2020 செப்டம்பர் 6 நடப்பு நிகழ்வுகள்
REFER FROM 5 NEWS PAPERS & WEBSITES
1. இந்தியாவில் எளிமையாக தொழில் செய்ய உகந்த மாநிலங்கள் 2019 பட்டியலி தமிழ்நாடு 14 வது இடம் பிடித்துள்ளது.
2. இஸ்ரேல் நாட்டில் ஜெருசலேம் நகரில் நடைபெற்ற தொல்லியல் ஆய்வில் 2500 ஆண்டுகள் பழமை வாய்ந்த அரண்மனை கண்டறியப்பட்டுள்ளது.
3. வெள்ள எச்சரிக்கை சேவைகளை நாட்டிற்கு வழங்க GOOGLE நிறுவனம் பங்களாதேஷ் நீர் மேம்பாட்டு வாரியத்துடன் கூட்டு சேர்ந்துள்ளது.
4. KIRAN என்ற பெயரில் மனநல மறுவாழ்வுக்கான 24 மணி நேர இலவச தொலைபேசி ஆலோசனை சேவையை மத்திய சமூக நலத்துறை அமைச்சர் தாவர்சந்த் கெக்லிட் தொடங்கி வைத்தார்.
இச் சேவையின் TOLL FREE NUMBER:1800-500-0019.
5. சிவகங்கை மாவட்டம் காளையார்கோவில் அருகே கீழடி போன்ற நகர நாகரீகம் இருந்துள்ளது என காரைக்குடி அழகப்பா பல்கலைக்கழக வரலாற்றுத்துறை கௌரவ விரிவுரையாளர் பாலசுப்பிரமணியம் தெரிவித்துள்ளார்.
6. தேசிய பழங்குடி
ஆராய்ச்சி நிறுவனத்தை புதுடில்லியிலுள்ள இந்திய பொது நிர்வாக கல்வி நிறுவனத்தின் வளாகத்தில் அமைப்பதற்கு மத்திய பழங்குடியினர் விவகார அமைச்சகம் மற்றும் இந்திய பொதுநிர்வாக
கல்வி நிறுவனம் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாகியுள்ளது.
7. BASIC எனப்படும் அணுகல்
மற்றும் பாதுகாப்பான இந்திய நகரங்களை கட்டமைத்தல் திட்டத்தை செயல்படுத்துவதற்காக தேசிய நகர்ப்புற விவகார நிறுவனம் மற்றும் IIT ரூர்க்கி புரிந்துணர்வு
ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது.
8. உலக அறிவுசார் சொத்து அமைப்பு, கார்நெல் பல்கலைக் கழகம் மற்றும் இன்சீடு பிசினஸ் ஸ்கூல் ஆகிய நிறுவனங்களுடன் இணைந்து உலகளாவிய புதுமை குறியீடு 2020 பட்டியலை வெளியிட்டுள்ளது.
9. பஞ்சாபில் சுற்றுச்சூழலை பாதுகாப்பதற்கும் மற்றும் பராமரிப்பதற்கும், வலுப்படுத்துவதற்கும் மக்களை பங்குதாரர்களாக மாற்றுவதற்கும் பஞ்சாப் வனத்துறை I RAKHWALI (ஐ ரக்வாலி) என்ற செயலியை அறிமுகம் செய்துள்ளது.
10. இந்திய ஆட்டோ மொபைல்ஸ் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக கென்சி ஆயுகாவா நியமிக்கப்பட்டுள்ளார்.
11. மறு பயன்பாட்டிற்கு
உரிய சோதனை விண்கலத்தை சீனா வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியுள்ளது.
12. சர்வதேச
கணக்கெடுப்பு குறியீடு தரவரிசைப் பட்டியலில் சுவிட்சர்லாந்து முதலிடம்
பிடித்துள்ளது.
13. பஜாஜ் அலையன்ஸ் லைப் நிறுவனத்தின் பிராண்ட் தூதுவராக ஆயுஷ்மான் குரானா நியமிக்கப்பட்டுள்ளார்.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM