6 th HISTORY NEW BOOK / குப்தர்கள் BOOK BACK QUESTIONS

6 th HISTORY NEW BOOK / குப்தர்கள்

1. ஸ்ரீ குப்தர் குப்த வம்சத்தை நிறுவியவர்.

2. முதலாம் சந்திரகுப்தர் , சமுத்திரகுப்தர் ,இரண்டா ம் சந்திரகுப்தர் ஆகியோர் குப்த வம்சத்தின் தலை சிறந்த அரசர்கள் ஆவர்.

3. குப்த வம்சத்தின் அங்கீகரிக்கப்பட்ட கடைசி அரசர் விஷ்ணு குப்தர்.

4. குப்தர்கள் தெய்வீக உரிமைக் கோட்பாட்டை நடைமுறைப் படுத்தினர்.

5. குப்தர்கள் காலத்தில் சுரங்கத் தொழிலும், உலோகத் தொழிலும் செழித்தோங்கின.

6. நான்குவர்ண முறையைப் பின்பற்றிய குப்தர் சமுதா யம் தந்தை வழிச் சமூகமாக இருந்தது.

7. வேத மதமும் வேதச்சடங்குகளும் மீண்டும் நடை முறைக்கு வந்தன.

8. கட்டுமானக் கோவில்களை முதலில் கட்டியவர்கள் குப்தர்களே. அது முந்தைய பாறைக் குடைவரைக் கோவில்களிலிருந்து பரிணாமம் அடைந்ததாகும்.

9. ஆரியபட்டர் , வராக மிகிரர், பிரம்ம குப்தர் ஆகியோர் அக்காலத்தின் தலை சிறந்த வானியல் மற்றும் கணித அறிஞர்களாவர்.

10. ஹர்ஷர், வர்த்தன வம்சத்தின் மிகச் சிறந்த அரசர் ஆவார் . அவர் பேரரசரானது வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்வாகும்.

11. ஒரு கலைஞராக, நாடக ஆசிரியராக ஹர்ஷர் கலை , இலக்கியங்களின் வளர்ச்சிக்குப் பங்களிப்புச் செய்துள்ளார் .

12. யுவான் சுவாங் நாளந்தா பல்கலைக்கழகத்திற்கு வருகை புரிந்தார்அவருடைய பயணக் குறிப்புகள் ஹர்ஷரின் ஆட்சிக் காலத்தைய இந்தியாவின் நிலைகளைப் புரிந்து கொள்ளப் பயன்படுகின்றன.

13.  ஹர்ஷர் பௌத்த மதத்தைத் தீவிரமாகப் பின்பற்றினாலும் வேத மதத்தையும் வளர்த்தார்.

14. முதலாம் சந்திரகுப்தர் , கான்ஸ்டா ண்டிநோபிள் நகரை உருவாக்கிய ரோமானியப் பேரரசர் மகாகான்ஸ்டன்டைனின் சமகாலத்தவர் ஆவார்.

15. ஹர்ஷரின் காலப்பகுதி சீனாவின் தாங் அரசவம்ச த்தின் தொடக்க காலப் பகுதியோ டு இணைந்து செல்கிறது. சீனர்களின் தலைநகரான சியான் (Xi-an) மாபெரும் கலை மற்றும் கல்விக்கான மையமாகத் திகழ்ந்தது.


சரியான விடையை த் தேர்ந்தெ டுத்து எழுதுக

1. குப்த வம்சத்தை நிறுவியவர் _______________ ஆவார்.

            ) முதலாம் சந்திரகுப்தர்                            ) ஸ்ரீ குப்தர்

            ) விஷ்ணுகோபர்                                           ) விஷ்ணுகுப்தர்

2. பிரயாகை மெய் கீர்த்தியை இயற்றியவர் ஆவார்.

            ) காளிதாசர்                                                     ) அமரசிம்மர்

            ) ஹரிசேனர்                                                    ) தன்வந்திரி

3. சந்திரகுப்தரால் நிறுவப்பட்ட ஒற்றை இரும்புத் தூண் ________________ என்ற இடத்தில் உள்ள து.

            ) மெக்ராலி       ) பிதாரி              ) கத்வா               ) மதுரா

4. அறுவை ச் சிகிச்சைச் செயல்முறை குறித்து விளக்கிய முதல் இந்தியர்

            ) சரகர்                 ) சுஸ்ருதர்       ) தன்வந்திரி    ) அக்னிவாசர்

5. வங்காளத்தின் கௌட அரசர்

            ) சசாங்கர்                                             ) மைத்திரகர்

            ) ராஜவர்த்தனர்                                  ) இரண்டா ம் புலிகேசி.


கோடிட்ட இடங்களை நிரப்புக

 

1. இலங்கை அரசர் _______________ சமுத்திர குப்தரின் சம காலத்தவர் ஆவார்.

2. இரண்டா ம் சந்திரகுப்தரின் ஆட்சியின் போது சீனாவைச் சேர்ந்த பௌத்தத் துறவி _______________ இந்தியாவிற்கு வந்தார்.

3. _________ படையெடுப்பு குப்தர்களின் வீழ்ச்சிக்கு வழிகோலியது.

4. ___________ அரசாங்கத்தின் முக்கிய வருவாயாக இருந்தது.

5. ___________ குப்தர்களின் அலுவலக மொழி.

6. ___________ பல்லவ அரசர் சமுத்திர குப்தரால் தோற்கடிக்கப்பட்டார்.

7. வர்த்தன அரச வம்சத்தின் புகழ்பெற்ற அரசர் ____________ ஆவார்.

8. ஹர்ஷர் தலை நகரை _____________ லிருந்து கன்னோசிக்கு மாற்றினார்

ANSWERS:

1. ஸ்ரீ மேகவர்ணன்

2. சீன பயணி பாகியான்

3. ஹூணர்கள்

4. நிலவரி

5. சமஸ்கிருதம் அல்லது வடமொழி

6. பல்லவ மன்னன் விஷ்ணுகோபன்

7. ஹர்ஷவர்தனர்

8. தானேஸ்வரம்

 

சரியா / தவறா

1. தன்வந்திரி மருத்துவத்துறையில் ஒரு புகழ்பெற்ற அறிஞராக திகழ்ந்தார்.

2. குப்தர்களின் கா லத்தில் கட்ட ப்பட்ட கட்டுமா னக் கோ வில்கள் இந்தோ - ஆரிய பாணியை ஒத்துள்ள.

3. குப்தர்களின் ஆட்சிக்கா லத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இல்லை.

4. ஹர்ஷர் ஹீனயான பௌத்த பிரிவைச் சேர்ந்தவர்.

5. ஹர்ஷர் அவருடை மதசகிப்புத் தன்மை யின்மைக்காகப் பெயர் பெற்றவர்.

ANSWERS:

1. சரி

2. தவறு. குப்தர்கள் கால கட்டடக்கலை திராவிட பாணி என்று அழைக்கப்படுகிறது.

3. தவறு. குப்தர்கள் ஆட்சி காலத்தில் உடன்கட்டை ஏறும் பழக்கம் இருந்தது.

4. தவறு. ஹர்ஷர் மகாயான பௌத்த சமயத்தை பின்பற்றினார்.

5. தவறு. ஹர்ஷன் மத சகிப்புத்தன்மை உடையவர். அவர் பௌத்த மற்றும் வேத சமயத்தை ஆதரித்தார்.

உயர் சிந்தனை வினாக்கள்

1. குப்த அரசர்கள் வெளியிட்ட தங்க நாணயங்கள் சுட்டிக்காட்டுவது.

) நாட்டில் தங்கச் சுரங்கங்கள் இருந்ததை

) தங்க வேலை செய்யும் திறனை மக்கள் பெற்றிருந்ததை

) அரசாட்சி செழிப்பாக இருந்ததை

) மன்னர்களின் ஆடம்பர இயல்பை

2. பண்டைய புகழும்மிக்க அஜந்தாவிலுள்ள ஓவியங்கள் எவற்றின் மீது வரையப்பட்டுள்ளன?

) குகைச் சுவர்களில்

) கோவில்களின் விதானங்களில்

) பாறைகளில்

) பாப்பிரஸ் இலைகளில்

3. குப்தர்களின் காலம் எதனால் நினைவில் கொள்ளப்படுகிறது.

) கலை , இலக்கியத்துறைகளில் ஏற்பட்ட மறுமலர்ச்சி

) தென்னிந்தியப் படையெழுச்சி

) ஹூணர்களின் படையெடுப்பு

) மத சகிப்புத்தன்மை

கலைச்சொற்கள்ளில்

1.    பொறிக்கப்பட்ட (செதுக்கிய) - engraved - carved/inscribed

2.    முகஸ்துதி - flattered - lavish insincere praise and compliments upon (someone) especially

3.    to further one’s own interest

4.    சரிவு - Collapse - fall

5.    பரிதாபகரமான - Pathetic - pitiful

6.    பின்பற்றப்பட்ட - adhered to - abide by, bound by

7.    மேய்ச்சல்நிலம் - pastoral land - land or farm used for grazing cattle

8.    சித்தரிக்கப்பட்டுள்ள து - Portrayed - depicted in a work of art or literature

9.    பாழடைந்த - Desolated - made unfit for habitation


PDF MATERIALS   CLICK HERECLICK HERE


Post a Comment

0 Comments