தமிழக வளர்ச்சி நிர்வாகம்
1. தமிழகத்தின் முதன்மையான மற்றும் பழமையான தொழில் எது வேளாண்மை தொழில்.
2. தீவிர தன்னிறைவு விவசாயம் என்றால் என்ன சிறிய அளவிலான விளைநிலத்தில் சுய தேவைக்கு மட்டுமே உணவு தானியங்களை வளர்ப்பது தீவிர தன்னிறைவு வேளாண்மை என்று அழைக்கப்படுகிறது.
3. தமிழ்நாட்டில் வளர்க்கப்படும் தோட்டப்பயிர்கள் எவை மிளகு மற்றும் முந்திரி.
4. கலப்பு விவசாயம் என்றால் என்ன விளைநிலங்களில் பல பயிர்களை வளர்ப்பதுடன் கால்நடை, மீன், தேனி மற்றும் பறவைகளையும் வளர்க்கும் முறை.
5. தமிழ்நாட்டின் சாகுபடி பருவங்கள் எத்தனை 3
- 1. சொர்ணவாரி (காரீப்) சித்திரைப்பட்டம் (சித்திரை முதல் புரட்டாசி / மே முதல் அக்டோபர்)
- 2. சம்பா பருவம் ஆடிப்பட்டம் (ஜூலை முதல் ஜனவரி வரை)
- 3. நவரை பருவம் (ராபி) கார்த்திகைப் பட்டம் (நவம்பர் முதல் மார்ச் வரை)
6. தமிழ்நாட்டில் எங்கு கால்வாய் பாசனம் சிறப்பாக செயல்படுகிறது காவிரி மற்றும் தாமிரபரணி படுகைகள்
7. தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் கால்வாய் பாசனம் நடைபெறுகிறது 27 சதவீதம்
8.
உலகின் மிகப்
பழமையான நீர் மேலாண்மை திட்டம் எது கல்லணை, கல்லணையைக் கட்டியவர் கரிகால சோழன்.
9. தமிழ்நாட்டில் குளங்கள் எந்த மாவட்டத்தில் அதிகமாக உள்ளது ராமநாதபுரம்
10. கிணற்று நீர் பாசனத்தை சார்ந்திருக்கும் விவசாய நிலங்கள் தமிழ்நாட்டில் எத்தனை சதவீதம் உள்ளது 52 சதவீதம்
11. தமிழ்நாட்டில் முதன்மையான உணவு பயிர் எது நெல்
12. புதிய அதி வீரிய விளைச்சல் தரும் நெல் ரகங்கள் ஜெயா மற்றும் IR 50
13. தமிழ்நாட்டின் நெற்களஞ்சியம் என அழைக்கப்படுவது காவிரி டெல்டா பகுதி. இப்பகுதியில் மூன்று பருவங்களில் பயிரிடப்படுகிறது.
14. தமிழ்நாடு நெல் ஆராய்ச்சி நிறுவனம் எங்கு அமைந்துள்ளது ஆடுதுறை, தஞ்சாவூர்.
15. ஏக்கருக்கு 4,500 கிலோ நெல் உற்பத்தி செய்ய வல்ல நெல் ரகம் எது TNRH 174
16. தமிழ்நாட்டின் மிக முக்கிய இழைப்பயிர் பருத்தி.
17. MCU4, MCU 5 என்பவை பருத்தி ரகங்கள்.
18. தமிழ்நாட்டின் முதன்மை பணப்பயிர் எது கரும்பு.
19. தமிழ்நாட்டின் இரண்டாவது முக்கிய பணப்பயிர் இது புகையிலை.
20. தமிழ்நாட்டின் முக்கிய எண்ணெய் வித்துப் பயிர்கள் எவை வேர்க்கடலை, சூரியகாந்தி, குசும்பு அவரை, ஆமணக்கு, தேங்காய் மற்றும் பருத்தி விதை.
21. ரப்பர், மிளகு போன்ற தோட்டப்பயிர்கள் தமிழ்நாட்டில் எங்கு விளைவிக்கப்படுகிறது கன்னியாகுமரி மாவட்டம்.
22. கடலில் மூழ்கி முத்து எடுத்தல் எந்த பகுதியில் சிறப்பாக நடைபெறுகிறது மன்னார் வளைகுடா, ராமநாதபுரம் மாவட்டம்.
23. தமிழ்நாட்டின் முதன்மை மீன்பிடி துறைமுகம் தூத்துக்குடி.
24. உற்பத்தி செய்யும் அளவும் & தேசிய அளவில் தமிழ்நாடு பிடித்துள்ள இடமும்
Ø தேயிலை - இரண்டாவது இடம்
Ø காபி - இரண்டாவது இடம்
Ø மீன் வளர்ப்பு - நான்காவது இடம்
Ø தொழில் வளர்ச்சி - மூன்றாவது இடம்
Ø பட்டு நெசவு - நான்காவது இடம்
25. தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழகம் அமைந்துள்ள இடம் வேளாண்மை பல்கலைக்கழகம், கோவை
26. எம். எஸ் சுவாமிநாதன் ஆராய்ச்சி மையம் அமைந்துள்ள இடம் தரமணி. சென்னை
தமிழக தொழிற்சாலைகள்
26. தமிழகத்தின் மொத்த வருவாயில் எத்தனை சதவீதம் தொழில்துறை மூலம் கிடைக்கிறது 24%
27. தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் எதன் கீழ் இயங்கி வருகிறது பொதுத்துறை
28. தமிழ்நாடு செய்தித்தாள் நிறுவனம் உள்ள இடம் புகலூர், கரூர் மாவட்டம்
29. தமிழ்நாட்டில் பெரும்பாலான சர்க்கரை ஆலைகள் எவ்வாறு இயங்கி வருகின்றன கூட்டுறவு துறை
30. கூடங்குளம் அணுமின் நிலையம் எந்த இரு நாடுகளின் கூட்டு முயற்சியாகும் இந்தியா மற்றும் ரஷ்யா
31. தென்னிந்தியாவின் மான்செஸ்டர் என்று அழைக்கப்படுவது கோயமுத்தூர்
32. தமிழ்நாட்டின் நெசவு பள்ளத்தாக்கு என்று அழைக்கப்படுவது திருப்பூர், ஈரோடு மற்றும் கோயம்புத்தூர்.
33. தமிழ்நாட்டின் நெசவு தலைநகர் என்று அழைக்கப்படுவது கரூர் மாவட்டம்
34. பட்டுகு உலகப் புகழ் பெற்ற ஊர் எது காஞ்சிபுரம்
35. பட்டுப்புழு வளர்ப்பு பயிற்சி மையம் அமைந்துள்ள இடம் ஓசூர் மாவட்டம்.
36. தமிழ்நாட்டில் ___________ சர்க்கரை ஆலைகள் உள்ளன 42
37. தமிழ்நாட்டில் உள்ள கூட்டுறவு சர்க்கரை ஆலைகள் 16
38. தமிழக அரசால் நடத்தப்படும் சர்க்கரை ஆலையில் 3
39. தனியார் துறையால் நடத்தப்படும் சர்க்கரை ஆலைகள் 23
உற்பத்திப் பொருட்களில் தமிழ்நாட்டின் இடம்
1. காகித உற்பத்தியில் தமிழகத்தின் இடம் இரண்டாவது இடம்
2. சிமெண்ட் உற்பத்தியில் தமிழகத்தின்
இடம் நான்காவது இடம்
3. மென்பொருள் தயாரிப்பில் தமிழகத்தின்
பங்கு இரண்டாவது இடம்
4. சுற்றுலாத் துறையில் தமிழகம்
எத்தனையாவது இடம் வகிக்கிறது இரண்டாவது இடம்
5. நகரமயமாதலில் தமிழகம் பிடித்துள்ள
இடம் இரண்டாவது இடம்
இந்திய தொழில் துறையில் தமிழகத்தின் பங்கு
6. சர்க்கரை ஆலை 10 %
7. காகித உற்பத்தி 12 சதவீதம்
8. பருத்தி நூல், துணி உற்பத்தி 25 சதவீதம்
9. தோல் உற்பத்தி 70 %
10. சிமெண்ட் உற்பத்தி 10 சதவீதம்
11. TNPL அமைப்பு எங்கு தொடங்கப்பட்டது கரூர் மாவட்டம் புகளூர் அருகில் 1979 இல் நிறுவப்பட்டது. இது உலகின் மிகப்பெரிய காகித உற்பத்தி ஆகும்.
12. விலங்குகளின் தோலை பதப்படுத்தம் முறை டானிங் முறை
13. இந்திய தர நிர்ணயத்தை காட்டிலும் மிக உயர்ந்த தரத்தில் உள்ள 2 வகை சிமெண்டுகள்
1. சாதாரண போர்ட்லேண்ட் சிமெண்ட்
2. சூப்பர் ஸ்டார் சிமெண்ட்
14. தமிழ்நாட்டின் சிமெண்ட் உற்பத்தி செய்யும் பகுதிகள் எவை சங்ககிரி, மதுக்கரை, புலியூர், டால்மியாபுரம், சேலம், ஆலங்குளம் சங்கர் நகர், தாழையூத்து, செந்துறை மற்றும் துலுக்கம்பட்டி.
15. தெற்கு ஆசியாவின் டெட்ராய்ட் என்று அழைக்கப்படுவது சென்னை.
16. இந்தியாவிலேயே மிக அதிக அளவில் உரம் உற்பத்தி செய்யும் தொழிற்சாலை எது SPIC.
17. பாரத உயர்மின் உற்பத்தி கழகம் (BHEL) எங்கு அமைந்துள்ளது திருமயம், திருச்சி.
18.
ஆசியாவின்
மிகப்பெரிய ரயில் பெட்டி தொழிற்சாலை எங்கு அமைந்துள்ளது பெரம்பூர் ICF.
19.
குட்டி ஜப்பான்
என்றழைக்கப்படும் பகுதி சிவகாசி, விருதுநகர் மாவட்டம்.
20. சிப்காட் அமைப்பு தொடங்கப்பட்ட ஆண்டு 1972.
21. ராணுவ வாகனங்கள் தயாரிக்கும் தொழிற்சாலை தமிழகத்தில் எங்கு அமைந்துள்ளது ஆவடி, சென்னை.
22. கரும்புச் சக்கை எந்த தொழிற்சாலைக்கு மூலப்பொருளாக பயன்படுகிறது காகித தொழிற்சாலை
தமிழக போக்குவரத்து
23.
போக்குவரத்து
அமைப்பு எத்தனை வகைப்படும் நான்கு வகைப்படும். அவை
1. சாலை போக்குவரத்து
2. இரும்புப் பாதை போக்குவரத்து
3. நீர்வழி போக்குவரத்து
4. ஆகாய போக்குவரத்து
24. சாலைப் போக்குவரத்தில் மிகச்சிறப்பாக செயல்படும் மாநிலம் தமிழ் நாடு.
25. சாலைகளின் வகைகள் எவை
1.
தேசிய நெடுஞ்சாலையில்
2.
மாநில நெடுஞ்சாலைகள்
3.
மாவட்ட நெடுஞ்சாலையில்
4. கிராம சாலைகள்
26. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய போக்குவரத்து கழகங்கள் எத்தனை 7. அவை சென்னை, விழுப்புரம், கும்பகோணம், சேலம், கோயம்புத்தூர், மதுரை மற்றும் திருநெல்வேலி.
27. தமிழ்நாட்டில் எத்தனை தேசிய நெடுஞ்சாலைகள் உள்ளன 24 தேசிய நெடுஞ்சாலைகள். இவை 4,500 கிலோ மீட்டர் தூரத்தை கடக்கிறது.
28. தங்க நாற்கரச் சாலைத் திட்டம் தமிழ்நாட்டில் எவ்வளவு கிலோமீட்டர் தொலைவிற்கு அமைக்கப்பட்டுள்ளது 1232 கிலோமீட்டர்.
29. ஆசியாவின் மிகப்பெரிய போக்குவரத்து நிலையம் உள்ள இடம் கோயம்பேடு புறநகர் பேருந்து நிலையம், சென்னை.
30. தெற்கு ரயில்வே மண்டலங்கள் எத்தனை பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளது ஆறு பிரிவுகள்.
31. தமிழ்நாட்டில் உள்ள ரயில் நிலையங்களின் எண்ணிக்கை 532 ரயில் நிலையங்கள்.
32. தமிழ்நாட்டில் உள்ள மூன்று பெரிய துறைமுகங்கள் எவை சென்னை துறைமுகம், தூத்துக்குடி துறைமுகம் மற்றும் எண்ணூர் துறைமுகம்
33. கப்பல்கள் நங்கூரமிட்டு பொருட்களை கப்பலில் இருந்து கரைக்கு கொண்டு செல்ல உதவுவது சிறிய துறைமுகங்கள்.
34. பக்கிங்காம் கால்வாய் எந்த ஒரு இடத்தை இணைக்கின்றது மரக்காணம் முதல் விஜயவாடா வரை.
35. தமிழ்நாட்டில் உள்ள முக்கிய பன்னாட்டு விமான நிலையம் எது அண்ணா விமான நிலையம், சென்னை. இது இந்தியாவில் மூன்றாவது பெரிய விமான நிலையமாகும்.
தமிழ்நாட்டில் உள்ள விமான நிலையங்கள்
பன்னாட்டு விமான நிலையங்கள்
1. அண்ணா விமான நிலையம், சென்னை
2. கோவை விமான நிலையம்
3. திருச்சி விமான நிலையம்
உள்நாட்டு விமான நிலையங்கள்
1. காமராஜர் விமான நிலையம், சென்னை
2. மதுரை விமான நிலையம்
3. சேலம் விமான நிலையம்
4. தூத்துக்குடி விமான நிலையம்
தமிழக தகவல் தொடர்பு
1.
தமிழ்நாட்டில் உள்ள
மண்டலங்கள் நான்கு
1. சென்னை மண்டலம் - சென்னை
2.
மேற்கு மண்டலம் - கோயம்புத்தூர்
3.
மத்திய மண்டலம் - திருச்சி
4. தென் மண்டலம் - மதுரை
1. இந்திய வானொலி ஒலிபரப்பு எப்போது தொடங்கப்பட்டது 1927
2. அகில இந்திய வானொலி என எப்போது பெயர் சூட்டப்பட்டது 1936
3. புவியியல் அமைவிடங்களை அறிய உதவும் செயற்கை கோள் கருவி எது GPS
4. உள்நாட்டு வணிகத்தில் எந்த போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது சாலை மற்றும் ரயில் போக்குவரத்து
5. பன்னாட்டு வணிகத்தில் எந்த போக்குவரத்து முக்கிய பங்கு வகிக்கிறது துறைமுகங்கள்.
6. உழவர் சந்தை எப்போது எங்கு அறிமுகம் செய்யப்பட்டது மதுரையில் 1999 இல் அறிமுகம் செய்யப்பட்டது.
7. எந்த காரணி பொருளாதார வளர்ச்சியை நிர்ணயிக்கிறது வணிகம்
UNIT - 9 தமிழக அரசின் சமூக நலத் திட்டங்கள் FREE PDF MATERIALS CLICK HERE
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM