கலங்கரை விளக்கம்
கடலும் கடல்சார்ந்த இடமும் தமிழரின் வாழ்நிலங்களுள் ஒன்று. கடலோடு வாழ்ந்த தமிழர், தம் தொழில்நுட்ப அறிவால் கலம் படைத்து, அதனைக் கொண்டு மீன் பிடித்தும், வணிகம் செய்தும் வாழ்ந்து வந்தனர்.
கடற்பயணம் சென்று கரை திரும்பத் தமிழர் கண்ட தொழில் நுட்பமே கலங்கரை
விளக்கம். அது குறித்துச் சங்கப் பாடல் விளக்குவதைக் காண்போம்.
பெரும்பாணாற்றுப்படை
வானம் ஊன்றிய மதலை போல
ஏணி சாத்திய ஏற்றருஞ் சென்னி
விண்பொர நிவந்த வேயா மாடத்து
இரவில் மாட்டிய இலங்குசுடர் ஞெகிழி
உரவுநீர் அழுவத்து ஓடுகலம் கரையும்
துறை*…….
- கடியலூர் உருத்திரங் கண்ணனார
சொல்லும் போருளும்
1. மதலை - தூண் 2. சென்னி - உச்சி 3. ஞெகிழி - தீச்சுடர் 4. உரவு நீர் - பெரு நீர் பரப்பு 5. அழுவம் - கடல் 6. கரையும் - அழைக்கும் 7. வேயா மாடம் - வைக்கோல் போன்றவற்றால் வேயப்படாத தின்மையாக சாந்து பூசப்பட்ட மாடம்
பாடலின் பொருள் கலங்கரை விளக்கமானது வானம் கீழே விழுந்துவிட்டால் தாங்கிக் கொண்டிருக்கும் தூண் போல தோற்றமளிக்கிறது. ஏணி கொண்டு ஏற முடியாத உயரத்தை கொண்டிருக்கிறது.
வேயப்படாமல் சாந்து பூசப்பட்ட விண்ணை முட்டும் மாடத்தை உடையது.
அந்த மாடத்தில் இரவில் ஏற்றப்பட்ட எரியும் விளக்கு கடலில் துறைமுகம் அறியாமல் கலங்கும் மரக்கலங்களை தன் துறைமுகம் நோக்கி அழைக்கிறது.
கடியலூர் உருத்திரங்கண்ணனார் கடியலூர் உருத்திரங்கண்ணனார் ஒரு சங்ககாலப் புலவர்.
இவர் கடியலூர் என்ற ஊரில்
வாழ்ந்தவர்.
இவர் பத்துப்பாட்டில் பெரும்பாணாற்றுப்படை மற்றும் பட்டினப்பாலை ஆகிய நூல்களை இயற்றியுள்ளார்.
பெரும்பாணாற்றுப்படையின் பாட்டுடைத் தலைவன் தொண்டைமான் இளந்திரையன்.
இந்நூலின் 346 முதல் 351 வரை உள்ள அடிகள் நமக்கு பாட பகுதியாக தரப்பட்டுள்ளன.
வள்ளல் ஒருவரிடம் பரிசு பெற்றுத் திரும்பும் புலவர் அல்லது பானர் போன்றோர் அந்த வள்ளலிடம் பரிசு பெற பிறருக்கு வழிகாட்டுவதாக பாடப்படுவது ஆற்றுப்படை இலக்கியமாகும்.
பத்துப்பாட்டு நூல்கள் 1. திருமுருகாற்றுப்படை 2. பொருநராற்றுப்படை 3. பெரும்பாணாற்றுப்படை 4. சிறுபாணாற்றுப்படை 5. முல்லைப்பாட்டு 6. மதுரைக்காஞ்சி 7. நெடுநல்வாடை 8. பட்டினப்பாலை 9. மலைபடுகடாம் 10. குறிஞ்சிப்பொட்ட |
சரியான விடையைத்
தேர்ந்தெடுத்து எழுதுக.
1. வேயாமாடம் எனப்படுவது ______.
அ) வைக்கோலால் வேயப்படுவது
ஆ) சாந்தினால் பூசப்படுவது
இ) ஓலையால் வேயப்படுவது
ஈ) துணியால் மூடப்படுவது
2. உரவுநீர் அழுவம் – இத்தொடரில் அடிக்கோடிட்ட சொல்லின் பொருள் ______.
அ) காற்று
ஆ) வானம்
இ) கடல்
ஈ) மலை
3. கடலில் துறைமுகம் அறியாமல் கலங்குவன ______.
அ) மீன்கள்
ஆ) மரக்கலங்கள்
இ) தூண்கள்
ஈ) மாடங்கள்
4. தூண் என்னும் பொருள் தரும் சொல் ______.
அ ) ஞெகிழி
ஆ) சென்னி
இ) ஏணி
ஈ) மதலை
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM