6 th SCIENCE NEW BOOK 3 rd TERM : அன்றாட வாழ்வில் தாவரங்கள் PART - 2

அன்றாட வாழ்வில் தாவரங்கள் PART - 2



அலங்காரத் தாவரங்கள்

வீடுகள், தோட்டங்கள் மற்றும் பூங்காக்களை அழகுபடுத்த செம்பருத்தி, நந்தியாவட்டை , குரோட்ட ன்ஸ் போன்ற பெருஞ்செடிகளும்,

 

முல்லை , அலமான்டா ,காகிதப்பூ போன்ற கொடிவகைகளும்,

 

சரக்கொன்றை , மந்தாரை , டிலோனிக்ஸ் மரம் (காட்டுத்தீ), ஆகிய மரவகைகளும் வளர்க்கப்படுகின்றன.

 

அழகியல் காரணங்களுக்காக வளர்க்கப்படும் தாவரங்கள் அலங்காரத் தாவரங்கள் எனப்ப டுகின்றன.

 

மலர் தரும் தாவரங்களை வளர்க்கும் மலர்வளர்ப்பு தோட்டக்கலையின் முக்கியப் பிரிவாக இருக்கிறது.

 (.கா) மல்லிகை, ரோஜா, செவ்வந்தி, கார்னேஷன், ஜெர்பரா.

 


பட்டுப்புழுக்கள் மல்பெரி இலையை உணவாக எடுத்துக்கொண்டு மல்பெரி தாவரத்தில் வசிக்கின்றன.


தாவரங்களின் அயல் மகரந்தச் சேர்க்கைக்கு விலங்குகள், பூச்சிகள், மற்றும் பறவைகளின் பங்கு மிக அவசியமாகும்.

 

மலர்களின் பிரகாசமான வண்ணங்கள், மணம் மற்றும் தேன் ஆகியவை பூச்சிகளை ஈர்க்கின்றன.

ஓசனிச்சிட்டு - Humming Bird

 

தேனீக்கள் அயல்மகரந்தச் சேர்க்கைக்கு உதவுவதோ டு, தேனையும் நமக்கு அளிக்கின்றன.

 

நீலப்பச்சை ப்பாசி, பாக்டீரியா, சூடோமோனாஸ் ஆகியவை வளிமண்ட நைட்ரஜனை மண்ணில் நிலை நிறுத்தி மண்வளத்தை அதிகரித்து, விவசாயத்திற்கு உதவுகின்றன.

(.கா) காட்டா மணக்கு.

 

தாவரக் கழிவுகளிலிருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.

 (.கா) சர்க்கரை ஆலைக் கழிவுகள்.

 

பாலக்கீரை

மூட்டு முடக்குவாதம் என்பது அனைத்து வயதினருக்கும் மூட்டு மற்றும் முழங்கால் பாதிப்பை ஏற்படுத்தும் ஒரு நோயாகும்.

இந்த நோய்க்கான மருந்தினை பாலக்கீரையிலிருந்து தற்போது மத்திய மருந்து ஆராய்ச்சி நிறுவன (CDRI - Central Drug Research Institute – Lucknow) விஞ்ஞானிகள் நானோ உருவாக்கத்தின் (nano formulation) மூலம் உருவாக்கியுள்ள னர்.

 

எண்ணெய் பூசப்பட்ட யூரியா 

இந்திய விவசாயிகள் பயிர் வளர்ச்சியைப் பெருக்க யூரியாவினை உரமாகப் பயன்படுத்தி யூரியாவினை இந்திய விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

 

இது நைட்ரஜனை மெதுவாக வெளியிடுவதால் தாவரங்கள் அதிக அளவு நைட்ரஜனை எடுத்துக் கொள்கின்றன.


இது யூரியாவினால் சுற்றுச் சூழலுக்கு ஏற்படும் பாதிப்பையும் குறைக்கிறது.

 

அவரைக் குடும்பத்தைச் சார்ந்த உண்ணக்கூடிய விதைகளே பருப்புகள் எனப்படுகின்றன.


 I . சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

 1. தாவரங்களின் மகரந்தச் சேர்க்கைக்கு உதவும் பறவை .

. வாத்து

. கிளி

. ஓசனிச்சிட்டு

. புறா


2. இயற்கையான கொசு விரட்டி

. ஜாதிக்கா ய்

. மூங்கல்

. இஞ்சி

. வேம்பு


3. பின்வருவனவற்றுள் எது வேர் அல்ல?

. உருளைக் கிழங்கு

. கேரட்

. முள்ளங்கி

. டர்னிப்

 

4. பின்வருவனவற்றுள் எது வைட்ட மின் ‘C’ குறை பாட்டைப் போக்குகிறது?

. நெல்லி

. துளசி

. மஞ்சள்

. சோற்றுக் கற்றாழை

 

5. இந்தியாவின் தேசிய மரம் எது?

. வேப்ப மரம்

. பலா மரம்

. ஆலமரம்

. மாமரம்

 

II. கோடிட்ட இடங்களை நிரப்புக

1. ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் ____________ ஆம் நாள் உலக உணவு தினமாகக் கொண்டாப்படுகிறது. அக்டோபர் 16

 

2. ______________ நெசவு நாருக்கு எடுத்துக்காட்டாகும். பருத்தி

 

3. நான் தமிழ்நாட்டின் மாநில மரம். நான் யார்? பனை மரம்

 

III. சரியா, தவறா? தவறாக இருந்தால் சரியான விடையை எழுதுக

1. அழகிற்காக வளர்க்கப்படும் தாவரங்கள் மென்கட்டைகள் என அழைக்கப்படுகின்றன. தவறு

 

2. பட்டுப்புழுக்கள் மல்பெரி இலையை உணவாக உட்கொள்கின்றன. சரி

3. அலங்காரத் தாவரமாகக் காலிபிளவர் தாவரம் பயன்படுகிறது. தவறு

 

4. கோடை காலத்திற்குப் பருத்தி உடைகள் ஏற்றதன்று. தவறு

 

5. கரும்புத் தாவரம் உயிரி எரிபொருளாகப் பயன்படுகிறது. சரி

 

IV. பின்வருவனவற்றைப் பொருத்துக.

1. நார் தரும் தாவரம் - சணல்

2. வன்கட்டை - தேக்கு

3. வேம்பு - கிருமி நாசினி

4. ஏலக்காய் - நறுமணப் பொருள்

5. கம்பு - தானியம்

 

V. ஒப்பிடுக

1. மாம்பழம் : கனி : : மக்காச் சோளம் : தானியம்

2. தென்னை : நார் : : ரோஜா : மலர்

3. தேனீக்கள் : மகரந்தச் சேர்க்கையாளர் : : மண்புழு : உழவனின் நண்பன்

 

Post a Comment

0 Comments