நாட்டுரிமை மற்றும் குடியுரிமை
பூர்வீகம், பிறப்பு மற்றும் இனம் ஆகியவற்றின் அடிப்படையில் ஒரு குறிப்பிட்ட நாட்டினர் இயல்பாகப் பெறும் நிலை நாட்டுரிமை எனப்படும். சட்ட நடைமுறைகளுக்கு உட்பட்டு ஒரு நாட்டின் அரசாங்கத்தால் தனி ஒருவருக்கு வழங்கப்படுவது குடியுரிமை எனப்படும். ஒருவர் தனது நாட்டுரிமை மாற்ற முடியாது. ஆனால் ஒருவர் தனது குடியுரிமை மாற்றிக்கொள்ள முடியும்.
ஒற்றைக் குடியுரிமை
இந்திய அரசியலமைப்பு சட்டம் இந்திய மக்களுக்கு ஒற்றை குடியுரிமை வழங்குகிறது. இதுவே இந்திய குடியுரிமை என்று அழைக்கப்படுகிறது. ஆனால் அமெரிக்க ஐக்கிய நாடுகள் மற்றும் சுவிட்சர்லாந்து ஆகிய கூட்டாட்சி அமைப்பு கொண்டுள்ள நாடுகளில் இரட்டைக் குடியுரிமை வழங்கப்படுகிறது. இரட்டைக் குடியுரிமை என்பது தேசிய குடியுரிமை மற்றும் மாநில குடியுரிமை ஆகும். இந்திய குடிமக்கள் அனைவரும் இந்தியாவில் எங்கு பிறந்திருந்தாலும் வசித்தாலும் மாநில வேறுபாடின்றி குடியுரிமைக்கான அனைத்து அரசியல் மற்றும் குடிமையியல் உரிமைகளையும் பெறமுடியும். குடியுரிமை வரிசையின் படி குடியரசு தலைவர் நாட்டின் முதல் குடிமகன் ஆவார்.
இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டு குடியுரிமை பெற்றவர்
1. வெளிநாட்டு வாழ் இந்தியர் (NRI - NON RESIDENT INDIAN)
இந்திய கடவுச் சீட்டினை பெற்று வெளிநாட்டில் வசிக்கும் இந்திய குடிமகன்.
2. இந்திய பூர்வீக குடியினர் (PIO - PERSON OF INDIAN ORIGIN)
இந்திய குடியுரிமை உடைய மூதாதையர்களை கொண்ட வெளிநாட்டில் குடியுரிமை பெற்றிருக்கும் ஒருவர் இந்திய பூர்வீக குடியினர் ஆவர். (பாகிஸ்தான், வங்காளதேசம், ஸ்ரீலங்கா, பூட்டான், ஆப்கானிஸ்தான், சீனா மற்றும் நேபாளம் தவிர). 2015 ஜனவரி 9 முதல் PIO முறை இந்திய அரசால் திரும்பப் பெறப்பட்டு OCI முறை புதிதாக அறிமுகம் செய்யப்பட்டது.
3. வெளிநாட்டு குடியுரிமை கொண்ட இந்தியாவில் வசிப்பதற்கான அட்டை வைத்திருப்பவர்கள் (Overseas citizen of India card holder)
இந்தியாவை பூர்வீகமாக கொண்ட வெளிநாட்டு குடிமகன் காலவரையின்றி இந்தியாவில் வசிப்பதற்கும், பணி செய்வதற்கும் OCI அட்டை வழங்கப்படுகிறது (பாகிஸ்தான் மற்றும் வங்கதேசம் நீங்களாக). இவர்களுக்கு இந்தியாவில் வாக்களிக்கும் உரிமை இல்லை.
இந்திய குடிமக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள்
இந்திய அரசியலமைப்பு சட்டம்
கீழ்க்கண்ட உரிமைகளை நமக்கு
வழங்குகிறது.
- அடிப்படை உரிமைகள்
- மக்களவைத் தேர்தலுக்கு மாநில சட்டமன்றத் தேர்தலுக்கும் வாக்களிக்கும் உரிமை.
- இந்திய அரசு அலுவலகங்களில் பணிபுரியும் உரிமை.
- பாராளுமன்றம் மற்றும் மாநில சட்டமன்றங்களில் உறுப்பினர் ஆவதற்கான உரிமை.
இந்திய அரசியலமைப்பு 42 வது சட்ட திருத்தத்தின்படி இந்திய குடிமக்களுக்கான அடிப்படை கடமைகள் வரையறுக்கப்பட்டுள்ளன.
உதாரணம்
நேர்மையாக வரி செலுத்துதல், மற்றவர்களின் கருத்துகளுக்கும், நம்பிக்கைகளுக்கும், உரிமைகளுக்கும் மதிப்பளித்தல், நாட்டின் பாதுகாப்பிற்காக செயலாற்றுதல் மற்றும் சட்டங்களை மதித்தல் மற்றும் கீழ்ப்படிதல்.
ஒரு நாட்டின் குடிமக்கள் அல்லாதவர்களை இரண்டு வகையினர் - ஆக நாம் அழைக்கின்றோம். அவர்கள்
1. அன்னியர்கள் (Alien)
ஒரு நாட்டில் வசிக்கும் குடிமகனாக அல்லாத அனைவரும் அன்னியர்க என்று அழைக்கப்படுவர்.
எடுத்துக்காட்டு : வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் மற்றும் வெளிநாட்டு மாணவர்கள்
2. குடியேறியவர் (Immigrant)
ஒரு நாட்டில் எவ்வித தடையுமின்றி நிரந்தரமாக வசிப்பதற்கும் பணி புரிவதற்கும் உரிமை பெறும் மண்ணியல் குடியேறியவர் என்று அழைக்கப்படுகிறார்.
நல்ல குடிமகனின் பண்புகள்
1. அரசியலமைப்பு சட்டத்தின்படி நடத்தல்.
2. சட்டத்தை மதித்து கீழ்ப்படிதல்.
3. சமுதாயத்திற்கு தன் பங்களிப்பை ஆற்றுதல்.
4. குடிமை பணியை செயலாற்றுதல்.
5. நற்பண்புகளையும் நீதியையும் நிலைநாட்டுதல்.
6. வேற்றுமைகளை மறந்து நடத்தல் மற்றும் ஒற்றுமையை பேணுதல்.
உலகளாவிய குடி உரிமை
ஒரு குறிப்பிட்ட நாட்டின் குடிமகன் என்பதை விட உலகளாவிய சமுதாயத்தில் ஒவ்வொருவரும் அங்கம் என்பது உலகளாவிய குடியுரிமை ஆகும். உலக மக்கள் அனைவருக்கும் உரிமைகளும் குடிமை பொறுப்புகளும் இயற்கையாகவே உள்ளன. புதிய சமுதாயத்தை உருவாக்குவதில் இன்றைய இளைஞர்களின் ஈடுபாட்டையும், பங்களிப்பையும் பெறுவது உலகளாவிய குடி உரிமையின் அடிப்படை நோக்கமாகும்.
வெளிநாட்டு வாழ் இந்தியர் தினம் அல்லது பிரவாசி பாரதிய திவாஸ்
இந்திய அரசின் வெளியுறவுத் துறை அமைச்சகத்தால் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை பிரவாசி பாரதிய திவாஸ் கொண்டாடப்படுகிறது. இந்த தினம் இந்தியாவின் வளர்ச்சிக்காக வெளிநாட்டில் வசிக்கும் இந்தியர்களின் பங்களிப்பினை பெரும் வகையில் கொண்டாடப்படுகிறது. இது மகாத்மா காந்தி தென் ஆப்பிரிக்காவிலிருந்து இந்தியாவிற்கு வருகை புரிந்த தினமான ஜனவரி 9 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது.
முடிவுரை
நமது அரசியலமைப்பு சட்டம் ஒற்றை குடியுரிமை வழங்குகிறது. இதன் மூலம் இந்திய மக்கள் அனைவரும் சம உரிமையை பெறுகின்றனர். ஒருங்கிணைந்த இந்தியாவை உருவாக்கும் பொருட்டு இந்திய மக்களிடையே சகோதரத்துவத்தையும், ஒற்றுமையையும் நமது அரசியலமைப்பு ஊக்குவிக்கிறது.
IMPORTANT QUESTIONS
1. அரசியலமைப்பு சட்டத்தின் எந்தப் பகுதி மற்றும் பிரிவுகள் குடியுரிமை பற்றிக் கூறுகின்றன
2.
இந்தியாவின் முதல்
குடிமகன் யார்
3.
தமிழகத்தின் முதல்
குடிமகன் யார்
4. ஒரு நாட்டின் _____________ அந்நாடு வழங்கும் குடியியல் மற்றும் அரசியல் உரிமைகளை பெற தகுதியுடையவர் யார்.
5. இந்திய அரசியலமைப்பு சட்டம் ________ குடியுரிமை மட்டும் வழங்குகிறது.
6. இந்திய கடவுச் சீட்டினை பெற்று வெளிநாட்டில் வாழும் இந்திய குடிமகன் என்னவென்று அழைக்கப்படுகிறார்.
7.
மக்கள் அனைவரும்
உரிமைகள் மற்றும் _______ யும் இயற்கையாக
பெறுகின்றனர்.
8.
________
என்பது இளைஞர்களை நவீன சமுதாயத்தை
வடிவமைப்பதில் பங்கேற்க செய்யும் ஒரு யோசனையாகும்
சரியா தவறா
9.
அமெரிக்க ஐக்கிய
நாடுகள் ஒற்றை குடியுரிமை வழங்குகிறது
10. வெளிநாட்டு குடியுரிமை கொண்டு இந்தியாவில் வசிப்பதற்கான அட்டை வைத்திருப்பவர்களுக்கு வாக்குரிமை உண்டு.
12. வெளிநாட்டு குடியுரிமை கொண்டு இந்தியாவில் வசிப்பதற்கான அட்டை வைத்திருப்பவர்களுக்கு வாக்குரிமை இல்லை.
13.
அடிப்படை உரிமைகளை
இந்தியாவில் குடிமகன் அனுபவிக்க நமது
அரசியலமைப்பு சட்டம் உத்தரவாதம்
அளிக்கவில்லை.
14. நாட்டுரிமை மாற்ற இயலும் ஆனால் குடியுரிமை மாற்ற இயலாது என்பது உண்மை
15. குடிமகன் என்ற சொல் எந்த மொழியிலிருந்து பெறப்பட்டது
16.
இந்திய குடியுரிமை
சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
17.
காமன்வெல்த்
குடியுரிமை இந்தியாவில் ஒழிக்கப்பட்ட ஆண்டு
18.
42
வது சட்டத்திருத்தம் எதைப்பற்றி
கூறுகிறது.
19.
நமது அடிப்படை
உரிமைகள் மீறப்படும் போது நாம் எங்கு சென்று
முறையிடலாம்
20.
எத்தனை நீதிப்
பேராணைகள் உச்சநீதிமன்றத்தால் பிறப்பிக்கப்படுகிறது
21. மாவட்ட நீதிபதியை நியமிப்பவர் யார்
22.
மாநில நீதிபதிக்கு
பதவிப்பிரமாணம் செய்து வைப்பவர் யார்
23.
மாநில தலைமை
நீதிபதியை நியமிப்பவர் யார்
24.
மாநில பணியாளர்
தேர்வாணையத்தின் தலைவரை நியமிப்பவர் யார்
25. மத்திய அரசின் முகவராக மாநிலங்களில் செயல்படுபவர் யார்
26.
தற்போது
இந்தியாவில் எத்தனை யூனியன் பிரதேசங்கள் உள்ளன
27. இந்தியாவில் கடைசியாக உருவாக்கப்பட்ட யூனியன் பிரதேசங்கள் எவை மற்றும் எத்தனை
29.
தமிழகத்தில்
தற்போது எத்தனை மாவட்டங்கள் உள்ளன
30.
தமிழக உயர்
நீதிமன்றத்தின் கிளை அமைந்துள்ள இடம் எது
31.
உச்சநீதிமன்ற
நீதிபதியின் ஓய்வு பெறும் வயது என்ன
32. மாநில பணியாளர் தேர்வாணையத்தின் தலைவர் ஓய்வு பெறும் வயது என்ன
0 Comments
SALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM