தேசிய மனித உரிமைகள் ஆணையம்
தேசிய மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் 1993 இல் இயற்றப்பட்டது
இச்சட்டம் 28.9.1993 இல் நடைமுறைக்கு வந்தது
தேசிய மனித உரிமைகள் ஆணையம் அக்டோபர் 12, 1993 இல் ஏற்படுத்தப்பட்டது
தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமையிடம் டெல்லி
தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு சட்டபூர்வமான அமைப்பு ஆகும்
ஒரு தலைவர் நான்கு உறுப்பினர்களை கொண்ட அமைப்பாக செயல்படுகிறது
தேசிய மனித உரிமை ஆணையத்தின் தலைவரை பரிந்துரை செய்தவர்கள் ஆறு பேர் கொண்ட குழு.
- பிரதமர்
- மக்களவை சபாநாயகர்
- ராஜ சபா துணை தலைவர்
- மக்களவை எதிர்க்கட்சித் தலைவர்
- ராஜ சபை எதிர்க்கட்சித் தலைவர்கள்
- மத்திய உள்துறை அமைச்சர்
தேசிய மனித உரிமை ஆணையர் மற்றும் உறுப்பினர்களின் தகுதிகள்
தலைவர் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்க வேண்டும்
முதல் உறுப்பினர் உச்சநீதிமன்ற நீதிபதியாக இருப்பவர் அல்லது இருந்தவர்
இரண்டாவது உறுப்பினர் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர் அல்லது இருப்பவர்
3 மற்றும் 4 வது உறுப்பினர்கள் மனித உரிமைகள் தொடர்பாக நடைமுறை அறிவு அனுபவம் பெற்றவர்களாக இருக்க வேண்டும்
தலைவர் மற்றும் உறுப்பினர்களின் சம்பளம் மற்றும் படிகளை மத்திய அரசு நிர்ணயிக்கும்
தலைவர் மற்றும் உறுப்பினர்கள் பதவி காலம் : 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை. இவற்றில் எது முன்னர் வருகிறதோ அதன்படி ஓய்வு பெறுவர்.
தலைவர் மற்றும் உறுப்பினர்களைப் பதவி நீக்கம் செய்பவர் குடியரசு தலைவர்
தேசிய மனித உரிமை ஆணையம் சிவில் நீதிமன்றத்துக்கு இணையான தகுதியைப் பெற்றுள்ளது
தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஆண்டு அறிக்கையை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிக்கும்.
குடியரசுத் தலைவர் மனித உரிமைகள் ஆணையத்தின் ஆண்டு அறிக்கையை பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பார்
அறிக்கை அளிக்க கால அளவு ஒரு மாதம்
தேசிய மனித உரிமை ஆணையத்தின் தற்போதைய தலைவர் K.G. பாலகிருஷ்ணன்
தேசிய மனித உரிமை ஆணையத்தின் முதல் தலைவர் ரங்கநாத் மிஸ்ரா
தமிழ்நாடு மனித உரிமைகள் ஆணையம்
மாநிலங்களில் மனித உரிமைகள் ஆணையம் ஏற்படுத்தப்பட்ட ஆண்டு 1996
இதுவரை 23 மாநிலங்களில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்டுள்ளது
1997 இல் தமிழ்நாட்டில் மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்டது
தமிழக மனித உரிமை ஆணையத்தின் தலைமையிடம் உள்ள இடம் சென்னை
மாநில மனித உரிமைகள் ஆணையம் ஒரு தலைவர் இரண்டு உறுப்பினர்களை கொண்ட அமைப்பாகும்
மனித உரிமைகள் பாதுகாப்பு திருத்தச் சட்டம் 2006 ன் படி உறுப்பினர்களின் எண்ணிக்கை ஐந்திலிருந்து மூன்றாக குறைக்கப்பட்டது
மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்களை பரிந்துரை செய்தவர்கள்
- முதலமைச்சர்
- சட்டப்பேரவை எதிர்க்கட்சித் தலைவர்
மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் உறுப்பினர்களை நினைப்பவர் ஆளுநர்
தகுதிகள்
தலைவர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருக்க வேண்டும்
முதல் உறுப்பினர் உயர் நீதிமன்ற நீதிபதியாக இருந்தவர் அல்லது இருப்பவர் அல்லது ஏழு ஆண்டுகள் மாவட்ட நீதிபதியாக இருந்தவர் அல்லது இருப்பவர்
இரண்டாவது உறுப்பினர் மனித உரிமைகள் தொடர்பான நடைமுறை அறிவு மற்றும் அனுபவம் பெற்றவராக இருக்க வேண்டும்
மாநில மனித உரிமை ஆணைய தலைவர் மற்றும் உறுப்பினர்களின் பதவிக்காலம் 5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை
மாநில மனித உரிமை ஆணையத்தின் தலைவர் மறு நியமனத்திற்கு தகுதியற்றவர்
உறுப்பினர்கள் மீண்டும் ஐந்தாண்டுகளுக்கு மறு நியமனம் செய்யப்படலாம்
தலைவர் மற்றும் உறுப்பினர்கள் சம்பளம் மற்றும் பணிகளை மாநில அரசு நிர்ணயிக்கும்
மாநில மனித உரிமைகள் ஆணைய உறுப்பினர்களை பதவி நீக்கம் செய்பவர் குடியரசுத் தலைவர்
மாநில மனித உரிமைகள் ஆணையம் ஆண்டறிக்கையை ஆளுநரிடம் சமர்ப்பிக்கிறது
ஆளுநர் ஆண்டறிக்கை சட்டமன்றத்தில் சமர்ப்பிப்பார்
தேசிய மற்றும் மாநில மனித உரிமை ஆணையங்கள் அரசியலமைப்பின் பகுதி 2 மற்றும் பகுதி 3 மனித உரிமைகள் மீறப்பட்டால் விசாரிக்கும்.
தேசிய மனித உரிமைகள் ஆணையம் முக்கிய வினா விடைகள்
1. தேசிய மனித உரிமைகள் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்ட ஆண்டு
1993
2. தேசிய மனித உரிமைகள் ஆணையம் உருவாக்கப்பட்ட நாள்
அக்டோபர் 12 1993
3. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைமை இடம் எங்கு அமைந்துள்ளது
புது டெல்லி
4. தேசிய மனித உரிமைகள் ஆணையம் ஒரு தலைவர் மற்றும் எத்தனை உறுப்பினர்களை கொண்ட அமைப்பாக செயல்படுகிறது
4 உறுப்பினர்கள்
5. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரை பரிந்துரை செய்பவர்கள் எத்தனை பேர்
6
6. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரின் பதவிக்காலம்
5 ஆண்டுகள் அல்லது 70 வயது வரை
7. தேசிய மனித உரிமைகள் ஆணையம் எந்த நீதிமன்றத்திற்கு இணையான தகுதியைப் பெற்றுள்ளது
சிவில் நீதிமன்றம்
8. தேசிய மனித உரிமைகள் ஆணையர் ஆண்டறிக்கை யாரிடம் வழங்குவார்
குடியரசுத் தலைவர்
9. தேசிய மனித உரிமை ஆணையத்தின் தற்போதைய தலைவர்
கே.ஜி பாலகிருஷ்ணன்
10. தேசிய மனித உரிமைகள் ஆணையத்தின் முதல் தலைவராக இருந்தவர் யார்
ரங்கநாத் மிஸ்ரா
11. இதுவரை எத்தனை மாநிலங்கள் மாநில மனித உரிமைகள் ஆணையத்தை தொடங்கியுள்ளன
23
12. மாநில மனித உரிமைகள் ஆணையம் தொடங்கப்பட்ட ஆண்டு
1997
13. மாநில மனித உரிமைகள் ஆணையத்தின் தலைவரை நியமிப்பவர் யார்
ஆளுநர்
INDIAN POLITY FULL TEST - 1 PDF CLICK HERE CLICK HERE
2 Comments
Very useful sir THANK YOU
ReplyDeleteநான் உறுப்பினராவது எப்படிங்க 9976294858
ReplyDeleteSALEM COACHING CENTRE
VOC NAGAR
JUNCTION
SALEM - 636 OO5
PH: 9488908009; 8144760402
TNPSC, BEO, TET, RRB, SI, POLICE, AGRI & FOREST EXAM