JUNE 2020 CURRENT AFFAIRS IMPORTANT QUESTIONS PDF & நுகர்வோர் உரிமைகள்


நுகர்வோர் உரிமைகள்

நுகர்வோர்

ஒரு பொருளை முழுமையாக பயன்படுத்துபவர் நுகர்வோர். உற்பத்தி

செய்யப்பட்ட பொருட்கள் மற்றும் சேவைகளை வாங்குபவர் நுகர்வோர்

எனப்படுவர். தரம் அளவு தன்மை அதனுடைய உண்மை நிலைகளை

நுகர்வோருக்கு தெளிவுபடுத்த வேண்டும்.

நுகர்வோர் உரிமைகள்

நுகர்வோர் உரிமைகள் எட்டு வகைப்படும் என ஐ. நா சபை வழிகாட்டுதலின்

படி நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் வரையறுக்கப்பட்டுள்ளது. அவைகளின்

பட்டியல் கீழே தரப்பட்டுள்ளது

  1. அடிப்படைத் தேவைகளுக்கான உரிமைகள்
  2. பாதுகாப்பு உரிமை
  3. தகவல் பெறும் உரிமை
  4. தேர்ந்தெடுக்கும் உரிமை
  5. பிரதிநிதித்துவ உரிமை
  6. குறைதீர் உரிமை
  7. ஆரோக்கிய சூழல் உரிமை
  8. நுகர்வோர் கல்வி உரிமை

நுகர்வோர் பாதுகாப்பு நடவடிக்கைகள்

  1. சட்டம் சார்ந்த நடவடிக்கைகள்
  2. நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைகள்
  3. தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகள்

சட்டம் சார்ந்த நடவடிக்கைகள்

நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986

1986 ஆம் ஆண்டு நுகர்வோரை பாதுகாக்கும் பொருட்டு இந்திய அரசால்

இயற்றப்பட்ட சட்டம் நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் ஆகும். இச்சட்டத்தின்

முக்கிய அம்சம் ஆனது விசாரணைகளை மேற்கொள்ள நுகர்வோர்

நீதி மன்றங்கள் மூன்று அடுக்குகளாக அமைக்கப்பட்டுள்ளன. அவை கீழே

கொடுக்கப்பட்டுள்ளது.

  • தேசிய அளவில் - தேசிய நுகர்வோர் ஆணையம், டெல்லி
  • மாநில அளவில் - மாநில நுகர்வோர் கமிஷன், சென்னை
  • மாவட்ட அளவில் - அந்தந்த மாவட்ட தலைநகரங்களில்

புகார் செய்யும் முறைகள்

பொருட்கள் சம்பந்தமான ரசீதுகள், உத்தரவாதம், பாதுகாப்பு நகல்கள்

ஆகியவற்றை புகார் உடன் இணைத்து மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்துக்கு

அனுப்ப வேண்டும். நுகர்வோர் வழக்கை நடத்தலாம். வழக்கறிஞரை நாட

வேண்டிய அவசியம் இல்லை.

புதிய சட்டம்

தற்போதைய நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் நீக்கப்பட்டு புதிய சட்டம்

கொண்டு வரப்படுகிறது. முந்தைய சட்டத்தில் உள்ள குறைகள் போதாமை

போன்றவற்றை நீக்கி அதன் வரம்பையும் நோக்கத்தையும் விரிவுபடுத்தி

புதிய சட்ட மசோதா ஒன்று நுகர்வோர் பாதுகாப்பு சட்ட மசோதா 2015 என்ற

பெயரில் ஆகஸ்ட் 10, 2015 அன்று நாடாளுமன்றத்தில் அறிமுகம்

செய்யப்பட்டது.

புதிய மசோதாவின் முக்கியமான அம்சங்கள்

திசை திருப்பும் பொய்யான விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களுக்கு

அபராதம். திறமையற்ற விதிமுறைகளை கொண்டிருக்கும் ஒப்பந்தங்கள்

செல்லாது என அறிவித்தல். நுகர்வோர் நீதிமன்றங்களில் சமரச

மையங்களை அமைத்தல். உற்பத்திப் பொருட்களுக்கான பொறுப்பை

உற்பத்தியாளர்களை ஏற்கும்படி செய்தல்.

நுகர்வோர் பாதுகாப்பிற்காக இந்தியாவில் இயற்றப்பட்ட முக்கிய சட்டங்கள்

  • நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் 1986
  • உணவு பாதுகாப்பு மற்றும் தரச் சட்டம் 2006
  • இந்திய தர நிர்ணயங்கள் சட்டம் 1986
  • மருந்துகள் அழகு சாதன பொருட்கள் சட்டம் 1940
  • மருந்துகள் கட்டுப்பாட்டு சட்டம் 1950
  • மருந்துகள் விந்தை நிவாரணம் சட்டம் 1954
  • அத்தியாவசிய பொருட்கள் சட்டம் 1955
  • பதுக்கல் தடுப்பு அத்தியாவசிய பொருட்கள் வழங்குதல் பராமரிப்பு சட்டம் 1980
  • வேளாண் விளைபொருட்கள் தரம் மற்றும் குறியீடு சட்டம் 1937
  • நிறுத்தல் முகத்தல் தடைச் சட்டம் 1976
  • எடை அளவை சட்டம் 1977
  • வியாபாரப் போட்டி பற்றிய சட்டம் 2002
  • வர்த்தக முத்திரைச் சட்டம் 1999. இச்சட்டம் செப்டம்பர் 2003 முதல் அமலில் இருந்து வருகிறது.
  • சிகரெட் புகையிலை பொருட்கள் சட்டம் 2003

நிர்வாகம் சார்ந்த நடவடிக்கைகள்

பொது விநியோக முறை

இந்திய அரசு உணவு மற்றும் பொது விநியோகத் துறையின் கீழ் உணவு

பாதுகாப்பினை உறுதி செய்கிறது. உணவுப் பொருட்களின் கடத்தல மற்றும்

பதுக்களை தடுப்பதற்காக வியாபாரிகள் அதிக விலைக்கு பொருட்களை

விற்பதை தடுப்பதற்காகவும் பொதுவிநியோக முறை ஏற்படுத்தப்பட்டுள்ளது.

உலகிலேயே இந்தியாவில் தான் மிகப்பெரிய அளவில் பொது விநியோக

முறை 4 லட்சத்து 78 ஆயிரம் பொது விநியோக முறை மூலம்

செயல்படுத்தப்படுகிறது.

தொழில்நுட்பம் சார்ந்த நடவடிக்கைகள்

BIS : Bureau of Indian Standard

இந்திய தரப்பில் குறியீடு (BIS) 1986 ஆம் ஆண்டு அறிமுகம் செய்யப்பட்டது.

இதன் தலைமையிடம் புது டெல்லியில் உள்ளது. இதுவரை புதிய BIS

முத்திரையானது 900 வகையான பொருட்களுக்கு 26 ஆயிரத்து 500 உரிமைகள்

வழங்கப்பட்டுள்ளன. தொழில் சார்ந்த பொருட்கள் மீது BIS & விவசாயம்

சார்ந்த பொருட்கள் மீது அக்மார்க் என்றும் முத்திரை பதியப்பட்டுள்ளது.

ISO : உலகத்தரம் அமைப்பு

உலகத் தர அமைப்பு 1947 ஆம் ஆண்டு சுவிட்சர்லாந்தில் உள்ள ஜெனிவாவில்

தொடங்கப்பட்டது. இது ஒரு அரசு சாரா நிறுவனம் ஆகும். இந்த அமைப்பில்

162 நாடுகள் உறுப்பினர்களாக உள்ளன. உலக அளவில் பொருட்களின்

தரத்தை அறிந்து கொள்ளும் பொருட்டு இதன் செயல்பாடுகள் அமைந்துள்ளன.

ISO முத்திரைகள்

  • ISO 9000 தரக் குறியீடு
  • ISO 22000 உணவுப் பாதுகாப்பு தரக் குறியீடு
  • ISO 14000 சுற்றுச்சூழல் தரக் குறியீடு

CAC : CODEX ALIMENATION COMMISSION

Codex Alimentation Commission என்ற நிறுவனம் 1963 ஆம் ஆண்டு ரோம் நகரில்

சர்வதேச உணவு மற்றும் வேளாண்மை அமைப்பு மற்றும் உலக சுகாதார

நிறுவனத்தால் தொடங்கப்பட்டது. இதில் 156 நாடுகள் உறுப்பினர்களாக

உள்ளன. இந்நிறுவனம் உணவுப்பொருட்கள் சம்பந்தப்பட்ட உலக தரத்தை

அறிந்து கொள்ளும் பொருட்டு நிறுவப்பட்டது.

இந்த நிறுவனம் உணவுப் பொருட்களின் தரத்தை உயர்த்தவும் பொருள்கள்

உற்பத்தி செய்யப்படுவதற்கான வழிமுறைகள் மற்றும் ஆலோசனைகளையும்

வழங்கி வருகிறது. மேலும் சர்வதேச அளவில் உணவுப் பொருட்களை

வியாபாரம் செய்யும் வழிமுறையை மேற்கொண்டு வருகிறது.

கோப்ரா

கோப்ரா அல்லது நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 ஆம் ஆண்டு

இந்தியாவில் நிறுவப்பட்டது. இது நுகர்வோரின் குறைகளை வெளிப்படுத்தும்

உரிமையின் காரணமாக நுகர்வோர் மகாசாசனம் என்று அழைக்கப்படுகிறது.

தகவல் அறியும் உரிமைச் சட்டம் 2005 ஆம் ஆண்டு அக்டோபர் 12 ஆம் நாள்

பாராளுமன்றத்தில் நிறுவப்பட்டது. தேசிய நுகர்வோர் கட்டணமில்லா

தொலைபேசி எண் 1800 11 4000.

இந்திய நுகர்வோர் தினம் டிசம்பர் 24 அன்று அனுசரிக்கப்படுகிறது. உலக

நுகர்வோர் தினம் மார்ச் 15 அன்று அனுசரிக்கப்படுகிறது. 1986 ஆம் ஆண்டு

டிசம்பர் 24 ஆம் நாள் இந்திய நாடாளுமன்றத்தில் நுகர்வோர் பாதுகாப்புச்

சட்டம் இயற்றப்பட்டது. 1962 ஆம் ஆண்டு மார்ச் 15 ம் நாள் அமெரிக்க

காங்கிரஸ் சபைக்கு நுகர்வோரின் உரிமைகள் அடங்கிய நகல் அனுப்பி

வைக்கப்பட்டது அந்த நாள் வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நாளாக

கருதப்படுகிறது.

ரால் நாடார் என்பவர் நுகர்வோர் இயக்கத்தின் தந்தை என்று

கருதப்படுகிறார். இவர் அமெரிக்காவைச் சேர்ந்தவர். இவர் எழுதிய

புத்தகமான Unsafe at Any Speed என்ற நூல் நுகர்வோருக்கு விழிப்புணர்வு

ஏற்படுத்தக் கூடியதாக அமைந்துள்ளது.

 

JUNE 2020 CURRENT AFFAIRS IMPORTANT QUESTIONS PDF CLICK HERE

Post a Comment

1 Comments

SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402

TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM