7 th HISTORY NEW BOOK 1 st TERM : வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

 


வட இந்தியப் புதிய அரசுகளின் தோற்றம்

 

ராஜபுதனம் என்பது ராஜபுத்திர அரசுகளின் கூட்டமைப்பால் ஆனது. அவற்றுள் மிகவும் புகழ் பெற்றது சித்தூர்ஆகும்.

 

அனைத்து ராஜபுத்திர இனக் குழுவினரும் ஒருங்கிணையும் மையமாகச் சித்தூர்விளங்கிற்று.

 

மாளவம், குஜராத் ஆகியவற்றுடன் ஒப்பிடுகையில் சித்தூர் சிறியதேஇருந்த போதிலும் ராஜபுத்திரர்கள் இந்த அரசுகளிலும் ஆட்சி செய்தனர்.

 

சித்தூரின் ராணா (அரசர்) மாளவத்தை வெற்றி கொண்டதன் நினைவாக ஜெய ஸ்தம்பா எனும் வெற்றித் தூண் சித்தூரில் நிறுவப்பட்டது.

 

பிரதிகாரர்கள் மேற்கிந்தியப் பகுதியிலும், பாலர்கள் இந்தியாவின் கிழக்குப் நிறுவியிருந்தனர்.

 

ஒன்பதாம் நூற்றாண்டில் ராஜஸ்தான், கன்னோஜ் ஆகிய பகுதிகளின் மேல் இறையாண்மை கொண்ட சக்தியாகத் தம்மைக் கூறிக்கொள்ளும் அளவிற்குப் பிரதிகார அரசவம்சம் வளர்ச்சி பெற்றிருந்தது.

 

கி.பி. (பொ.) 712 இல் சிந்துப் பகுதியை அராபியர் கைப்பற்றியதிலிருந்தே இந்தியாவில் இஸ்லாமியர் காலக்கட்ட வரலாறு தொடங்கியிருக்க வேண்டும்.

 

ஆனால் கன்னோஜை ஆண்ட அரசர்களின் குறிப்பாக, யசோவர்மனின் (ஏறத்தாழ கி.பி.(பொ.) 736) எதிர்ப்பின் காரணமாகவும் அவர்களுக்குப் பின்னர் பத்தாம் நூற்றாண்டின் இடைப்பகுதி வரை வட இந்தியாவின் பெரும் பகுதியையும் கன்னோஜையும் கட்டியாண்ட ராஜபுத்திர அரசர்கள் மற்றும் தலைவர்களின் எதிர்ப்பின் விளைவாலும் இந்தியாவில் இஸ்லாமியரின் காலக்கட்டம் கி.பி.(பொ.)1200 இல் தான் தொடங்கிற்று.

 

ராஜபுத்திரர்களின் தோற்றம்

ராஜபுத் எனும் சொல் ரஜ்புத்ர எனும் சமஸ்கிருதச் சொல்லிலிருந்து பெறப்பட்டதாகும்.


அதன் பொருள் அரச வம்சரத்தத்தின் வாரிசு அல்லது வழித் தோன்றல் என்பதாகும்.


கி.பி.(பொ.) 647 இல் ஹர்சரின் மறைவைத் தொடர்ந்து வடக்கு மற்றும் மத்திய இந்தியாவின் பல பகுதிகளில் பல்வேறு ராஜபுத்திர இனக்குழுக்கள் தங்கள் அரசுகளை நிறுவிக்கொண்டன.

 

மிக முக்கியமான மூன்று குலங்கள் சூரிய வம்சி எனும் சூரிய குலம், சந்திர வம்சி எனும் சந்திர குலம், அக்னி குலம் (நெருப்பிலிருந்து தோன்றியவர்கள்) என்பனவாகும்.


சூரிய குல, சந்திர குல வழித்தோன்றல்கள் எனக் கூறிக்கொள்ளும் ராஜபுத்திரர்களுள் முக்கியமானவர்கள் பந்தேல்கண்டின் சந்தேலர்கள் ஆவர்.


ஹரியானா பகுதியில் தோமரர்கள் ஆட்சி புரிந்து வந்தனர். ஆனால் 12 ஆம் நூற்றாண்டில் இவர்கள் சௌகான்களால் வெற்றி ொள்ளப்பட்டனர்.

 

ஜேம்ஸ் டாட் எனும் கீழ்த்திசைப் புலமையாளர் கி.பி.(பொ.)1829 இல் முக்கியமான 36 ராஜபுத்திர அரச குலங்களைப் பட்டியலிட்டுள்ளார்.


அவற்றுள் நான்கு குலங்கள் சிறப்புத் தகுதி பெற்றவையாகும். அவர்கள் பிரதிகாரர்கள், சௌகான்கள், சோலங்கிகள் என்றழைக்கப்பட்ட சாளுக்கியர்கள் (தக்காணச் சாளுக்கியரிடமிருந்து வேறுபட்டவர்கள்), பவாரைச் சேர்ந்த பரமாரர்கள் எனப்படுவோராவர். இந் நான்கு குல மரபினரும் அக்னிகுலத் தோன்றல்கள் ஆவர்.

 

பிரதிகாரர்கள்

நான்கு முக்கிய குல மரபுகளைச் சார்ந்த ராஜபுத்திரர்களில் ஒரு பிரிவினரான பிரதிகாரர் ல்லது கூர்ஜரப் பிரதிகாரர் கூர்ஜ ராட்டிராவிலிருந்து (ஜோத்பூரில் ள்ளது) ஆட்சி புரிந்தனர்.

 

கி.பி.(பொ.) ஆறாம் நூற்றாண்டில் ஹரிச்சந்திரா என்பவர் கூர்ஜர அரசவம்சத்தின் அடிக்கல்லை நாட்டினார்.


பிரதிகார அரசர்களுள் முதலாவது மற்றும் முக்கியமானஅரசர் முதலாம் நாகபட்டர் என்பவராவார்.


கி.பி எட்டாம் நூற்றாண்டில் பரூச், ஜோத்பூர் ஆகிய பகுதிகளை ஆட்சி செய்த அவர்தனது ஆட்சிப்பரப்பைக் குவாலியர் வரை விரிவுபடுத்தினார்.


சிந்துவின் மீது அராபியர் மேற்கொண்ட படையெடுப்பை அவர் முறியடித்து அவர்களின் விரிவாக்க நடவடிக்கைகளைத் தடுத்தார்.


அவருக்குப் பின்னர் ஆட்சிப் பொறுப்பேற்ற வத்சராஜா ஒட்டு மொத்த வட இந்தியாவின் மேல் ஆதிக்கம் செலுத்த ஆசைப்பட்டார்.


கன்னோஜைக் கைப்பற்ற அவர்மேற் கொண்ட முயற்சி வங்காளப் பகுதியின் பாலவம்ச அரசரான தர்மபாலாவுடன் பகை ஏற்பட வழிவகுத்தது.


மாளவத்தின் கூர்ஜரப் பிரதிகாரர்கள், தக்காணத்தைச் சேர்ந்த ராஷ்டிரகூடர்கள், வங்காளத்துப் பாலர்கள் ஆகிய மூவருள் ஒவ்வொருவரும் வளம் நிறைந்த கன்னோஜின் மீது அவர்களின் மேலாதிக்கத்தை நிறுவ முயன்றனர்.


இதனால் ஏற்பட்ட நீண்ட, நெடிய மும் முனைப் போட்டியில் இம் மூன்று சக்திகளும் பலவீனமடைந்தன.

 

வத்சராஜாவைத் தொடர்ந்து ஆட்சிப் பொறுப்பேற்ற இரண்டாம் நாகபட்டர், ராமபத்ரா ஆகியோர் குறிப்பிடத் தகுந்த சாதனைகள் எதுவும் புரியவில்லை. ராமபத்திராவுக்குப் பின்னர் அவருடைய மகனான மிகிரபோஜா அல்லது போஜா என்பவர்அரியணை ஏறினார்.

 

பாலர்கள்

தர்மபாலர் (கி.பி.(பொ.) 770 – 810)

 

பால அரச வம்சத்தை உருவாக்கியவர் கோபாலர்.

 

அரசபரம் பரையைச் சேர்ந்தவர் என்ற வரலாற்றுப் பின்னணி அவருக்கில்லை.

 

அவரது திறமையின் காரணமாக மக்கள் அவரை அரசராகத் தேர்வு செய்தனர்.

 

கி.பி.(பொ.) 750 முதல் 770 வரையிலானஆட்சிக் காலத்தில் அவர் வங்காளத்தில் பாலர்களின் எதிர்கால மேன்மைக்கானஅடித்தளத்தை அமைத்தார்.

 

அவருடைய மகன் தர்மபாலர், பால அரசை வடஇந்திய அரசியலில் ஒரு வலிமை மிக்க சக்தியாக உருவாக்கினார்.

 

கன்னோஜுக்கு எதிராக வெற்றிகரமான படையெடுப்பை அவர் மேற்கொண்டார். அவர்மிகச் சிறந்த பௌத்த ஆதரவாளராவார்.

 

அவரால் உருவாக்கப்பட்ட விக்கிரமசீலா மடாலயம் பௌத்தக் கல்விக்கான மிகச் சிறந்த மையமாயிற்று.

 

தர்மபாலரைத் தொடர்ந்து அவருடைய மகன் தேவ பாலர் ஆட்சிப் பொறுப்பேற்றார்.


அவர் பாலர்களின் ஆட்சி அதிகாரத்தைக் கிழக்கு நோக்கி காமரூபம் (அஸ்ஸாம்) வரை விரிவுபடுத்தினார்.


அவரும் தலைசிறந்த பௌத்த ஆதரவாளர் ஆவார்.


 அவர் பௌத்தர்களுக்கு ஐந்து கிராமங்களைக் கொடையாக வழங்கினார். அவரும் மகதத்தில் மடாலயங்களையும் பல கோவில்களையும் நிறுவினார்.

‘‘தர்மபாலர், தேவபாலர் ஆகியோரின் ஆட்சிக்காலங்கள் வங்காள வரலாற்றின் சிறப்பு மிக்க ஒளிரும் அத்தியாயங்கள்’’ என வரலாற்றறிஞர் ஆர்.சி. மஜும்தார்கருத்துக் கூறியுள்ளார்.

 

தேவபாலருக்குப் பின்னர் ஐந்து அரசர்கள் அப்பகுதியைச் சிறப்பித்துச் சொல்ல இயலாதஅளவிற்கு ஆட்சி புரிந்தனர்.


ஆனால் 988 ஆம் ஆண்டு முதலாம் மகிபாலர் அரியணை ஏறியதைத் தொடர்ந்து பாலர் அரசு முன் எப்போதுமில்லாத பெயரையும் புகழையும் பெற்றது.


முதலாம் மகிபாலர் (988 – 1038)

முதலாம் மகிபாலர் பால வம்சத்தின் மிகச் சிறந்த, வலிமைமிக்க அரசர் ஆவார்.


அவர் இரண்டாம் பால வம்சத்தைத் தோற்றுவித்தவர் ஆவார்.


தென்னிந்திய அரசரான ராஜேந்திர சோழனின் படையெடுப்பின் காரணமாய் வாரணாசிக்கு அப்பால் தனது அதிகாரத்தைவிரிவுபடுத்த அவரால் இயலாமல் போயிற்று.


பால வம்சத்தின் பண்டைய புகழையும் பெயரையும் மகிபாலர் மீட்டெடுத்தார். வாரணாசி, சாரநாத், நாளந்தா ஆகிய இடங்களில் சமயம் சார்ந்த ஏராளமான கட்டடங்களைக் கட்டுவித்த மகிபாலர் பழைய கட்டடங்களையும் புனரமைத்தார்.


மகிபாலரின் இறப்பைத் தொடர்ந்து பால வம்சம் வீழ்ச்சியுற்று சேனா வம்சத்தின் வருகைக்கு வழிவிட்டது.

Post a Comment

0 Comments