TET, TNEB, POLICE, TRB & TNPSC : தமிழ்.


ஆறாம் வகுப்பு தமிழ்

 

1.     தமிழுக்கு அமுதென்று பெயர் என்று பாடியவர்

 

பாரதிதாசன்


 

2.     நிருமித்த என்ற சொல்லின் பொருள்

 

உருவாக்கிய


 

3.     விளைவு என்ற சொல்லின் பொருள்

 

வளர்ச்சி


 

4.     பாரதிதாசனின் இயற்பெயர்

 

சுப்புரத்தினம்


 

5.     பாரதிதாசன் என்னவென்று போற்றப்பட்டார்

 

புரட்சிக்கவி மற்றும் பாவேந்தர்


 

6.     தமிழே உயிரே வணக்கம் தாய் பிள்ளை உறவம்மா உனக்கும் எனக்கும் என்று பாடியவர்

 

காசி ஆனந்தன்


 

7.     இன்பத்தமிழ் சமூக வளர்ச்சிக்கு எதைப் போன்றது என்று பாரதிதாசன் பாடினார்

 

அடிப்படையான நீர் போன்றது


 

8.     ஏற்றத்தாழ்வற்ற ___________  வேண்டுமென்று பாரதிதாசன் பாடுகிறார்

 

சமூகம்


 

9.     தமிழ் கும்மி என்ற கவிதையை எழுதியவர்

 

பெருஞ்சித்திரனாரின்


 

10.  ஊழி என்ற சொல்லின் பொருள்

 

நீண்டதொரு காலப்பகுதி


 

11.  மேதினி என்ற சொல்லின் பொருள்

 

உலகம்


 

12.  உள்ளபூட்டு என்ற சொல்லின் பொருள்

 

உள்ளத்தின் அறியாமை


 

13.  பெருஞ்சித்திரனாரின் இயற்பெயர்

 

மாணிக்கம்


 

14.  பெருஞ்சித்திரனாரின் சிறப்பு பெயர்

 

பாவலரேறு


 

15.  பெருஞ்சித்திரனார் எழுதிய நூல்கள்

 

கனிச்சாறு, கொய்யாக்கனி, பாவிய கொத்து & நூறாசிரியம்.


 

16.  பெருஞ்சித்திரனார் நடத்திய இதழ்கள்

 

தென்மொழி, தமிழ்ச்சிட்டு & தமிழ்நிலம்.


 

17.  தனிதமிழையும் தமிழ் உணர்வையும் பரப்பிய பாவலர்

 

பெருஞ்சித்திரனார்.


 

18.  தமிழ் கும்மி என்ற கவிதை எந்த நூலில் இடம் பெற்றது

 

கனிச்சாறு


 

19.  கனிச்சாறு எத்தனை தொகுதிகளாக வெளியானது

 

எட்டு தொகுதிகள்.


 

20.  தமிழுணர்வு நிறைந்த பாடல்களை கொண்ட பெருஞ்சித்திரனார் நூல்

 

கனிச்சாறு


 

21.  வான் தோன்றி வழித் தோன்றி நெருப்பு தோன்றி மண் தோன்றி என்று பாடியவர்

 

வாணிதாசன்


 

22.  உலகில் உள்ள மொழிகளின் எண்ணிக்கை

 

6000 மேற்பட்ட மொழிகள்


 

23.  இந்தியாவில் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட முதல் மொழி

 

தமிழ்


 

24.  யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழி போல் இனிதாவது எங்கும் காணோம் என்று பாடியவர்

 

பாரதியார்


 

25.  என்று பிறந்தவள் என்று உணராத இயல்பினை உடையவன் எங்கள் தாய் என்று பாடியவர்

 

பாரதியார்


 

26.  நமக்கு கிடைத்துள்ள மிகப் பழமையான இலக்கண நூல்

 

தொல்காப்பியம்


 

27.  தமிழ் எழுத்துக்கள் பெரும்பாலும் __________  எழுத்தாகவே உள்ளன

 

வலஞ்சுழி எழுத்துக்கள்


 

28.  வலஞ்சுழி எழுத்துகள்

 

அ எ ஔ ண ஞ


 

29.  இடஞ்சுழி எழுத்துகள்

 

ட ய ழ


 

30.  தமிழின் கிளவியும் என்ற பாடல் இடம்பெறும் நூல்

 

தொல்காப்பியம் 386.

 

Post a Comment

0 Comments