6 th SCIENCE NEW BOOK l செல்

செல்

உயிரினங்களின் செயல் அலகு செல் ஆகும்.

 ராபர்ட் ஹூக், இங்கிலாந்து நாட்டைச் சேர்ந்த அறிவியலாளர், கணித அறிஞர் மற்றும் கண்டுபிடிப்பாளர். இவர் அக்காலத்தில் பயன்படுத்தப்பட்ட நுண்ணோக்கியை மேம்படுத்தி ஒரு கூட்டு நுண்ணோக்கியை உருவாக்கினார். நுண்ணோக்கியின் அருகில் வைக்கப்பட்டுள்ள விளக்கில் இருந்து வரும் ஒளியை, நீர் லென்ஸ் கொண்டு குவியச் செய்து நுண்ணோக்கியின் கீழ் வைக்கப்பட்டுள்ள பொருளிற்கு ஒளியூட்டினார். அதன் மூலம் அப்பொருளின் நுண்ணிய பகுதிகளை நுண்ணோக்கியின் மூலம் தெளிவாகக் காண முடிந்தது. 

அதன் அடிப்படையில் 1665 ஆம் ஆண்டு மைக்ரோகிராபியா என்ற தனது நூலினை  வெளியிட்டார். அதில் முதன் முதலில் செல் என்ற சொல்லினைப் பயன்படுத்தி திசுக்களின் அமைப்பினை விளக்கினார் . லத்தீன் மொழியில் செல்லுலா என்பதற்கு  சிறிய அறை என்று பொருள் ஆகும்.

செல்லைப் பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு செல் உயிரியல் எனப்படும்.

செல்லின் அமைப்பு

ஒரு செல் மூன்று முக்கி குதிகளைக் கொண்டுள்ளது.

1. செல்லைச் சுற்றி காணப்படும் வெளி உறையான செல் சவ்வு

2. திரவநிலைசைட்டோபிளாசம்

3. உட்கரு

பாக்டீரியா, அமீபா, கிளாமிடோமோனஸ் மற்றும் ஈஸ்ட் போன்றவை ஒரு செல் உயிரினத்திற்கு உதாரணமாகும். ஸ்பைரோகைரா, மாமரம், மற்றும் மனிதன் போன்றவை பல செல் உயிரினங்களுக்கு உதாரணமாகும்.

பாக்டீரியாக்கள் அளவில் மிகச் சிறியவை. அவை ஒரு செல்லின் --ஆல் ஆனவை. பாக்டீரியாவின் விட்டம் 0.1 முதல் 0.5 மைக்ரோ மீட்டர் அளவில் காணப்படுகின்றன.

நெருப்புக் கோழியின் முட்டை செல் 170 மில்லி மீட்டர் விட்டம் கொண்டது.

நமது உடலின் மிகவும் நீளமான செல் நரம்பு செல் ஆகும்.

தோராயமாக, மனித உடலில் உள்ள செல்களின் எண்ணிக்கை 3.7x1013 () 37,000,000,000,000.

பொதுவாக செல்கள் இரண்டு வகைகளாக பிரிக்கப்படுகின்றன. அவை தெளிவற்ற உட்கருவைக் கொண்ட புரோகேரியாட்டிக் செல்கள் மற்றும் தெளிவான உட்கருவைக் கொண்ட யூகேரியாட்டிக் செல்கள் ஆகும்.

புரோகேரியாட்டிக் செல்கள்

பாக்டீரியா போன்ற ஒரு செல்நுண்ணியிரிகளில் புரோகேரியாட்டிக் செல்கள் காணப்படுகின்றன. இவை தெளிவான உட்கருவினை கொண்டிருக்காது. இவற்றின் உட்கரு நியூக்ளியாய்டு என அழைக்கப்படுகின்றது. இச்செல்களின் நுண்ணுறுப்புகளைச் சுற்றி சவ்வுகள் காணப்படுவதில்லை.

இப் புவியில் முதன் முதலில் உருவான செல் புரோகேரியாட்டிக் செல் ஆகும். இவை 0.003 மைக்ரோ மீட்டர் முதல் 2.0 மைக்ரோ மீட்டர் வரையிலான விட்டம் கொண்டவை.

.கா: எக்ஸெரிச்சியா கோலை பாக்டீரியா - புரோகேரியாட்டிக் செல்

புரோகேரியாடிக் செல் மற்றும் யூகேரியாட்டிக்

செல்களுக்கு டயே ள்ள வேறுபாடுகள்


 

புரோகேரியாடிக் செல்

 

யூகேரியாட்டிக் செல்

 

ஒன்று முதல் இரண்டு மைக்ரான்விட்டம் கொண்டவை.

 

பத்து முதல் நூறு மைக்ரான் விட்டம் கொண்டவை.

 

செல் நுண் உறுப்புகளைச் சுற்றி சவ்வு காணப்படுவதில்லை.

 

செல் நுண் உறுப்புகளைச் சுற்றி சவ்வு காணப்படுகின்றது.

 

தெளிவற்ற உட்கரு கொண்டவை.

 

தெளிவான உட்கரு கொண்டவை

 

 

நியுக்ளியோலஸ் காணப்படுவதில்லை

 

நியுக்ளியோலஸ் காணப்படும்

தாவர செல்லின் முக்கியப் பண்புகள்

தாவர செல்கள் விலங்கு செல்களை விட அளவில்

பெரியவையாகவும், கடினத் தன்மை மிக்கதாகவும் உள்ளன.

 

தாவர செல்கள் தனைச் சுற்றி வெளிப்புறத்தில் செல் சுவரையும் அதனையடுத்து செல் சவ்வினையும் கொண்டுள்ளன.

தாவர செல்கள் பசுங்கணிகங்களை கொண்டுள்ளன. அவற்றில்

காணப்படும் பச்சையம் என்னும் நிறமி தாவரத்திற்கு அதன்

உணவினை தயாரித்துக் கொள்ள உதவுகின்றது.

நுண் குமிழ்கள் காணப்படுகின்றன ஆனால் சென்டிரியோல்கள் காணப்படவில்லை.

 

விலங்கு செல்லின் முக்கிய பண்புகள்

 

விலங்கு செல்கள், தாவர செல்களை வி அளவில் சிறியவை.

விலங்கு செல்கள் கடினத்தன்மை அற்றவை.

விலங்கு செல்லைச் சுற்றி செல் சவ்வு காணப்படுகிறது ஆனால் செல்சுவர் காணப்படுவதில்லை.

விலங்கு செல்லில் பசுங்கணிகங்கள் காணப்படுவதில்லை. இவை சிறிய நுண் குமிழ்களை கொண்டுள்ளன.

விலங்கு செல்லில் சென்ட்ரியோல்கள் உண்டு.

செல்கள் முப்பரிமாண அமைப்புடையவை.

செல்லின் நுண்ணுறுப்புகள் மற்றும் அதன் பணிகள்

செல்சுவர்


தாங்குபவர் (அல்லது) பாதுகாப்பவர்

செல் சவ்வு

செல்லின் கதவு

 

 

சைட்டோ பிளாசம்

 

செல்லின் நகரும் பகுதி

 

மைட்டோ காண்டிரியா

 

செல்லின் ஆற்றல் மையம்

 

பசுங் கணிகம்

 

செல்லின் உணவுத் தொழிற்சாலை

 

நுண் குமிழ்கள்

 

சேமிப்புக் கிடங்கு

 

உட்கரு (நியூக்ளியஸ்)

 

செல்லின் கட்டுப்பாட்டு மையம்.

 

உட்கரு உறை (நியூக்ளியஸ் உறை)

 

உட்கரு வாயில்(அல்லது) உட்கரு கதவு


செல்கள் பற்றிய முக்கிய வினா விடைகள்

1.    செல்லின் அளவை குறிக்கும் குறியீடு மைக்ரோ மீட்டர்

 

2.    யூகரியோடிக் செலின் கட்டுப்பாட்டு மையம் என்பது நியூக்ளியஸ் அல்லது

உட்காரு

 

3.    ஒரு செல் உயிரினம் அல்லாதது எது ஸ்பைரோகைரா. இது ஒரு பல

செல் உயிரினம்

 

4.    யூகரியோட் செல்லில் நுண்ணுறுப்புகள் காணப்படும் இடம்

சைட்டோபிளாசம்

 

5.    செல்லின் உணவு உற்பத்திக்கு காரணமாக உள்ளது பசுங்கணிகம்

 

6.    செல்லின் காவல்காரன் என்று அழைக்கப்படுவது செல் சவ்வு

 

7.    செல் என்ற வார்த்தையை உருவாக்கியவர் ராபர்ட் ஹூக்

 

8.    நெருப்புக் கோழியின் முட்டை செல்லின் விட்டம் 170 மில்லி மீட்டர்

9.    உயிரினங்களின் மிகச்சிறிய அலகு செல்

 

10. மிக நீளமான செல் நரம்பு செல்

 

11. பூமியில் முதன் முதலில் உருவான செல் புரோகேரியாட்டிக் செல்

 

12. செல்லின் கட்டுப்பாட்டு மையம் உட்கரு அல்லது நியூக்ளியஸ்

 

13. செல்லின் சேமிப்பு கிடங்கு நுண் குமிழ்கள்

 

14. உட்கரு வாயில் என்று அழைக்கப்படுவது உட்கரு உறை

 

15. ஆற்றல் உற்பத்தியாளர் என்று அழைக்கப்படுவது மைட்டோகாண்ட்ரியா

 

16. செல்லின் ஆற்றல் நாணயம் என்று அழைக்கப்படுவது ATP

 

17. செல்லின் வாயில் என்று அழைக்கப்படுவது செல் சவ்வு

Post a Comment

0 Comments