தில்லையாடி வள்ளியம்மை
பெற்றோரும் பிறப்பும்:
வள்ளியம்மை தென்னாப்ரிக்காவில் உள்ள ஜோகன்ஸ்பர்க் என்னும் நகரில் பிறந்தார்.
இவரின் பெற்றோர் = முனுசாமி, மங்களம்.
இவரின் தாயார் பிறந்த ஊரான தில்லையாடியின் பெயரைக் கொண்டு தில்லையாடி வள்ளியம்மை என்று அழைக்கப்பட்டார்.
அறப்போர்:
தென்னாப்ரிக்க நாட்டில் திருமணப்பதிவுச் சட்டப்படியும், கிறித்துவ மதச் சட்டப்படியும் நடைபெறாத திருமணங்கள் செல்லாது என்று அந்நாட்டு உச்ச நீதிமன்றம் 1913 ஆம் ஆண்டு வழங்கிய தீர்ப்பை எதிர்த்து காந்தியடிகள் தலைமையில் இந்தியர்கள் அறப்போராட்டத்தில் ஈடுபட்டனர்.
போராட்டத்தின் போது காந்தியடிகள் நிகழ்த்திய வீரம் செறிந்த உரை, சிறுமி வள்ளியம்மையின் மனதில் ஆழமாகப் பதிந்து.
1913 ஆம் ஆண்டு டிசம்பர்த் திங்கள் 23 ஆம் நாள் வால்க்ஸ்ரஸ்ட் என்னும் இடத்தில நடைபெற்ற அறப்போரில் வள்ளியம்மை கைது செய்யப்பட்டார்.
அவருக்கு தென்னாப்பிரிக்க நீதிமன்றம் 3 மாதம் கடுங்காவல் தண்டனை அளித்தது.
சிறைவாழ்க்கை:
சிறையில் வள்ளியம்மைக்கு கல்லும் மண்ணும் கலந்த உணவே தரப்பட்டது.அவரின் உடல்நலம் கடுமையாக பாதிக்கப்பட்டது.
சிறையில் உயிருக்கு போராடிய நிலையில் விடுதலை செய்யப்பட்டார்.
நாட்டுப்பற்று:
விடுதலை செய்யப்பட்ட வள்ளியம்மை தமது வீட்டில் படுத்த படுக்கையாக இருந்தார். இதனை அறிந்த காந்தியடிகள் அவரை காண வந்தார்.
“சிறைத்தண்டனைக்காக நீ வருந்துகிறாயா?” என்று காந்தியடிகள் அவரிடம் கேட்டார்.
அதற்கு வள்ளியம்மை, “இல்லை இல்லை மீண்டும் சிறை செல்லத் தயார்” என்று கூறினார்.
அத்துடன் இந்தியர்களின் நலனுக்காக எத்தகு இன்னல்களையும் ஏற்பேன் என்றார்.
உடல் நலம் குன்றிய வள்ளியம்மை 1913 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 22 ஆம் நாளன்று தமது 16 ஆம் வயதில் மரணம் அடைந்தார்.
காந்தியடிகளின் கருத்து:
“என்னுடைய சகோதரியின் மரணத்தை விடவும் வள்ளியம்மையின் மரணம் எனக்குப் பேரிடியாக இருந்தது” என்று காந்தியடிகள் மனம் வருந்தினார்.
“மாதர்களுக்கு அணிகலன்களாகத் திகழும் துன்பத்தைத் தாங்கும் மனவலிமை, தன்மானம், நல்லொழுக்கம் ஆகியவற்றிற்கு இலக்கணமாகத் திகழ்ந்தார். அவருடைய தியாகம் வீண் போகாது. சத்தியத்திற்காக உயிர் நீத்த அவருடைய உருவம் என் கண்முன் நிற்கிறது. நம்பிக்கை தான் அவரது ஆயுதம்” என்று வள்ளியம்மை குறித்து “இந்தியன் ஒப்பீனியன்” இதழில் காந்தியடிகள் எழுதியுள்ளார்.
தென்னாப்பிரிக்க வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் “தென்னாப்பிரிக்கச் சத்தியாகிரகம்” என்னும் நூலில் குறிப்பிட்டுள்ளார்.
அரசு செய்த சிறப்புகள்:
தில்லையாடியில் தமிழக அரசு அவரது சிலையை நிறுவி உள்ளது.
கோ - ஆப் - டெக்ஸ் என்றழைக்கப்படும் தமிழ்நாடு நெசவாளர் கூட்டுறவுச் சங்கம் சென்னையில் உள்ள தனது 600 வது விற்பனை மையத்திற்கு “தில்லையாடி வள்ளியம்மை மாளிகை” என்று பெயர் சூட்டிப் பெருமைபடுத்தி உள்ளது.
சென்னை, வண்டலூர் உயிரியல் பூங்காவில் பிறந்த பென் புலிக்குட்டிக்கு தமிழக முதல்வர், தில்லையாடி வள்ளியம்மை நினைவாக “வள்ளி” எனப் பெயரிட்டார்.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM