குடிமக்களும் குடியுரிமையும்
ஒரு நாட்டின் அரசாங்கத்தை பற்றியும் மக்களின் உரிமைகள் மற்றும் கடமைகள் பற்றியும் படிக்கும் இயல் குடிமை இயல் ஆகும். குடிமகன் என்ற சொல் சிவிஸ் என்ற லத்தின் வார்த்தையிலிருந்து பெறப்பட்டது. இதன் பொருள் பண்டைய ரோமாபுரியில் இருந்த நகர நாடுகளில் குடியிருப்பாளர் என்பதாகும்.நகர நாடுகள் அமைப்புகள் மறைந்த பின்னர் இச்சொல் நாடுகளின் உறுப்பினர் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டது. ஒரு நாட்டின் குடிமக்கள் அனைத்து விதமான குடியியல், அரசியல் உரிமைகளை உடையவர்கள் ஆவர்.
குடிமகனும் குடியுரிமையும்
ஒரு அரசால் வழங்கப்பட்ட சலுகைகளையும் உரிமைகளையும் அனுபவித்து வரும் அதே வேளையில் நாட்டின் சட்டங்களை மதித்து நடப்பவரும் அவருக்கான கடமைகளை நிறைவேற்றுவரும் ஒரு நாட்டின் குடிமகன் ஆவர். ஒரு குடிமகன் அவர் விரும்பும் காலம் வரையில் அந்நாட்டில் சட்டப்படியாக வசிக்கும் உரிமையை வழங்குதல் குடியுரிமை எனப்படும்.
குடியுரிமையின் வகைகள்
1. இயற்கை குடியுரிமை
- இது பிறப்பால் இயற்கையாக பெறக்கூடிய உரிமையாகும்.
2. இயல்பு குடியுரிமை
- இயல்பாக விண்ணப்பித்து பெருங்குடி உரிமை ஆகும்.
இந்திய குடியுரிமை சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு 1955. இந்திய குடிமகன் தனது உரிமையை பெறுதல் மற்றும் நீக்குதல் பற்றி இச்சட்டம் குறிப்பிடுகிறது.
குடியுரிமை பெறுதல்
இந்திய குடியுரிமை சட்டம் 1950 இன் படி இந்தியாவில் குடியுரிமை பெறுவதற்கான வழிமுறைகள் 5.
1. பிறப்பால் குடியுரிமை பெறுதல்
- 1950 ஜனவரி 26 முதல் 1987 ஜூலை வரை இந்தியாவில் பிறந்த குழந்தைகளின் பெற்றோர் எந்த நாட்டவராக இருப்பினும் அவர்கள் பிறப்பால் குடியுரிமை பெறுகின்றனர்.
- 1987 ஜூலை 1 மற்றும் அதற்குப்பின் இந்தியாவில் பிறக்கும் குழந்தையின் பெற்றோரில் ஒருவர் அச்சமயத்தில் இந்திய குடிமகனாக இருத்தல் வேண்டும்.
- 2004 டிசம்பர் 3 மற்றும் அதற்குப்பின் இந்தியாவில் பிறந்தவர்கள் பிறப்பால் குடியுரிமை பெறுகின்றனர். அல்லது பெற்றோர்களில் ஒருவர் இந்தியக் குடிமகனாகவும் மற்றொருவன் சட்டவிரோதமாக இந்தியாவிற்குள் இடம் பெயர்ந்தவராக இல்லாமலிருந்தால் குடியுரிமை பெறுகின்றனர்.
2. வம்சம் வலியால் குடியுரிமை பெறுதல்
- 1950 ஜனவரி 26 முதல் 1992 டிசம்பர் 10 க்கு முன்னர் வெளிநாட்டில் பிறந்திருந்தாலும் அவருடைய தந்தை இந்திய குடிமகனாக இருக்கும் பட்சத்தில் அவர் வம்சாவளி மூலம் இந்திய குடியுரிமை பெறுகிறார்.
- 1992 டிசம்பர் 10 மற்றும் அதற்குப் பின்னர் வெளிநாட்டில் பிறந்தவர்களின் பெற்றோரில் எவரேனும் ஒருவர் அச்சமயத்தில் இந்திய குடிமகனாக இருந்தால் அவர் இந்தியக் குடியுரிமையை பெறுகிறார்.
- 2004 டிசம்பர் மூன்றாம் நாள் முதல் வெளிநாட்டில் பிறந்தவர்கள் அவர்களுடைய பிறப்பினை ஒரு வருடத்திற்குள் இந்திய தூதரகத்தில் பதிவு செய்யவில்லை எனில் இந்திய வம்சாவளி குடிமகனாக முடியாது.
3. பதிவு செய்தல் மூலம் குடியுரிமை பெறுதல்
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஒருவர் எந்த ஒரு நாட்டில் வசித்தாலும் அல்லது பிரிக்கப்படாத இந்தியாவிற்கு வெளிப்பகுதியில் வசிப்பவராக இருந்தால் பதிவு செய்ததின் மூலம் குடியுரிமை பெறலாம். இந்திய குடிமகனை திருமணம் செய்த ஒருவர் பதிவின் மூலம் விண்ணப்பிக்கும் முன்னர் ஏழு ஆண்டுகள் இந்தியாவில் வசித்துவராக இருக்க வேண்டும்.
4. இயல்பு குடியுரிமை
ஒருவர் விண்ணப்பத்தின் மூலம் மத்திய அரசு அவருக்கு இயல்புகுடியுரிமைக்கான சான்றிதழை வழங்கும். வெளிநாட்டு குடியுரிமை ஒருவர் இழக்கும் பட்சத்தில் அவருக்கு இயல்பு குடி உரிமை வழங்கப்படுகிறது. எந்த ஒரு நாட்டிலும் குடிமகனாக இல்லாத ஒரு இந்தியர் வசிக்கும் நாட்டின் குடிமகன் ஆவதை தடுக்கும் பொருட்டு இயல்பு குடியுரிமை வழங்கப்படுகிறது.
ஒருவர் இந்தியாவில் வசிக்கும் பட்சத்தில் அல்லது இந்திய அரசு பணியில் இருக்கும் பட்சத்தில் அல்லது ஆண்டு முழுவதும் இந்தியாவில் தங்கி இருக்கும் பட்சத்தில் குடியுரிமை பெற முடியும். நல்ல பண்புகளையும் இந்திய அரசியலமைப்பின் எட்டாவது அட்டவணையில் குறிப்பிட்டுள்ள ஏதேனும் ஒரு மொழியில் போதிய அறிவினையும் பெற்ற ஒருவர் இயல்பு குடியுரிமை பெற தகுதி உடையவர். தற்போது எட்டாவது அட்டவணையில் உள்ள மொழிகள் 22.
5. பிரதேசங்கள் இணைத்தல் மூலம் குடியுரிமை பெறுதல்
எந்த ஒரு வெளிநாட்டு பகுதியும் இந்தியாவுடன் இணைக்கும் போது இந்திய அரசு அப்பகுதி மக்களை இந்திய குடிமக்களாக ஏற்றுக்கொள்கிறது. அந்த நாளிலிருந்து அவர்கள் இந்திய குடிமகனாக மாறுகின்றனர். உதாரணமாக பாண்டிச்சேரி 1962 ல் இந்தியாவுடன் இணைந்த போது அப்பகுதி மக்களுக்கு இந்திய குடியுரிமை வழங்கப்பட்டது.
இந்திய குடியுரிமை இழத்தல்
இந்தியாவில் குடியுரிமையை இழக்கும் வழிகள் 3. அரசியலமைப்பு சட்டத்தின் இரண்டாவது பகுதியில் 5 முதல் 11 வரையிலான சரத்துகள் இதைப்பற்றி குறிப்பிடுகின்றன.
1. குடியுரிமை துரத்தல்
ஒருவர் வெளிநாட்டு குடியுரிமை பெறும் பட்சத்தில் அவரின் இந்திய குடியுரிமை இந்திய அரசால் கைவிடப்படுகிறது.
2. குடியுரிமை முடிவுக்கு வருதல் (சட்டத்தின்படி நடைபெறுதல்)
ஓர் இந்திய குடிமகன் தானாக முன்வந்து வெளிநாட்டில் குடியுரிமை பெறும் பட்சத்தில் அவரது இந்திய குடியுரிமை தானாகவே முடக்கப்படுகிறது.
3. குடியுரிமை மறுத்தல் ( கட்டாயமாக முடிவுக்கு வருதல்)
மோசடி தவறான பிரதிநிதித்துவம் அல்லது அரசியல் அமைப்பு சட்டத்திற்கு புறம்பாக செயல்படுதல் ஆகியவற்றின் மூலம் இந்திய குடியுரிமை பெரும் ஒருவரின் குடியுரிமை இந்திய அரசு ஒரு ஆணை மூலம் முடக்கப்படுகிறது.
இந்தியா அரசியலமைப்பு FREE PDF CLICK HERE
1 Comments
Can u send me English notes
ReplyDeleteSALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM