POLICE & SI : PSYCHOLOGY
ரத்த உறவுகள்
1.தாத்தாவின்
அல்லது பாட்டியின் ஒரே மகன் அப்பா
2.அம்மா அல்லது
அப்பாவின் தந்தை தாத்தா
3.தாத்தாவின்
அல்லது பாட்டியின் மகன் அப்பா, சித்தப்பா
அல்லது மாமா
4.அம்மா அல்லது
அப்பாவின் தாய் பாட்டி
5.தாத்தா அல்லது
பாட்டியின் ஒரே மருமகள் அம்மா
6.அம்மா அல்லது அப்பாவின்
மகன் அண்ணன் அல்லது தம்பி
7.அம்மா அல்லது
அப்பாவின் மகள் அக்கா அல்லது தங்கை
8.அம்மாவின் சகோதரி
சித்தி
9.அப்பாவின் சகோதரி
அத்தை
10.மனைவியின் சகோதரி மைத்துனி
11.மனைவியின் சகோதரன் மைத்துனன்
12.சகோதரியின் மகன் மருமகன்
13.சகோதரியின் மகள் மருமகள்
14.சகோதரனின் மனைவி அண்ணி
15.சகோதரனின் மகன் உடன்பிறந்தோர் மகன்
16.சகோதரியின் மகன் உடன் பிறந்தவள் இன் மகள்
17.சகோதரியின் மகள் உடன்பிறந்தவர்களின் மகன்
18.கீதா என்ற பெண் ஒரு ஆணை அறிமுகப்படுத்தி பின்வருமாறு
கூறுகிறாள், அவன் எனது தாயின் தாய்க்கு ஒரே மகன் எனில் கீதா
அவனுக்கு என்ன உறவு மருமகள்
19.தீபிகா புகைப்படத்தில் உள்ள ஒரு ஆணை காட்டி, அந்த ஆண் யார்
எனில் என்னுடைய தாத்தாவின் உடைய ஒரே மகனின் மகன் என்று
கூறினாள், எனில் அந்த ஆணுக்கு தீபிகா என்ன உறவு சகோதரி
20.ஒரு கூட்டத்தில் உள்ள ஆணைப் பார்த்து வித்யா, அவர் என்
அம்மாவின் அப்பாவின் ஒரே மகன் என்று கூறுகிறார் எனில் அந்த
ஆண் வித்தியாவிற்கு என்ன உறவு மாமா
21.கீதா ஒரு ஆணிடம் உங்கள் அம்மாவின் கணவரின் சகோதரி எனக்கு
அத்தை என்று கூறுகிறார் எனில் அந்த ஆண் சீதாவிற்கு என்ன உறவு
சகோதரன்
22.போட்டோவில் உள்ள ஒரு பெண்ணை பார்த்து ராஜா, இவர் எனது
தாயின் ஒரே மகனின் மனைவியின் சகோதரி என்று கூறினார் எனில்,
ராஜாவிற்கு அந்தப் பெண் என்ன உறவு மைத்துனி
23.ஒரு ஆணைப் பார்த்து உஷா அந்த ஆண் எனது அம்மாவின் உடைய
ஒரே மகளுடைய மகன் என்று கூறுகிறார் எனில் அந்த ஆணுக்கும்
உஷாக்கும் உறவிற்கும் என்ன உறவு மகன்
24.விக்னேஷ் என்பவர் ஒரு பெண்ணை அறிமுகம் செய்து இவள் என்
தந்தையின் ஒரே மகனின் மனைவியின் சகோதரி என்று கூறினார்
எனில் அந்தப் பெண்ணுக்கும் விக்னேஷ் க்கும் என்ன உறவு மைத்துனி
25.பாரத் என்பவர் ஒரு பெண்ணை பார்த்து அவள் என் தாத்தாவின் ஒரே
மகனின் மகள் என்று கூறினார் எனில் பாரத்திற்கும் அந்த
பெண்ணுக்கும் என்ன உறவு சகோதரி
26.ராணி ஒரு ஆணைப் பார்த்து அவருடைய மனைவி என் தந்தையின்
ஒரே மகள் என்று கூறினார் எனில் அந்த ஆன் ராணிக்கு என்ன உறவு
கணவன்
27.ராஜேஷ் என்பவர், எனது தாய் பிரவீன் என்பவரின் தாய்க்கு ஒரே மகள்
என்று கூறினார் எனில் ராஜேஷ் என்பவருக்கு பிரவீன் என்பவருக்கும்
உள்ள உறவு என்ன மாமா
சூழ்நிலை வினாக்கள்
28.காவல் துறையில் நீங்கள் பணியாற்ற விரும்புவதற்கான காரணம்
மனதிற்கு பிடித்தமான பணி என்பதால்
29.உங்களுக்கு நெருங்கியவர் குற்றவாளியாக இருந்தாள் சட்டப்படி
நடவடிக்கை எடுப்பேன்
30.பெண் கைதிகளை இரவு நேரத்தில் காவல் நிலையத்தில்
வைத்திருப்பது சட்டப்படி தவறு
31.காவல்துறை என்பது யாருடைய நிர்வாக பொறுப்பினை சார்ந்தது
மாநில அரசு
32.மதக்கலவரங்கள் ஏற்படாமல் தடுக்க என்ன செய்ய வேண்டும்
மக்களிடம் மதங்கள் தொடர்பான நல்ல கருத்துக்களை கூறுதல்
வேண்டும்
33.குற்றவாளிகளிடம் காவல் துறையினர் எவ்வாறு நடந்து கொள்ள
வேண்டும் மனித உரிமைகளை
மீறாமல் நடந்து கொள்ள வேண்டும்
34.ஒரு சிறந்த அதிகாரியாக மாற நீங்கள் என்ன செய்வீர்கள் உரிய
பணியை சரியாக செய்து முடிப்பேன்
35.பெண்கள் காவல்துறை பணியில் ஈடுபடலாம் என்பது பற்றிய உங்கள்
கருத்து என்ன மிகச் சரியானது
36.காவலர்களுக்கு என தனிப்பட்ட சங்கம் அமைக்கப்பட வேண்டும்
என்பது தேவையற்றது
37.தாழ்த்தப்பட்டவர் மற்றும் பழங்குடியினருக்கு எதிராக வன்கொடுமைகள்
நடக்கும் போது காவல்துறை எவ்வாறு செயல்பட வேண்டும்
பிரச்சனைக்கு காரணமானவர்களை கைது செய்ய வேண்டும்
38.காவல்துறையை நிர்வகிக்கும் துறை உள்துறை
39.தமிழகத்தில் பெண் காவலர் படை தொடங்கப்பட்ட ஆண்டு 1956
40.காதல் திருமணங்களை காவல் நிலையங்களில் நடத்த அனுமதிப்பது
நடத்த அனுமதிக்கலாம்
41.ஒரு காவலர் பணம் பெற்றுக் கொண்டு போதைப்பொருள் விற்பனை
செய்வதை ஊக்குவித்து வருகிறார். இதை தெரிந்து கொண்ட காவலர்
என்ன செய்ய வேண்டும் போதைப்பொருள் தடுப்பு காவல் பிரிவு உயர்
அதிகாரிக்கு ரகசியமாக தகவல் அளித்து போதைப் பொருள் விற்பவனை
கைது செய்ய வேண்டும்
42.தீவிரவாத செயலில் ஈடுபட்ட ஒரு நபரை லாக்கப்பில் வைத்து அடித்து
விசாரணை செய்யும் போது இறந்து விடுகிறார் எனில் சார்பு ஆய்வாளர்
ஆனா நீங்கள் என்ன செய்ய வேண்டும் நடந்த செயல்களை
மேலதிகாரியிடம் விளக்கம் கூறி நடவடிக்கை எடுப்பேன்
43.ஒருவர் சாலையில் போக்குவரத்து இடையூராக கடை அமைத்து
வியாபாரம் செய்கிறார். இந்த செய்தியை அறிந்த நீங்கள் சார்பு
ஆய்வாளராக என்ன செய்வீர்கள் கடையை அகற்ற செய்து நபரின்
மீது முறையான வழக்கு பதிவு செய்வேன்
44.ஒரு அமைச்சரின் மகள் அவர்கள் வீட்டில் ஓட்டுனராக பணிபுரியும்
நபரை காதலித்து பின் திருமணம் செய்து கொள்வதற்காக காவல்
நிலையத்தில் தஞ்சம் அடைகிறாள் எனில், சார்பு ஆய்வாளராக உள்ள
நீங்கள் என்ன செய்வீர்கள் முறையாக திருமணம் செய்து வைப்பேன்
45.நீங்கள் ஒரு காவலர் தங்கள் மனைவியும் காவலர் தங்கள் மனைவிக்கு
பதவி உயர்வு கிடைத்து வேறு மாவட்டத்திற்கு பணி மாற்றம்
ஏற்படுகிறது எனில், நீங்கள் என்ன செய்வீர்கள் மனைவியின்
விருப்பத்தை அறிந்து பணி மாற்றம் என்பது தவிர்க்க முடியாதது
எனக்கூறி அவரின் விருப்பத்தை நிறைவேற்றினேன்
46.ஆளும் கட்சியின் மாவட்ட தலைமை நிர்வாகி சாராயம் காய்ச்சி
விற்பனை செய்கிறார் என்ற செய்தி சார்பு ஆய்வாளர் ஆகிய
தங்களுக்கு தெரிய வருகிறது, இனி நீங்கள் என்ன செய்வீர்கள்
அவரைப்பற்றிய செய்தி உண்மைதானா என கண்டறிந்து அவரை கைது
செய்வேன்
47.நீங்கள் ஒரு அலுவலகத்தில் உயர் பதவியில் இருக்கிறார்கள்
உங்களின் சில நடவடிக்கைகளால் உங்களுக்கு கீழ் பணிபுரிபவர்கள்
கோபமாக உள்ளபோது என்ன செய்வீர்கள் அவர்களை தனியே
அழைத்து பொறுமையாக விசாரித்து என் தவறை திருத்திக் கொள்வேன்
48.முதியவர் ஒருவர் சாலையை கடக்க முற்படும்போது வாகனம் மோதி
விபத்து ஏற்படுகிறது காவலராக உள்ள நீங்கள் இதை நேரில் பார்க்கும்
போது உடனே என்ன செய்வீர்கள் காயமடைந்த முதியவருக்கு முதலில்
முதல் உதவி செய்வேன்
49.சாலையில் நீங்கள் நடை பயணம் செய்து கொண்டிருக்கும்போது
ஒருவர் மயக்கமடைந்து கிடப்பதை பார்க்கும்போது என்ன செய்வீர்கள்
அவரை மயக்கத்திலிருந்து எழுப்பி நடந்ததை கேட்டு அறிந்து உதவி
செய்வேன்
50.உங்களது வீட்டில் கொள்ளையர்கள் புகுந்து விட்டார்கள் என்பதை
நீங்கள் அறியும் போது என்ன செய்வீர்கள் வீட்டில் உள்ளவர்களுடன்
சேர்ந்து திருடர்களை தப்பவிடாமல் பிடிக்க முயல்வேன்
51.காவல் துறையினர் ஒருவரை கைது செய்தவுடன் எவ்வளவு மணி
நேரத்திற்குள் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த வேண்டும் 24 மணி நேரம்
52.ஒரு கலவரம் பற்றிய தகவல் கிடைத்தவுடன் சார்பு ஆய்வாளர் ஆகிய
நீங்கள் என்ன செய்ய வேண்டும் கலவரம் நடைபெறும் இடத்திற்கு
உடனடியாக செல்ல வேண்டும், உயர் அதிகாரிக்கு
தகவல் தெரிவிக்க
வேண்டும், கலவரம் தீவிரம் அடையாமல் தடுத்து கலவரத்தை
கட்டுப்படுத்த வேண்டும்
53.சாட்சிகளை காவலர்கள் எவ்வாறு நடத்த வேண்டும் சாட்சி
கூறுபவர்களிடம் மரியாதையாகப் பேசி விவரங்களைப் பெற்று
காத்திருக்க வைக்காமல் அனுப்பி வைக்க வேண்டும்
54.பேரணி செல்லும் போது கலவரம் ஏற்பட்டால் காவலர் எவ்வாறு
நடந்து கொள்ள வேண்டும் கலவரம் ஏற்படக் கூடிய சூழ்நிலை
வரும்போது உயர் அதிகாரிக்கு உடனடி தகவல் அளித்து அதற்கேற்ப
நடந்து கொள்ள வேண்டும்
55.இந்திய சாட்சிய சட்டம் அமலுக்கு வந்த ஆண்டு 1872
56.1872 இல் சாட்சிய சட்டத்தை அறிமுகம் செய்தவர் சர் ஜேம்ஸ் பிட்ஸ்
ஸ்டீபன்
57.இந்திய தண்டனைச் சட்டத்தை உருவாக்கியவர் மெக்காலே பிரபு
1 Comments
Rrp
ReplyDeleteSALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM