6 th SCIENCE NEW BOOK 3 rd TERM / லவாய்சியர் & நீர்.

லவாய்சியர் 1743 - 1794

1. லவாய்சியர் மாசாரின் கல்லூரியில் வேதியியல், தாவரவியல், வானவியல் மற்றும் கணிதமும் பயின்றார். தனது தந்தையின் விருப்பத்திற்கேற்ப சட்டப் படிப்பும் பயின்றார்.

 

2. 1771 ல் மேரி அன்னே என்பவரை மணந்து கொண்டார்.

 

3. மேரி அன்னே வடிவமைத்த துல்லியமான அளவீட்டுக் கருவிகள் இல்லாமல் லவாய்சியர் ஆய்வுகளை மேற்கொண்டு இருக்க முடியாது.

 

5. ஆய்வுகளைப் பல முறை செய்து, காற்றில் ஆக்சிஜனின் அளவு 20 சதவீதமாக இருக்க வேண்டும் என முடிவு செய்தார்.

 

6. துருப்பிடிக்கும் போதும், பொருள்கள் எரியும் போதும் இதே போன்ற ஆக்சிஜனேற்றம் தான் நிகழ்கிறது எனவே நமது சுவாசித்தலானது மெதுவாக எரியும் நிகழ்விற்குச் சமமானது எனக் கூறினார்.

 

7. லவாய்சியரின் ஆய்வுகள் காற்று ஒரு கலவை என நிருபித்தன .

 

8. லவாய்சியர் நீரானது ஹைட்ரஜனும், ஆக்சிஜனும் இணைந்து உருவானது என நிருபித்தார்.

 

9. நீரும் காற்றும் அடிப்படைப் பொருள்கள் அல்ல என நிறுவியதன் தொடர்ச்சியாக பஞ்ச பூதம் என்ற கருத்து அடிபட்டுப் போனது.

 

10. பொருள்கள் வெவ்வேறு தனிமங்களின் அணுக்களால் ஆக்கப்பட்டு இருக்கின்றன என்ற கருத்து எழுந்தது.

 

11. 1789 ஆம் ஆண்டு இவர் வெளியிட்ட Elements of Chemistry எனும் புத்தகம் தற்கால வேதியியலுக்கு அடிப்படையாக அமைந்தது.

 

12. நவீன வேதியியல் புரட்சியை ஏற்படுத்தியவர் என லவாய்சியர்

போற்றப்படுகிறார்.

 

13. இரும்புத் தகடை எரித்த பின் அதன் எடை அதிகமாக இருக்கிறது - பாய்லே

 

நினைவில் கொள்க

1. மனிதன் உள்ளிட்ட அனைத்து விலங்கினங்களும், தாவரங்களும் உயிர் வாழ இன்றியமையாத பகுப்பாக உள்ளது நீராகும்.

 

2. உலகில் உள்ள மொத்த நீரின் அளவில் 97% நீர் கடல்கள் மற்றும் பெருங் கடல்களிலேயே உள்ளது.

 

3. உலகம் முழுவதிலும் 3% நன்னீரே உள்ளது. அதுவும் பனிப் படிவுகளிலும், பனிப் பாறைகளிலும் உறைந்துள்ளது.

 

4. ஏரிகள், ஆறுகள், குட்டைகள் ஆகிய அனைத்திலுமாக 0.3% நீர் மட்டுமே மேற்பரப்பு நீராக உள்ள து.

 

5. மண்ணில் உள்ள ஈரம் நிலத்தடியில் நீர் இருப்பதைக் குறிக்கிறது.

 

6. இயற்கையில் நீராவிப் போக்கு, ஆவியாதல், ஆவி சுருங்குதல் மற்றும் மழை பொழிதல் ஆகியவற்றின் தொடர்ச்சியான நிகழ்விற்கு நீர் சுழற்சி என்று பெயர்.

 

7. புவிப்பரப்பின் கீழே மண்ணில் நிறைந்திருக்கும் அல்லது மண்ணில்

செறிந்திருக்கும் நீர் நிலத்தடி நீர் எனப்படும்.


I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும் 

1. உலகில் உள்ள மொத்த நீரில் 97% ஆகும்.

. நன்னீர்

. தூயநீர்

. உப்பு நீர்

. மாச டைந்த நீர்


2. பின்வருவனவற்றுள் எது நீர்சுழற்சியின் ஒரு படிநிலை அல்ல?

. ஆவியாதல்

. ஆவி சுருங்குதல்

. மழை பொழிதல்

. காய்ச்சி வடித்தல்

 

3. பின்வரும் முறைகளுள் நீராவியினை வளிமண்டலத்தினுள் சேர்ப்பது எது?

I. நீரா விப் போக்கு

II. மழை பொழிதல்

III. ஆவி சுருங்குதல்

IV. ஆவியாதல்

 

. II மற்றும் III

. II மற்றும் IV

. I மற்றும் IV

. I மற்றும் II

 

4. நன்னீரில் சுமார் 30% நீர் எங்கே காணப்படுகிறது?

. பனி ஆறுகள்

. நிலத்த டி நீர்

. மற்ற நீர் ஆதார ங்கள்

. மேற்பர ப்பு நீர்


5. வீட்டில் நீர் சுத்திகரிப்பின் பொழுது பெருமளவு உவர்ப்பு நீர் வெளியேறுகிறது. வெளியேறிய உவர்ப்பு நீரினை மீளப் பயன்படுத்தும் சிறந்த வழியாதெனில்

. வெளியேறிய நீரை ஆழ்துளை கிணற்றருகே விட்டு கசிய வைக்கலாம்.

. அந்நீரை செடிகளுக்கு நீரூற்ற பயன்படுத்தலாம்.

. வெளியேறிய நீரை கொதிக்க வைத்து, பின் குளிர வைத்துப் பருகலாம்.

. அதில் அதிகமான உயிர் சத்துக்கள் இருப்பதால் அதனை  சமையலுக்குப் பயன்படுத்தலாம்.

 

II. கோடிட்ட இடத்தை நிரப்புக

1. இயற்கையாகக் கிடைக்கும் நீரில் ___________ சதவீதம் நீர் மனிதனின் பயன் பாட்டிற்காக உள்ள து. 3 %

 

2. நீர் ஆவியாக மாறும் நிகழ்விற்கு ______________ என்று பெயர். ஆவியாதல்

 

3. நீரோட்டம் மற்றும் நீர் விநியோகத்தினை முறைப்படுத்தும் பொருட்டு ஆற்றின் குறுக்கே _____________ கட்டப்படுகிறது. அணை

 

4. ஆறுகளில் பாயும் நீரின் அளவு __________ ­­காலங்களில் பெருமளவு அதிகமாக இருக்கும்.  மழை

 

5. நீர் சுழற்சியினை என்றும் ________________அழைக்கலாம். ஹைடிராலஜிக்கல் சுழற்சி

 

III. சரியா () தவறா எனக் கூறுக. தவறாக இருப்பின் சரியாக எழுதவும்

1. ஆறுகள், ஏரிகள் மற்றும் குளங்களில் காணப்ப டும் நீர் மனித குலத்தின் பயன்பாட்டிற்கு ஏதுவானதாக இல்லை. தவறு

 

2. நீரோட்டம் நிலப் பரப்பை சந்திக்கும் இடம் கடல் ஆகும். தவறு

 

3. சூரிய வெப்பத்தால் மட்டுமே ஆவியாதல் நிகழும். சரி

 

4. குளிர்வித்தலால் புற்களின் மீது பனி உருவாகும். சரி

 

5. கடல் நீரினை நேரடியாகப் பாசனத்திற்குப் பயன்படுத்தலாம். தவறு

 

IV. பொருத்துக

1. வெள்ளம் - அதிகளவு மழை

2. மேற் பரப்பு நீர் - ஏரிகள்

3. சூரிய ஒளி - ஆவியாதல்

4. மேகங்கள் - நீராவி

5. உறைந்த நீர் - துருவங்கள்

 FREE PDF MATERIALS  CLICK HERE


Post a Comment

0 Comments