எங்கள் தமிழ்
உலக மொழிகளில் தொன்மையானது நம் தமிழ்மொழி. அது மென்மையும் இனிமையும் வளமையும் உடையது; வாழ்வுக்குத் தேவையான அன்பையும் அறத்தையும் கூறுவது; காலச் சூழலுக்கு ஏற்ப மாற்றங்களை ஏற்று, என்றும் இளமையோடு திகழ்வது. அத்தகு தமிழ் மொழியின் சிறப்பை நாமக்கல் கவிஞரின் பாடல் மூலம் அறிவோம்.
அருள் நெறி அறிவைத் தரலாகும்
அதுவே தமிழன் குரலாகும்
பொருள் பெற யாரையும் புகழாது
போற்றா தாரையும் இகழாது
கொல்லா விரதம் குறியாகக்
கொள்கை பொய்யா நெறியாக
எல்லா மனிதரும் இன்புறவே
என்றும் இசைந்திடும் அன்பறமே
அன்பும் அறமும் ஊக்கிவிடும்
அச்சம் என்பதைப் போக்கிவிடும்
இன்பம் பொழிகிற வானொலியாம்
எங்கள் தமிழெனும் தேன்மொழியாம்
- நாமக்கல் கவிஞர் வெ. இராமலிங்கனார்
சொல்லும் பொருளும்
1. ஊக்கிவிடும் - ஊக்கப்படுத்தும்
2. குறி - குறிக்கோள்
3. விரதம் - நோன்பு
4. பொழிகிற - தருகின்ற
இப்பாடலின் ஆசிரியர் நாமக்கல் கவிஞர்.
இவர் தமிழறிஞர், கவிஞர், விடுதலைப் போராட்ட வீரர் என பன்முகத் தன்மை கொண்டவர்.
காந்தி அடிகளின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு காந்தியத்தை பின்பற்றியதால் இவர் காந்தியக் கவிஞர் என்று அழைக்கப்படுகிறார்.
தமிழகத்தின் முதல் அரசவைக் கவிஞராக விளங்கியவர்.
மலைக்கள்ளன், நாமக்கல் கவிஞர் பாடல்கள், என் கதை, சங்கொலி உள்ளிட்ட பல்வேறு நூல்களை எழுதியுள்ளார்.
நாமக்கல் கவிஞர் பாடல்கள் எனும் நூலில் இருந்து எங்கள் தமிழ் என்ற பாடல் எடுத்து தரப்பட்டுள்ளது.
கத்தியின்றி இரத்தமின்றி யுத்தமொன்று வருகுது என்பது இவருடைய புகழ்பெற்ற பாடலாம்.
QUESTIONS & ANSWERS
1. நெறி என்ற சொல்லின் பொருள் வழி
2. குரலாகும் எனும் சொல்லை பிரித்து எழுதுக குரல் + ஆகும்
3. வான் + ஒலி என்பதனை சேர்த்து எழுதுக வானொலி
ஒன்றல்ல இரண்டல்
தமிழ்நாடு நிலவளமும் நீர்வளமும் மட்டுமன்றிப் பொருள்வளமும் அருள்வளமும் நிறைந்தது. அதே போல தமிழ் மொழி இலக்கிய வளமும் இலக்கண வளமும் நிறைந்தது. தமிழக மன்னர்களும் வள்ளல்களும் கொடைத்திறன் மிக்கவர்களாக விளங்கினர். இக்கருத்துகளை விளக்கும் பாடலை அறிவோம்.
ஒன்றல்ல இரண்டல்ல தம்பி சொல்ல
ஒப்புமை இல்லாத அற்புதம் தமிழ்நாட்டில்
(ஒன்றல்ல இரண்டல்ல தம்பி...)
தென்றல் தரும் இனிய தேன்மணமும் கமழும்
செங்கனியும் பொன்க திரும்தந்துதவும் நன்செய்வளம்
(ஒன்றல்ல இரண்டல்ல தம்பி...)
பகைவென்ற திறம்பாடும் பரணிவகை - செழும்
பரிபாடல் கலம்பகங்கள் எட்டுத்தொகை - வான்
புகழ்கொண்ட குறளோடு அகம்புறமும் - செம்
பொருள்கண்ட தமிழ்ச் சங்க இலக்கியப் பெருஞ்செல்வம்
(ஒன்றல்ல இரண்டல்ல தம்பி...)
முல்லைக்குத் தேர்கொடுத்தான் வேள்பாரி - வான்
முகிலினும் புகழ்படைத்த உபகாரி - கவிச்
சொல்லுக்குத் தலைகொடுத்தான் அருள்மீறி – இந்த
வள்ளலாம் குமணன்போல் வாழ்ந்தவர் வரலாறு
(ஒன்றல்ல இரண்டல்ல தம்பி...)
- உடுமலை நாராயணகவி
சொல்லும் பொருளும்
- ஒப்புமை - இணை
- முகில் - மேகம்
- அற்புதம் - வியப்பு
- உபகாரி - வள்ளல்
Ø பகைவரை வென்றதை பாடுவது பரணி
இலக்கியம்.
Ø முல்லைக்குத் தேர் கொடுத்து மழை மேகத்தை விட புகழ் பெற்றவன் வள்ளல் வேல்பாரி.
Ø புலவரின் சொல்லுக்காக தன் தலையையே தர துணிந்தவன் குமண வள்ளல்.
உடுமலை நாராயணகவி
Ø இவர் பகுத்தறிவு கவிராயர்
என்று அழைக்கப்படுகிறார்.
Ø தமிழ் திரைப்பட பாடலாசிரியராகவும்
நாடக எழுத்தாளராகவும் புகழ் பெற்றவர்.
Ø தமது பாடல்கள் மூலம் பகுத்தறிவு
கருத்துக்களை பரப்பியவர்.
Ø நாட்டுப்புற இசையின் எளிமையை கையாண்டு கவிதைகள் எழுதியவர்.
Ø வானில் ___________ கூட்டம் திரண்டால் மழை பொழியும் முகில்.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM