உலகின் டாப் 5 பெரும் பணக்காரர்களின் பட்டியல் வெளியீடு

உலகின் டாப் 5 பெரும் பணக்காரர்களின் பட்டியல் வெளியீடு

அமெரிக்காவின் புளூம்பெர்க் நிறுவனம் உலகப் பெரும்பணக்காரர்கள் பட்டியலை வெளியிட்டுள்ளது. இந்தப் பட்டியலில் அமேசான் நிறுவனர் முதலிடத்திலும் முகேஷ் அம்பானி 5ம் இடத்திலும் உள்ளனர். அமேசான் நிறுவனர் ஜெஃப் பெஜோஸ் இந்திய மதிப்பில் ரூ 13 லட்சத்து 52 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் முதல் இடத்தில் உள்ளார்.


5 ஆம் இடத்தில் உள்ள இந்தியாவின் ரிலையன்ஸ் அதிபர் முகேஷ் அம்பானியின் சொத்து மதிப்பு ரூ 6 லட்சத்து 53 ஆயிரம் கோடியாக உள்ளது.


இரண்டாம் இடத்தில் மைக்ரோ சாஃப்ட் நிறுவன தலைவர் பில்கேட்ஸ் உள்ளார். இவருடைய சொத்து மதிப்பு ரூ 8 லட்சத்து 96 ஆயிரம் கோடியாக உள்ளது.


 ரூ 7 லட்சத்து 42 ஆயிரம் கோடி ரூபாய் சொத்து மதிப்புடன் பேஸ்புக் நிறுவனர் மார்க் சுக்கர்பர்க் மூன்றாம் இடத்தில் உள்ளார். ஸ்பேஸ் எக்ஸ் தலைவர் எலோன் ஆர் மஸ்க் ரூ 6 லட்சத்து 72 ஆயிரம் கோடி சொத்து மதிப்புடன் நான்காம் இடத்தில் உள்ளார்.

Post a Comment

0 Comments