6 th SCIENCE NEW BOOK 3 rd TERM / காந்தம்

 

காந்தம்

 

நினைவில் கொள்க

1. காந்தத் தன்மையுடைய தாது மேக்னடைட் என்று அழைக்கப்படுகிறது.


2. மேக்னடைட் இயற்கைக் காந்தம் எனப்படுகிறது.


3. மனிதனால் தயாரிக்கப்பட்ட காந்தங்கள் செயற்கைக் காந்தங்கள் என அழைக்கப்ப டுகின்றன.


4. காந்தத்தால் ஈர்க்கப்படக் கூடிய பொருள்கள் காந்தத்தன்மை உள்ள பொருள்கள் எனப்படுகின்றன.


5.  காந்தத்தால் ஈர்க்கப்படாத பொருள்கள் காந்தத் தன்மையற்ற பொருள்கள் எனப்படுகின்றன.


6. தடையின்றி தொங்கவிடப்பட்டுள்ள காந்தமானது எப்பொழுதும் வடக்கு தெற்கு திசையிலேயே ஓய்வு நிலைக்கு வரும்.


7. வடக்கே நோக்கும் முனை வடதுருவம், தெற்கே நோக்கும் முனை தென் துருவம் ஆகும்.


8. காந்த திசை காட்டும் கருவி என்பது திசையறிய உதவும் ஒரு காந்த ஊசிப்பெட்டி ஆகும்.


9. காந்தத்தின் எதிரெதிர் துருவங்கள் (N - S, S - N) ஒன்றையொன்று ஈர்க்கின்றன. ஒத்த துருவங்கள் (N - N, S - S) ஒன்றையொன்று விலக்குகின்றன.


10. வெப்பப்படுத்தும் பொழுதோ, உயரத்திலிருந்து கீழே போடும் பொழுதோ, சுத்தியால் தட்டும் பொழுதோ காந்தங்கள் அவற்றின் காந்தத்தன்மையை இழந் து விடுகின்றன.

 

I. பொருத்தமான விடையைத் தேர்ந்தெடுக்கவும்

1. காந்தத்தால் ஈர்க்கப்படம் பொருள்.

. மரக்கட்டை

. ஊசி

. அழிப்பான்

. கா கிதத் துண்டு

 

2. மாலுமி திசைகாட்டும் கருவிகளை முதன் முதலில் செய்து பயன்படுத்தியவர்கள்.

 

. இந்தியர்கள்

. ஐரோ ப்பியர்கள்

. சீனர்கள்

. எகிப்தியர்கள்

 

3. தங்குதடையின்றி தொங்கவிடப்பட்ட காந்தம் எப்பொழுதுமே

_________________ திசையில் தான் நிற்கும்

. வடக்கு - கிழக்கு

. தெற்கு - மேற்கு

. கிழக்கு - மேற்கு

. வடக்கு - தெற்கு

 

4. காந்தங்கள் தன் காந்தத்தன்மையை இழக்கக்காரணம்

. பயன்படுத்தப்படுவதால்

. பாதுகாப்பாக வைத்திருப்பதா ல்

. சுத்தியால் தட்டுவதால்

. சுத்தப்ப டுத்துவதால்

 

5. கா ந்த ஊசிப் பெட்டியை ப் பயன்படுத்தி ________________ அறிந்து கொள்ள முடியும்.

. வேக த்தை

. கடந்த தொலைவை

. திசையை

. இயக்கத்தை


II. கோடிட்ட இடங்களை நிரப்புக.

1. செயற்கைக் காந்தங்கள் _____________ , __________ , ஆகிய வடிவங்களில் தயாரிக்கப்படுகின்றன.

சட்ட காந்தம் & லாட காந்தம்


2. காந்தத்தால் ஈர்க்கப்படும் பொருள்கள் ___________ எனப்படுகின்றன.

காந்த தன்மை உள்ள பொருட்கள்


3. காகிதம் __________________ பொருளல்ல .

காந்த தன்மை உள்ள பொருள் அல்ல


4. பழங்கால மாலுமிகள், திசையைக் கண்டறிய தங்கள் கப்பல்களில் ஒரு சிறிய _______________ கட்டித் தொங்க விட்டிருந்தனர்.

 காந்த கற்களை


5. ஒரு காந்தத்திற்கு _____________ துருவங்கள் இருக்கும்.

 2 துருவங்கள்


III ரியா? தவறா? தவறெ னில் சரிசெய்து எழுதுக.

1. உருளை வடிவ காந்தத் திற்கு ஒரே ஒரு துருவம் மட்டுமே உண்டு.


2. காந்தத்தின் ஒத்த துருவங்கள் ஒன்றையொன்று விலக்கும். சரி.


3. காந்தத்தினை இரும்புத் தூள்களுக்கு அருகே கொண்டு செல்லும் போது அதிக அளவிலான துகள்கள் காந்தத்தின் மையப்ப குதியில் ஒட்டிக்கொள்கின்றன.   தவறு .காந்தத்தின் துருவங்களில் அதிக துகள்கள் ஒட்டிக்கொள்ளும்.


4. காந்த ஊசியினைப் பயன்படுத்தி கிழக்கு மற்றும் மேற்கு திசைகளைக் கண்டறிய முடியும். தவறு . வடக்கு & தெற்கு.


5. இரப்பர் ஒரு காந்தப் பொருள். தவறு . காந்த தன்மை அற்ற பொருள்.


IV. பொ ருத்துக

1. காந்த திசை காட்டி - காந்த ஊசி

2. ஈர்ப்பு - எதிரெ திர் துருவங்கள்

3. விலக்குதல் - ஒத்த துருவங்கள்

4. காந்த துருவங்கள் - அதிக காந்த வலிமை


V. பொருத்தமில்லாததை வட்ட மிட்டுக் காரணம் கூறுக.

1. இரும்பு ஆணி, குண்டூசி, இரப்பர் குழாய், ஊசி.


2. மின்தூக்கி, தானியங்கிப் படிக்கட்டு, மின்காந்த இரயில், மின்பல்பு.


3. கவர்தல், விலக்குதல், திசைகாட்டுதல், ஒளியூட்டுதல்.


Post a Comment

0 Comments