2020 AUGUST 1 & 2 CURRENT AFFAIRS IN TAMIL.

2020 ஆகஸ்ட் 1 & 2 நடப்பு நிகழ்வுகள்


Refer from தி ஹிந்துதினமணிதினத்தந்தி & தினகரன்

1. மத்திய அரசு பசுமை விவசாய திட்டத்தை தொடங்கி உள்ள மாநிலம் மிசோரம்.

2. இரண்டு அடுக்கு பெட்டிகள் கொண்ட சரக்கு ரயில் சென்னை ரயில்வே கோட்டத்தில் அறிமுகம் செய்யப்பட்டது.

 3. 6 வது BRICS சுற்றுச்சூழல் அமைச்சர்கள் கூட்டம் 30.7.2020 அன்று இணைய வழியில் நடைபெற்றது.

4. ஆந்திராவில் 3  தலைநகரங்கள் சட்ட மசோதாவிற்கு ஆளுநர் பிஸ்வபூஷன் ஒப்புதல் வழங்கியுள்ளார்.

ஆந்திராவின் 3 தலைநகரங்கள்

1. அமராவதி - சட்டப்பேரவை செயல்படும் இடம்.

2. விசாகப்பட்டினம் - தலைமைச் செயலகம் செயல்படும் இடம்.

3. கர்னூல் - உயர் நீதிமன்றம் செயல்படும் இடம். 

5. இந்திரா ரசோய் யோஜனா என்ற திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் ராஜஸ்தான். ராஜஸ்தான் மாநிலத்தின் முதலமைச்சர் அசோக் கெஹலாட்.

6. ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டத்தில் 24 மாநிலங்கள் இணைந்துள்ளது.

7. பள்ளி மாணவர்களின் ஊட்டச்சத்தை மேம்படுத்த மதிய உணவுடன் காலை உணவு வழங்கப்படும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

8. புதிய கல்விக் கொள்கை விருப்பத் தேர்வான வெளிநாட்டு மொழி பட்டியலிலிருந்து சீன மொழியான மாண்டரின் நீக்கம் செய்யப்பட்டுள்ளது.

9. கண்புரை அறுவை சிகிச்சை இன்றி தடுக்கும் எளிய, செலவு குறைவான முறையை INST விஞ்ஞானிகள் உருவாக்கியுள்ளனர்.

2020 JULY 29, 39 & 31 CURRENT AFFAIRS ONLINE TEST CLICK HERE

10.  BeiDou - 3

  • BeiDou - 3 என்பது சீனாவால் உருவாக்கப்பட்டுள்ள உலக இடங்காட்டி செயற்கைக்கோள் அமைப்பாகும்.
  • BeiDou - 3 பயன்பாட்டிற்கு வந்த நாள் JULY 31, 2020.
  • இதன் அறிமுக விழா பெய்ஜிங்கில் (சீனா) நடைபெற்றது.
  • இது GPS க்கு மாற்றாக சீனாவால் உருவாக்கப்பட்டதாகும்.

11. முஸ்லிம் பெண்கள் உரிமை தினம் ஆகஸ்ட் 1 அன்று அனுசரிக்கப்படுகிறது.

12. உலக அங்கிலோ - இந்தியர்கள் தினம் ஆகஸ்ட் 2 அன்று அனுசரிக்கப்படுகிறது.

13. BIS - CARE எனும் மொபைல் செயலியை இந்திய தர வாரியம் அறிமுகம் செய்துள்ளது.

  • இந்த செயலியின் மூலம் ISI & Hallmark தரக் குறியீடுகள் உண்மை தன்மையை சோதித்து பார்க்க முடியும். மேலும் இச்செயலின் மூலம் புகார் அளிக்கவும் முடியும்.

14. ஜம்மு - காஷ்மீர் பகுதியில் வசித்து வந்த வால்மிகி சமுதாய மக்களுக்கு 63 ஆண்டு போராட்டத்திற்கு பிறகு குடியுரிமைச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.

15. இந்திய இளையோர் மக்கள்தொகை விவரத்தை மத்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையர் அலுவலகம் வெளியிட்டுள்ளது.

16. கிராமோத்யோக் விகாஸ் யோஜனா என்ற திட்டத்தை மத்திய சிறு குறு மற்றும் நடுத்தர தொழில்கள் அமைச்சகம் தொடங்கியுள்ளது. இத்திட்டத்தின் நோக்கம் அகர்பத்தி (ஊதுபத்தி) தயாரிக்கும் தொழிலாளர்களுக்கு உபகரணங்கள் மற்றும் நலத்திட்டங்கள் வழங்குவது.

17. பராக்கா என்ற அணு உலையை தொடங்கியுள்ள நாடு ஐக்கிய அரபு எமிரேட்ஸ்.

18. Bharat Air Fibre என்ற சேவை மகாராஷ்டிராவில் உள்ள அங்கோலாவில் தொடங்கப்பட்டுள்ளது. இத்திட்டத்தை தொடங்கி வைத்தவர் மத்திய மனிதவள மேம்பாட்டு, மின்னணு தகவல் தொடர்பு மற்றும் தகவல் தொழில் நுட்பத் துறை அமைச்சர் திரு. சஞ்சய் தோத்ரே.

FREE PDF MATERIALS   CLICK HERE

 TODAY’S GK QUESTIONS & ANSWERS

1. அண்டத்தில் கூடுதலாக காணப்படும் ஒரு பொதுவான நிலை

பிளாஸ்மா

2. சூரியனும் நட்சத்திர மண்டலமும் சேர்ந்த கலப்பு

பிளாஸ்மா

3. மிகக் குறைவான தட்பவெட்ப நிலையில் காணப்படும் வாயு நிலை போன்ற பருப்பொருள்களின் நிலை 

போஸ் ஐன்ஸ்டீன்

4. போஸ் ஐன்ஸ்டீன் இருப்பது கணிக்கப்பட்ட ஆண்டு

1925

5. போஸ் ஐன்ஸ்டீன் இருப்பது உறுதி செய்யப்பட்ட ஆண்டு

1995

6.  கடுங் குளிர் முறையில் எந்திரங்களில் பயன்படுவது

போஸ் ஐன்ஸ்டீன்

7. பருப்பொருள்கள் பற்றி ஒத்த கருத்துக்களை கூறியவர்கள்

கனடா மற்றும் டெமாக்ரட்டிஸ்

8. வேர்களில் உணவைச் சேகரிக்கும் தாவரங்கள்

கேரட் மற்றும் பீட்ரூட்

9. நர்மதை ஆற்றங்கரை போரில் ஷர்ஷரை தோற்கடித்தவர்

இரண்டாம் புலிகேசி

10. புனித பயணிகளின் இளவரசன் என்று அழைக்கப்படுபவர்

யுவான் சுவாங்

11. ஹர்ஷர் தனது தலைநகரை எந்த பகுதிக்கு மாற்றினார்

கன்னோசி

JUNE 2020 FULL MONTH CURRENT AFFAIRS PDF CLICK HERE



Post a Comment

1 Comments

SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402

TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM