இடைக்கால இந்திய வரலாற்று ஆதாரங்கள்
ஔரங்கசீப்பின் அவைக்கள வரலாற்று அறிஞராக இருந்த காஃபிகானின் புகழ் பெற்ற கூற்று
“விசுவாசம் உள்ளவராக இருத்தல், லாப நோக்கம் இன்மை, ஆபத்துக்கு அஞ்சாமை, ஒருதலைபட்சமாக இல்லாதிருத்தல், விருப்பு வெறுப்பின்றி இருத்தல், நண்பருக்கும் அந்நியருக்குமிடையே வேற்றுமை பாராமை, நேர்மையுடன் எழுதுதல் ஆகியவை வரலாற்று ஆசிரியரின் கடமைகள்” என அவர் கூறியுள்ளார்.
சான்றுகளை
வகைப்படுத்துதல்
1. முதல்நிலைச் சான்றுகள்
2. இரண்டாம் நிலைச் சான்றுகள்
முதல்நிலைச் சான்றுகள்:
பொறிப்புகள்,(கல்வெட்டுகள்,செப்புப்பட்டயங்கள்),நினைவுச் சின்னங்கள், நாணயங்கள் ஆகியவையும் அவற்றிலிருந்து கிடைக்கப் பெறுகின்ற செய்திகளும் முதல்நிலைச் சான்றுகள் ஆகும்.
இரண்டாம் நிலைச் சான்றுகள்:
இலக்கியங்கள், காலவரிசையிலான நிகழ்வுப்பதிவுகள், பயணக் குறிப்புகள் வாழ்க்கைவரலாற்று நூல்கள், சுயசரிதைகள்
ஆகியன
இரண்டாம்
நிலைச்சான்றுகள்
ஆகும்.
பொறிப்புகள் - Inscriptions
கொடைகள் வழங்கப்பட்டதைக் குறிக்கும் செப்புப் பட்டயங்கள் சட்டபூர்வமான
ஆவணங்களாக
ஐயப்பாடுகளுக்கு
இடமில்லாத
மதிப்பினைக்
கொண்டுள்ளன.
சாதாரண மக்களின்
வாழ்நிலை
குறித்துக்
குறைவான
செய்திகளை
மட்டுமே
முன்
வைக்கும்
இச்சான்றுகள்
அரசர்களின் வாழ்க்கை
பற்றி
நேரடியான,
செறிவான,
அதிகஎண்ணிக்கையிலான
தகவல்களைக்
வழங்குகின்றன.
13 ஆம் நூற்றாண்டு முதலாக இஸ்லாமியப் பாரசீகத்தின் நடைமுறைகளின் காரணமாகவும் செப்புப்பட்டயங்கள் விலை அதிகமாக இருந்ததன் விளைவாகவும் அவற்றுக்கு மாற்றாகக் குறைந்த செலவிலான பனையோலைகளும், காகிதமும் பயன்பாட்டுக்கு வந்தன.
பிற்காலச்
சோழர்கள்
காலம்
- பத்து முதல் பதிமூன்றாம் நூற்றாண்டு
ஹம்பியிலுள்ள வித்தாலா, விருப்பாக்சா கோவில்கள் விஜய நகர அரசர்களின் (15ஆம் நூற்றாண்டு) பங்களிப்பைப் பறைசாற்றுபவையாகும்.
குவ்வத் - உல் - இஸ்லாம் மசூதி, மோத் - கி - மசூதி, ஜமா மசூதி, பதேப்பூர் சிக்ரி தர்கா
(இவையனைத்தும்
டெல்லியிலும்
அதற்கருகாமையிலும்
அமைந்துள்ளன),
சார்மினார் (ஹைதராபாத்) ஆகியன
இடைக்காலத்தைச்
சேர்ந்தமுக்கிய
மசூதிகளாகும்.
ஜெய்பூர், ஜெய்சால்மர், ஜோத்பூர் ஆகிய
இடங்களிலுள்ள
அரண்மனைகள்,
ராஜபுத்திரர்களின்
மேன்மைக்கான
அடையாளங்களாகும்.
வட இந்தியாவிலுள்ள பாழடைந்த நகரங்களான பிரோஷாபாத், துக்ளகாபாத்
ஆகியனவும்
தென்னிந்தியாவிலுள்ள
ஹம்பியும் இடைக்கால
இந்திய
வரலாற்றுக்கான
சான்றுக்கருவூலங்களாகும்.
நாணயங்களில் உள்ள
உலோகங்களின்
கலவை
பேரரசின் பொருளாதார நிலை குறித்த
செய்திகளை
வழங்குகின்றன.
அரசர்களின் இராணுவப் படையெடுப்புகள், பிரதேச விரிவாக்கம், வணிகத் தொடர்புகள், சமய நம்பிக்கைகள் போன்றவையும் நாணயங்களில் இடம்பெற்றுள்ளன.
முகமது கோரி தான் வெளியிட்ட தங்க நாணயத்தில் பெண் தெய்வமான இலட்சுமியின் வடிவத்தைப் பதிப்பித்துத்தனது பெயரையும் பொறிக்கச் செய்திருந்தார்.
டெல்லி சுல்தான்களின்
காலகட்டத்தை
அறிந்து
கொள்ள
’ஜிட்டல்’ என்னும்
செப்பு
நாணயங்கள்
பயன்படுகின்றன.
இல்துமிஷ் அறிமுகம்
செய்த
’டங்கா’
எனப்படும்
வெள்ளி நாணயங்கள், அலாவுதீன் கில்ஜியின் தங்க நாணயங்கள், முகமது பின் துக்ளக்கின் செப்பு நாணயங்கள்
போன்றவை
நாணயங்கள்
பரவலான
பயன்பாட்டில்
இருந்ததையும்
நாட்டின்
பொருளாதார
வளம்
அல்லது
நலிவு
ஆகியவற்றைச்
சுட்டுவதாகவும்
அமைந்துள்ளன.
ஒரு ஜிட்டல் 3.6 வெள்ளி குன்றிமணிகளைக்கொண்டதாகும்.
48 ஜிட்டல்கள் 1 வெள்ளி டங்காவுக்குச் சமமாகும்.
சமய இலக்கியங்கள்
தொடக்கத்தில் தென்னிந்தியாவிலும் பின்னர் வட இந்தியாவிலும் தோன்றிய பக்தி இயக்கம், பக்தி இலக்கியங்களின் வளர்ச்சிக்கு வழியமைத்தன.
சோழர்களின் காலம் பக்தி இலக்கியங்களின் காலம் என்று அழைக்கப்படுகின்றது.
‘கம்பராமாயணம்’, சேக்கிழாரின் ‘பெரியபுராணம்’, பன்னிரு
ஆழ்வார்களால்
இயற்றப்பட்டு
நாதமுனியால் தொகுக்கப்பட்ட‘நாலாயிர திவ்விய பிரபந்தம்’,
அப்பர்,
சம்பந்தர்,
சுந்தரர்
ஆகியோரால்
இயற்றப்பட்டு
நம்பியாண்டார் நம்பியால்
தொகுக்கப்பட்ட
’தேவாரம்’, மாணிக்கவாசகரின் ’திருவாசகம்’ ஆகியவை
சோழர்
காலப்
பக்தி
இலக்கியங்களாகும்.
ஜெயதேவரின் ’கீதகோவிந்தம்’ (12 ஆம் நூற்றாண்டு) தென்னிந்திய பக்தி இலக்கிய மரபின் தொடர்ச்சியாகும்.
பதினைந்தாம் நூற்றாண்டைச்
சேர்ந்த
இறை
நிலை
உணர்வு
பெற்ற
கவிஞரான கபீர்தாஸ்
பக்தி
இயக்கத்தால்
கவரப்பெற்றவராவார்.
சமயச் சார்பற்ற இலக்கியங்கள்
கங்கா தேவியால் இயற்றப்பட்ட ’மதுராவிஜயம்’, கிருஷ்ண தேவராயரின் ’அமுக்தமால்யதா’ ஆகிய இலக்கியங்கள் விஜயநகரப் பேரரசுடன் தொடர்புடைய நிகழ்வுகளையும் தனி நபர்களையும் நாம் அறிந்து கொள்ள உதவுகின்றன.
சந்த்பார்தையின் ’பிருதிவி ராஜ ராசோ’ ராஜபுத்திர அரசர்களின் மனத்துணிச்சலைப் படம்பிடித்துக்காட்டுகின்றது.
துருக்கியப் படையெடுப்பின் போது நடந்தவை குறித்து இந்தியத் தரப்பிலிருந்து குறிப்புகள் ஏதுமில்லை.
இஸ்லாமுக்கு முந்தைய காலம் குறித்து உள்ள ஒரேசான்று கல்ஹணரின் ’ராஜதரங்கினி’ (11ஆம் நூற்றாண்டு) மட்டுமே.
நூல்கள், வாழ்க்கை வரலாறுகள், சுயசரிதைகள்
அடிமை வம்சத்தைச் சேர்ந்த சுல்தான் நஸ்ருதின் மாமூதுவால் ஆதரிக்கப்பட்ட மின்கஜ் உஸ்சிராஜ் என்பார் ’தபகத்-இ-நஸிரி’ எனும் நூலை எழுதினார்.
இந்நூலின் சுருக்க உரை முகமது கோரியின் படையெடுப்பில் தொடங்கி கி.பி. 1260 வரையிலான நிகழ்வுகள் குறித்த செய்திகளைக் கூறுகின்றன.
தன்னை ஆதரித்த சுல்தானின் பெயரையே இச்சுருக்க உரைக்கும், மின்கஜ் உஸ்சிராஜ் சூட்டினார்.
பதிமூன்றாம் நூற்றாண்டில் சுல்தான் இல்துமிஷின் இறுதிக் காலத்தில் கஜினியிலிருந்து புலம் பெயர்ந்து வந்திருந்த ஹசன் நிஜாமி என்பார் ’தாஜ்-உல்-மா-அசிர்’ எனும் நூலை எழுதினார். குத்புதீன் ஐபக் பற்றிய பல செய்திகளை இந்நூல் முன்வைக்கிறது.
இந்நூலே டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றைக் கூறும், அரசின் இசைவு பெற்ற முதல் நூலாகும்.
முகமது பின் துக்ளக்கின் அரசவை வரலாற்றாசிரியர் ஜியா - உத் - பரணி ’தாரிக் - இ - பிரோஷாகி’ எனும் நூலைப் படைத்தார்.
இந்நூல் கியாசுதீன் பால்பன் முதல் பிரோஷ் ஷா துக்ளக்கின் தொடக்கக் கால ஆட்சி வரையிலான டெல்லி சுல்தானியத்தின் வரலாற்றை விளக்குகிறது.
பெரிஷ்டாவின் (16ஆம் நூற்றாண்டு) தாரிக் - இ - பெரிஷ்டா இந்தியாவில் முகலாய ஆட்சியின் எழுச்சி குறித்து விவரிக்கின்றது.
தபகத் - அராபியச் சொல் - தலைமுறைகள் அல்லது நூற்றாண்டுகள் என்று பொருள்.
தஜூக் - பாரசீகச் சொல் - சுயசரிதை எனப்பொருள்.
தாரிக் அல்லது தாகுயூக் – அராபியச் சொல் - இதன் பொருள் வரலாறு என்பதாகும்.
16 ஆம் நூற்றாண்டில் பாபரின் ’பாபர் நாமா’, அபுல் பாசலின் ’அயினி அக்பரி’, ’அக்பர் நாமா’ ஆகிய நூல்கள்
இவ்விரு
பேரரசர்கள்
குறித்த
முழுமையான
விவரங்களை
எடுத்துரைக்கின்றன.
17 ஆம் நூற்றாண்டில் தனது
வாழ்க்கை
நினைவுகளாக
ஜஹாங்கீர் எழுதிய
”தசுக் - இ - ஜாஹாங்கீரி”
அக்காலக்கட்ட
வரலாற்றின்
மீது
அதிகவெளிச்சத்தைப்
பாய்ச்சுகிறது.
நிஜாமுதீன் அகமத்
என்பவரால்
”தபகத்-இ-அக்பரி”
எனும்
நூல்
எழுதப்பட்டது.
”தாரிக்-இ- பதானி” (பதானியின் வரலாறு) ஒரு
மிகச்
சிறந்த
நூலாகும்.
1595 இல்
வெளியிடப்பட்ட
இந்நூல்
மூன்று தொகுதிகளைக்
கொண்டுள்ளது.
அக்பருடைய ஆட்சியைப் பற்றி பேசுகிற தொகுதி, அவரின் நிர்வாகம் தொடர்பாக, குறிப்பாக மதக் கொள்கைகுறித்து, ஒளிவு மறைவின்றி வெளிப்படையாக விமர்சன பூர்வமான கருத்துக்களை முன்வைக்கிறது.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM