அன்றாட வாழ்வில் தாவரங்கள்
ஒரு நாட்டிற்குப் பெருமளவு பொருளாதார வளங்களைத் தாவரங்கள் அளிக்கின்றன.
மனிதர்களுக்கும் தாவரங்களுக்கும் இடையேயான
தொடர்பு மற்றும்
தாவரங்களின் பொருளாதாரப்
பயன்பாடு ஆகியவற்றைப்
பற்றிப் படிக்கும்
அறிவியல் பிரிவு
பொருளாதாரத் தாவரவியல் எனப்படுகிறது.
தாவரங்களின் பொருளாதார மதிப்பு மற்றும் பயன்பாடுகளின் அடிப்படையில் தாவரங்களைக் கீழ்க்கண்டவாறு பிரிக்கலாம்.
1. உணவுத் தாவரங்கள்
2. நறுமணத் தாவரங்கள்
3. மருத்துவத் தாவரங்கள்
4. நார்த் தாவரங்கள்
5. மரக்க ட்டை தரும் தாவரங்கள்
6. அலங்கா ரத் தாவரங்கள்
உணவுத் தாவரங்களை நாம் பின்வருமாறு பிரிக்கலாம்.
1. காய்கறிகள்
2. தானியங்கள்
3. பருப்பு வகைகள்
காய்கறிகள்
நாம் தாவரத்தின் பல்வேறு பாகங்களில் இருந்து காய்கறிகளைப் பெறுகிறோம்.
வேர்கள்
(எ.கா) பீட்ரூட், கேரட்.
இலைகள்
(எ.கா) கீரைகள்,முட்டைக்கோஸ், கறிவேப்பிலை.
தண்டுகள்
(எ.கா) கரும்பு, உருளைக்கிழங்கு, கருணைக் கிழங்கு.
மலர்கள்
(எ.கா) வாழை ப்பூ, காலிபிளவர் .
கனிகள்
(எ.கா) நெல்லி, கொய்யா .
தானியங்கள்
தானியங்கள் என்பவை புல்வகைத் தாவரங்களில் விளைவிக்கப்படும் உணவுப் பொருளாகும்.
(எ.கா.) நெல் , கோதுமை , கம்பு, கேழ்வரகு, தினை .
பருப்பு வகைகள்
அவரைக் குடும்பத்தைச் சார்ந்த தாவரங்களில் உள்ள உண்ணக் கூடிய விதைகளே பருப்புகள் எனப்படுகின்றன.
பருப்புகள் கனி உறையினுள் வளர்கின்றன.
(எ.கா) கொண்டைக்கடலை , பச்சைப்பயிறு.
உலகள வில் கனிகள் மற்றும் காய்கறிகள் உற்பத்தியில் இந்தியா இரண்டாம் இடத்தை வகிக்கிறது.
நறுமணத் தாவரங்கள்
வெப்ப மண்டலத் தாவரங்களிலிருந்து பெறப்படும் நறுமணப் பொருள்கள் உணவிற்கு நறுமணமூட்டப் பயன்படுகின்றன.
உலக உணவு தினம் அக்டோபர் 16.
ஐக்கிய நாடுகள் அவையின் உணவு மற்றும் வேளாண் நிறுவன அமைப்பு ஒவ்வோர் ஆண்டும் ஒரு
கருப் பொருளை மையமாகக் கொண்டு இத்தினத்தினைக் கொண்டாடுகிறது.
இந்திய நறுமணப் பொருள்கள்
(எ.கா.) ஏலக்காய் , மிளகு, கறிவேப்பிலை , வெந்தயம், பெருஞ்சீரகம், ஓமம், பிரியாணி இலை , சீரகம், கொத்தமல்லி விதைகள், மஞ்சள், கிராம்பு, இஞ்சி, சாதிக்காய் மற்றும் இலவங்கப்பட்டை .
1. வைட்ட மின் “சி” சத்து குறைவால் வரும் ஸ்கர்வி போன்ற நோய்களுக்கு மருந்தாக , நோய் எதிர்ப்புச்ச க்தியை மேம்படுத்த - நெல்லி
2. இருமல், சளி, மார்புச் சளி மற்றும் மூச்சுக் குழாய் அழற்சியைக் குணப்படுத்த - துளசி
3. மலமிளக்கியாக, காயத்தைக் குணப்படுத்த , தோல் எரிச்சலையும், குடல் புண்ணையும் குணப்படுத்த - சோற்றுக் கற்றாழை
4. கிருமி நாசினியாக, தோல் நோய்களுக்கு மருந்தாக - வேம்பு
5. கிருமி நாசினி, சிறிய காயம்பட்ட இடங்களில் தொற்று ஏற்படாமல் தடுக்க - மஞ்சள்
நார் தரும் தாவரங்களை நாம் பயன்பாட்டின் அடிப்படையிலும், தாவரத்தின் எப்பகுதியில் இருந்து நார் கிடைக்கிறது என்ற அடிப்படையிலும் பின்வருமாறு பிரிக்கலாம்.
2. கயிறு நார்கள் (கயிறு தயாரிக்க உதவும் நார்கள்) (எ.கா) தென்னை
3. நிரப்பும் நார்கள் (மெத்தைகள் தயாரிக்க உதவும் நார்கள்) (எ.கா) இலவம் பஞ்சு
கிடைக்கப்பெறும் தாவர பாகங்களின் அடிப்படையில்
2. தண்டு அல்லது தண்டிழை நார்கள் (எ.கா) ஆளி, சணல்
3. இலை நார்கள் (எ.கா) கற்றாழை
4. உரிமட்டை நார்கள் (எ.கா) தேங்காய்
இந்தியாவில் மேற்கு வங்காளம், அஸ்ஸாம், ஒடிசா, பீகார், உத்திரப் பிரதேசம், திரிபுரா மற்றும் மேகாலயா ஆகிய ஏழு மாநிலங்களில் சணல் பயிரிடப்படுகின்றது.
மேற்கு வங்காளம் மட்டும் இந்திய சணல் உற்பத்தியில், 50 விழுக்காடு உற்பத்தி செய்கிறது.
மரக்கட்டை தரும் தாவரங்கள்
வணிகரீதியாகப் பயன்படும் மரக்கட்டைகள் அதன் வலிமை மற்றும் அடர்த்தியின் அடிப்படையில் வன்கட்டைகள் மற்றும் மென் கட்டைகள் என இரண்டு வகைகளாகப் பிரிக்கப்ப டுகின்றன.
வன்கட்டைகள்
நிலவாழ் பூக்கும் தாவரங்களான ஆஞ்சியோஸ்பெர்ம் என்னும் மிகப் பெரும் பிரிவினைச் சார்ந்த தாவரங்களிலிருந்து வன்கட்டைகள் பெறப்படுகின்றன.
உயர்தர மரச்சாமான்கள், நாற்காலிகள், மேற்கூரைகள் மற்றும் மரக் கட்டுமானங்கள் வன்கட்டையினைப் பயன்படுத்திச் செய்யப்படுகின்றன.
இவை பொதுவாகப் பூவாத் தாவரங்களான ஜிம்னோஸ்பெர்ம் வகை தாவரங்களில் இருந்து பெறப்படுகின்றன.
ஒரு சில ஆஞ்சியோஸ்பெர்ம் தாவரங்களும் மென்கட்டைகளைத் தருகின்றன.
இவை பொதுவாக ஒட்டுப் பலகைகள் மரப்பெட்டிகள், நடுத்த ரமான அடர்த்தி கொண்ட பலகைகள் மற்றும் தாள்கள் தயாரிக்கப் பயன்படுகின்றன.
(எ.கா) கடம்பு, பைன்
மரக் கட்டைகளிலிருந்து மெல்லியதாகச் சீவி எடுக்கப்படுகின்ற மரத்தகடுகளை உரிய வகையில் ஒன்றின் மேலொன்று அடுக்கடுக்காக ஒட்டி உருவாக்கப்படுவதே ஒட்டுப்பலகை (Ply wood) ஆகும்.
இது ஒருவகைக் கூட்டு மரப் (composite wood) பலகை ஆகும்.
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM