வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்
சௌகான்கள்
சௌகான்கள் கி.பி.(பொ.ஆ) 956 முதல் 1192 வரை இன்றைய ராஜஸ்தானின் கிழக்குப் பகுதிகளைச் சாகம்பரி நகரில் தலைநகரை நிறுவி ஆட்சி புரிந்தவர்களாவர்.
இந்த ராஜபுத்திர அரசவம்சத்தைத் தோற்றுவித்தவர் சிம்மராஜ் என்பவராவார். இவர் ஆஜ்மீர் நகரைத் தோற்றுவித்தவர் எனவும் அறியப்படுகின்றார்.
அராபியரின் படையெடுப்பின் போது பிரதிகாரர்களுடன் தோளோடு தோள் நின்றவராவர்.
சௌகான் வம்சாவளியின் கடைசி அரசனான பிருதிவிராஜ் சௌகானே அவ்வரச வம்சாவளி அரசர்களுள் தலைசிறந்தவரெனக் கருதப்படுகின்றார்.
அவர் 1191 ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் தரெய்ன் போரில் முகமது கோரியைத் தோற்கடித்தார். இருந்த போதிலும் 1192 இல் நடைபெற்ற இரண்டாம் தரெய்ன் போரில் அவர்தோற்கடிக்கப்பட்டுக் கொல்லப்பட்டார்.
பிருதிவிராஜ் சௌகானின் மறைவுக்குப் பின் சில நூற்றாண்டுகள் கழிந்த பின்பு சந்த் பார்தை எனும் கவிஞர் ‘‘பிருதிவிராஜ ராசோ’’ எனும் பெயரில் ஒரு நீண்டகாவியத்தைஇயற்றினார்.
கலைமற்றும் கட்டடக் கலைக்கு ராஜபுத்திரர்களின் பங்களிப்பு
கலை
பெரும்பாலும் சமயக் கருத்துக்களை மையமாகக் கொண்ட ஒரு குறிப்பிட்ட பாணியிலான ஓவியக்கலை மரபு ராஜபுத்திர அரசவைகளில் தோற்றம் பெற்றது.
இப்பாணியிலான ஓவியங்கள் ‘‘ராஜஸ்தானி’’ என்றழைக்கப்படுகின்றன.
ராஜஸ்தானி பாணியிலான ஓவியங்கள் பிக்கனேர், ஜோத்பூர் (இவ்விரு இடங்களும் ராஜஸ்தானில் உள்ளன), மேவார் (உதய்பூர்), ஜெய்சால்மர் (ராஜஸ்தான்), புரி (ஹரியானா) ஆகிய இடங்களில் காணக்கிடைக்கின்றன.
கட்டடக்கலை
கட்டடங்கள்
கட்டுவதில்
ராஜபுத்திரர்
தலைசிறந்தவராவர்.
சித்தோர்கார், ரான்தம்பூர், கும்பல்கார் (இவையனைத்தும் ராஜஸ்தானில் உள்ளன), மாண்டு, குவாலியர், சந்தேரி, அசிர்கார் (இவையனைத்தும் மத்தியப் பிரதேசத்தில் உள்ளன) ஆகிய இடங்களிலுள்ள
வலிமை
மிகுந்த
கோட்டைகள்
ராஜபுத்திரர்களின்
கட்டடங்களுக்குச்
சில
எடுத்துக்காட்டுகளாகும்.
ராஜபுத்திரர்களின்
குடியிருப்புக்
கட்டடக்கலைக்கு
எடுத்துக்காட்டுகளாக
விளங்குபவை
குவாலியரிலுள்ள மான்சிங் அரண்மனை, ஆம்பர் (ஜெய்ப்பூர்) கோட்டை, உதய்பூரில் ஏரியின் நடுவே அமைந்துள்ள அரண்மனை
ஆகியவைகளாகும்.
ஜோத்பூரில் (ராஜஸ்தான்) உள்ள
மாளிகை
எளிதில்
ஏற
முடியாத
மலைப்
பாறையின்
மேல்,
நகரை
நோக்கிய
வண்ணம்
அமைக்கப்பட்டுள்ளது.
ராஜபுத்திர அரசர்கள் கட்டியுள்ள கோவில்கள் கலை விமர்சகர்களை வியப்பில் ஆழ்த்தி அவர்களின் உள்ளங்களைக் கொள்ளை கொண்டுள்ளன.
கஜுராகோ எனும்
இடத்திலுள்ள
கோவில்கள்,
கொனார்க்கிலுள்ள சூரியனார் கோவில், அபு குன்றின் மீது கட்டப்பட்டுள்ளதில்வாரா சமணக் கோவில், மத்தியப்
பிரதேசத்தில்
அமைந்துள்ள
காந்தர்யா கோவில்
ஆகியன
ராஜபுத்திரர்களின்
கோவில்
கட்டடக்கலைக்கு
உன்னதமான
எடுத்துக்காட்டுகளாகும்.
பந்தேல்கண்டிலுள்ள கஜுராகோ
வளாகத்தில்
மொத்தம்
30 கோவில்கள் அமைந்துள்ளன.
கஜுராகோ கோவில்களின் சிகரங்கள் எழில் மிகுந்தவையாகும். கோவிலின் வெளிப் புறமும், உட்புறமும் மிக நேர்த்தியான சிற்பங்களைக் கொண்டுள்ளன. இக்கோவில்கள் சமண தீர்த்தங்கரர்களுக்கும், சிவன், விஷ்ணு ஆகிய இந்துக் கடவுள்களுக்கும் படைத்தளிக்கப்பட்டுள்ளன.
ஜோத்பூரிலிருந்து 32 மைல் தொலைவிலுள்ள ஓசியான் என்னுமிடத்தில் 16 இந்து மற்றும் சமணக் கோவில்கள் உள்ளன.
அபு குன்றின் மேலுள்ள சமணக் கோவிலில் வெண்மை நிறச் சலவைக் கற்களால் கட்டப்பட்ட கூடம் உள்ளது. அதன் மையத்தில் பதினொரு பொதுமைய வட்டங்களைக் கொண்ட குவிமாடம் அமைந்துள்ளது.
பாலர்களின் பண்பாட்டுப் பங்களிப்பு
பாலர்கள் மகாயான பௌத்தத்தைப் பின்பற்றியவராவர்.
பௌத்தக் கோவில்களையும் புகழ்பெற்ற நாளந்தா, விக்கிரமசீலா ஆகிய பல்கலைக் கழகங்களையும் அவர்கள் பரந்த மனப்பான்மையுடனும் ஈகைக் குணத்தோடும் ஆதரித்தனர்.
அவர்களின் சமயப் பரப்பாளர்கள் மூலம் திபெத்தில் பௌத்தம் நிறுவப்பட்டது.
பெயரும் புகழும் பெற்ற பௌத்தத் துறவியும், திபெத்திய பௌத்தத்தைச் சீர்திருத்தம் செய்தவருமான அதிசா (981 – 1054) விக்கிரமசீலா மடாலயத்தின் தலைவராக இருந்தார்.
சுமத்ரா மற்றும் ஜாவாவைச் சேர்ந்த இந்து பௌத்த சைலேந்திர அரசுடன் பாலர்கள் சுமூகமான உறவைப் பேணினர்.
பாலர்களின் ஆதரவால் தனித்தன்மை வாய்ந்த புதிய பாணியைக் கொண்ட கலைப் பள்ளி ஒன்று உருவானது. இது ‘‘பாலர்களின் கலை’’ அல்லது ‘‘கிழக்கு இந்தியக் கலை’’ என்று அழைக்கப்பட்டது.
பாலர்களின் இக்கலைப் பாணி இன்றைய பீகார், மேற்குவங்கம், அண்டை நாடான பங்களாதேஷ் ஆகிய பகுதிகளில் தழைத்தோங்கியது.
இக்கலைப்
பாணி
பெரும்பாலும் செப்புச் சிலைகளிலும், பனை ஓலைகளிலும் வரையப்பட்ட ஓவியங்கள் எனும் வடிவங்களில் வெளிப்பட்டன.
இவை
புத்தரையும் ஏனைய கடவுளர்களையும் புகழ்பாடுவதாய்
அமைந்துள்ளன.
இப்பகுதிகளைச் சேர்ந்த பாலர்களின் செப்புச் சிலைகள் தென்கிழக்கு ஆசியாவில் இந்தியப் பண்பாடு பரவியதில் முக்கியப்பங்கு வகித்தன.
ரக்ஷாபந்தன் (ராக்கி) எனும் பண்பாட்டு மரபானது ராஜபுத்திரர்களுக்கு உரியதாகும்.
'ரக் ஷா' எனில் பாதுகாப்பு என்றும்,
'பந்தன்' என்பது கட்டுதல் அல்லது உறவு என்னும் பொருளாகும்.
இது சகோதரத்துவத்தையும், அன்பையும் கொண்டாடும் விழாவாகும். ஒரு பெண் ஒர் ஆடவனின் மணிக்கட்டில் ராக்கியைக் கட்டிவிட்டால் அப் பெண் அந்த ஆடவனை சகோதரனாகக் கருதுகிறாள் என்று பொருள். அப்படியான ஆடவர்கள் அப் பெண்களைப் பாதுகாக்கக் கடமைப்பட்டவர்கள் ஆவர்.
1905 ஆம் ஆண்டு வங்கப் பிரிவினையின் போது ரவீந்திரநாத் தாகூர் பெருமளவில் மக்கள் பங்கேற்றரக் ஷாபந்தன் விழாவைத் தொடங்கினார்.
அவ் விழாவில் இந்து மற்றும் முஸ்லீம் பெண்கள் அடுத்த சமூகத்தைச் சேர்ந்த ஆடவர்கைகளில் ராக்கியைக் கட்டி அவர்களைச் சகோதரர்களாக ஏற்கவைத்தார்.
இந்து, முஸ்லீம்களுக்கிடையே பிளவை ஏற்படுத்த ஆங்கிலேயர் மேற்கொண்ட முயற்சிகளுக்கு எதிராக இச்செயல்பாடு மேற்கொள்ளப்பட்டது.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM