தனை தளங்கள் உள்ளன?


எட்டு தளங்கள்

 


11) தமிழ் எழுத்துகளில் எதற்கு மட்டும் இன எழுத்து இல்லை?


ஆயுத எழுத்து


12) நட்டல்என்பதன்பொருள்என்ன ?


நட்புக் கொள்ளுதல்


13) ஆசாரக்கோவையின் ஆசிரியர் யார்?


பெருவாயின் முள்ளியார்


14) பெருவாயின் முள்ளியார் பிறந்த ஊர் எது ?


கயத்தூர்


15) ஆசாரக் கோவை என்பதற்கு என்ன பொருள்?


நல்ல ஒழுக்கங்களின் தொகுப்பு


16) ஆசாரக் கோவை எத்தனை வெண்பாக்களைக் கொண்டது?


100


17) முத்தேன் என்ற தொகைச் சொல்லின் விளக்கம் என்ன?


1.   கொம்புத்தேன்

2.   பொந்துத்தேன்

3.   கொசுத்தேன்


18) ஆந்திரா ,கர்நாடகா, மகாராஷ்டிரா, உத்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் அறுவடைத் திருநாள் எவ்வாறு அழைக்கப்படுகிறது


மகாசங்கராந்தி


19) பஞ்சாப் மாநிலத்தில் அறுவடைத் திருநாள் எவ்வாறு அழைக்கப்படுகிறது? 


லோரி


20) குஜராத், ராஜஸ்தான் மாநிலங்களில் அறுவடைத் திருநாள் எவ்வாறு அழைக்கப்படுகிறது?


உத்தராயன்

Post a Comment

0 Comments